Published:Updated:

காந்திஜி முதல் சோனியாஜி வரை!

காந்திஜி முதல் சோனியாஜி வரை!

காந்திஜி முதல் சோனியாஜி வரை!

காந்திஜி முதல் சோனியாஜி வரை!

Published:Updated:
##~##

சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால், ஆரஞ்சு மிட்டாயும் தேசியக் கொடியும்தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும். ஆனால், பெரம்பலூர் - அரியலூர் மாவட்டக்காரர் களுக்கோ நினைவில் வருபவர், தியாகி குருசாமி நாயுடு!

 பெரம்பலூரின் ஒரே டூரிஸ்ட் ஸ்பாட்டான மயிலூத்து அருவி சிலுசிலுக்கும் லாடபுரம் கிராமத்தில் இருக்கிறது தியாகி குருசாமி நாயுடு இல்லம். நான்கு வருடங்களுக்கு முன்பே 'பாலம்’ கல்யாணசுந்தரம் 'தியாகி குருசாமி நாயுடு நூற்றாண்டுச் சிறப்பிதழ்’ பிரசுரித்துவிட்டார். ஆனால், சதம் அடித்த சாயலோ, களைப்போ கொஞ்சமும் இல்லை தியாகித் தாத்தாவிடம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காந்திஜி முதல் சோனியாஜி வரை!

காலை 4 மணிக்கே எழுந்து  இந்த வயதிலும் யோகா செய்கிறார். கண்ணாடி அணியாமல் செய்தித்தாள் வாசிக்கிறார். டி.வி செய்திகளை 'அப்டேட்’ செய்கிறார். எப்போதேனும் தியாகராஜ பாகவதர், பாபநாசம் சிவன் பாடல்களை ரசித்து மகிழ்கிறார். கவளம் உணவை மென்று விழுங்க வெகு நேரம் எடுத்துக்கொள்கிறார். தூயக் கதர் ஆடை, குல்லாய், நெற்றியில் துலங்கும் திருநீறு... அருகில் அமர்ந்து உரையாடுபவருக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் பேச்சு.

''நாலாம் வகுப்போட பள்ளிக்கு முழுக்குப் போட்டு சம்பாதிச்சாக  வேண்டிய குடும்ப நெலமை. 15 வயசுல பெரம்பலூர் பெரியசாமி ரெட்டிங்கிறவர் காந்திஜியைச் சந்திச்ச பரவசமான தருணங்களை என்னிடம்  பகிர்ந்துக்கிட்டார். அதுதான் முதல் பொறி. அப்புறம் மிச்ச காலம் எல்லாம் காந்திஜி காலடியைத் தொடர்வதாகவே மாறிப்போச்சு.'' -வார்தா ஆசிரமத்தில் தேசப் பிதாவுடன் கழித்த நிமிடங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது மேனி சிலிர்க்கிறது குருசாமி நாயுடுவுக்கு.

காந்திஜி முதல் சோனியாஜி வரை!

''இரவு முழுக்க முழிச்சிருந்து நேருஜியின் சுதந்திரப் பிரகடன உரையைக் கேட்டதும் இனிப்புகளைப் பரிமாறியபடி ஊர் ஊராப் போய் கொடி ஏற்றியதும் இன்னும் நெஞ்சுல இருக்கு. காந்திஜியின் பாதம் தொட்டுத் தரிசிச்ச கணம் வாழ்க்கையில மறக்க முடியாதது. நேருஜி யுடன் ஒருநாள் முழுக்கச் செலவிட்டு இருக் கேன்''  என்கிற நாயுடுவின் வீட்டு வரவேற்பறை யில் காந்திஜி தொடங்கி சோனியாஜி வரை உடன் இருக்கும் புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன.

காந்திஜி முதல் சோனியாஜி வரை!

நிகழ் கால அரசியல் குறித்து கருத்து கேட்டால் அவருடைய உடம்பில் அதிர்வலைகள்.  அதுவரை இருந்த கம்பீரத்தைக் கழற்றிவைத்துவிட்டு ஆவேச அலை அடிக்கிறது பேச்சில். ''அந்தக் காலத்துல எங்களைப்போல விடுதலைப் போராட்ட வீரர்கள்தான் ஊருக்குள்ள ஹீரோக்கள். அப்போ எனக்குப் பொண்ணு கொடுக்க ஊருக்குள்ள ஏகப் போட்டி. ஆனா, என்னோட  நாயகன் காமராஜர் கல்யாணம் பண்ணிக்காததால், எனக்கும் கல்யாணம் செஞ்சுக்கத் தோணலை. தியாகி பென்ஷன் வருது. சுத்துவட்டாரத்துல எந்தப் பொது நிகழ்ச்சியா இருந்தாலும், 'ஐயா வாங்க’ன்னு அழைக்கிறாங்க. எங்கிருந்தோ யார், யாரோ வந்து நலம் விசாரிச்சுட்டுப் போறாங்க. நடப்பு அரசியலை மறந்துட்டா, பொற்கால இந்தியாவில்தான் இருக்கேன்கிற பெருமை இருக்கு'' - முகச் சுருக்கங்கள் பெருமையாக விரியச் சிரிக்கிறார்!

- எஸ்.சுமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism