Published:Updated:

'செம்மண்ணு சிங்காரியே-உன்னை கரிசல் மண்ணு கருங்காலி என்ன செஞ்சான்?'

'செம்மண்ணு சிங்காரியே-உன்னை கரிசல் மண்ணு கருங்காலி என்ன செஞ்சான்?'

'செம்மண்ணு சிங்காரியே-உன்னை கரிசல் மண்ணு கருங்காலி என்ன செஞ்சான்?'

'செம்மண்ணு சிங்காரியே-உன்னை கரிசல் மண்ணு கருங்காலி என்ன செஞ்சான்?'

Published:Updated:
##~##

விதைகளைத் தூவும்போதே இசையையும் தூவத் தொடங்குபவை நடவுப் பாட்டுகள். இவை வெறுமனே வயல் பாட்டுகள் அல்ல; எளிய மனிதர்கள் வாழ்வின் வெளிப்பாடுகள்!

 தஞ்சாவூர் மாவட்டம், வளப்பக்குடி பெண்கள் வயல் பாட்டில் நிபுணர்கள். ஒரு மத்தியான வேளையில் வயல் பாட்டு கேட்க வளப்பக்குடிக்குக் கிளம்பினோம்...

''ஏலேலே ஏலேலோ...
ஏலாலே ஏலேலோ !
வாடாத பயிரப் பாரு
தளராத தளிரப் பாரு                                                
வாடிய முகத்தவளே...    
தளர்ந்த  தலைமகளே...
கலங்கிய கண்மணியே...
கலங்காத நீரைப் பாரு !                                                
ஏலேலே ஏலேலோ...    
ஏலாலே ஏலேலோ!                                                  
நீ சிரிச்சாலே சாஞ்சுடுவான்
சிடுமூஞ்சி புருசன் அவன்...                                            
நெருப்பா கொதிக்குறவன் -நீ
நெருங்கினாலே குளிர்ந்துடுவான் !                    
கைய ஓங்கினவன் - நீ
கண்ணசச்சாலே அடங்கிடுவான்!                                  
ஏலேலே  ஏலேலோ...
ஏலாலே ஏலேலோ! ''

'செம்மண்ணு சிங்காரியே-உன்னை கரிசல் மண்ணு கருங்காலி என்ன செஞ்சான்?'

ஊரை நெருங்கும்போதே கிறங்க வைக்கிறது கிரேசியின் குரல்!

''வயல்ல இறங்கிட்டாலே சந்தமும் பாட்டும் தானா வந்துடும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப் பாட்டு உருவாக்குவோம். தொடர்ச்சியா பல மணி நேரம்கூட நிறுத்தாம பாடிக்கிட்டு இருப்போம். யாராவது ஒருத்தர் பாட, மத்தவங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பின்தொடர்ந்து பாடுவோம். இடையில வார்த்தைத் தடுமாறினா... அந்தத் தடுமாற்றம் வெளியில தெரியாத அள வுக்கு, அதோடு சேர்ந்த மாதிரி இன்னொருத்தர் பாடிச் சமாளிச்சிடுவோம்'' என்கிறார் கிரேஸி.

களைப்பு தெரியாமல் இருக்கத்தான் இவர் கள் பாடுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கவலை, கோபதாபம் என அனைத்தையுமே மறக்கத்தான் பாடுகிறோம் என்கிறார்கள் இவர் கள்.

''வீட்டுல ஆயிரம் பிரச்னைகள் இருக்கும். உடைஞ்ச மனசோட வயக்காட்டு வேலைக்கு வருவோம். வரப்புல நடந்து வரும்போதும் அவங்கவங்க பிரச்னையைச் சொல்லிப் புலம் பிக்கிட்டே வருவோம். அதுக்கு ஏத்த மாதிரி மனசுக்குத் தைரியம் கொடுக்குற மாதிரி சூசக மான வார்த்தைகள் போட்டு பாடுவோம். கல் யாண வயசுள்ள புள்ளைங்களும் வயக்காட்டு வேலைக்கு வரும்ங்க. அதுங்கள கிண்டலடிச்சும் பாடுவோம். எங்க முதலாளிகளையும் விட்டு வைக்க மாட்டோம். இப்ப இந்தப் பாட்டக் கேளுங்களேன்'' எனக் குழந்தை தெரசு பாட, மற்றவர்கள் பின்தொடர்ந்து பாடுகிறார்கள்.  

'செம்மண்ணு சிங்காரியே-உன்னை கரிசல் மண்ணு கருங்காலி என்ன செஞ்சான்?'

''வர்றார் அய்யா,
துரை வர்றாரய்யா...
வருத்தமாய் வேலை வாங்க  வர்றாரய்யா...  
வர்றார் அய்யா
துரை வர்றாரய்யா
வேட்டி பளபளக்க வர்றாரய்யா...  
வர்றார் அய்யா,
துரை வர்றாரய்யா...
தொந்தி பளபளக்க வர்றாரய்யா...  

- இப்படி இன்னும்  நக்கல் வார்த்தைகளைப் போட்டு ராகமா பாடுவோம். ஒண்ணும் சொல் லிக்க முடியாம சிரிச்சுக்கிட்டே முதலாளிங்க நகர்ந்து போயிடுவாங்க!''

மழை, பனி, காற்று, வெயில் என அந்தந்தக் காலத்துக்கு ஏற்றவாறு மாறுகிறது நடவுப் பாட்டு. இரு அணிகளாகப் பிரிந்து, போட்டி பாட்டும் பாடப்படுகிறது. பக்கத்து வயல்களில் வேலை செய்யும் பெண்களோடும் சமயத்தில் இந்தப் போட்டி நடப்பதும் உண்டாம். கணவன்-மனைவி மோதலில் மண், மரம், பூ, பறவைகள் எல்லாம் வந்து போகின் றன.

''செம்மண்ணு சிங்காரியே - உன்னை
கரிசல் மண்ணு கருங்காலி என்ன செஞ்சான்?
கருவேலம் உடைச்ச கையால - இந்த
முல்லைப் பூவை என்ன செஞ்சான் ?
காளை மாடு புடிச்ச பய - என்
பைங்கிளிய என்ன செஞ்சான்?''  

'செம்மண்ணு சிங்காரியே-உன்னை கரிசல் மண்ணு கருங்காலி என்ன செஞ்சான்?'

இதுபோல் இன்னும் ஏராளமான பாடல்கள்.  ஆனால், இவை எதுவுமே எழுதி வைக்கப்படவில்லை. கேட்டால், ''கற்பனைக்குப் பஞ்சமில்ல... ஏன் எழுதி வைக்கணும். நினைச்ச உடனேயே ஒரு பாட்டெடுத்து விட முடியுமே!'' என்கிறார் விக்டோரியா.  

''பூமிக்கு கீழாலோ...
பூவூ படர்ந்திருக்கு
பூவுக்குப் பாதையிருக்கு...
நான் பொண்னு போக பாதையில்ல  
பூமிக்கு கீழாலோ...
மருவு படர்ந்திருக்கு
மருவுக்குப் பாதையிருக்கு...
நான் மக போக பாதையில்ல!''  

பாடிக்கொண்டே வரப்பில் அவர் நடக்க, மற்ற பெண்களும் சேர்ந்து குரல் எழுப்பி பாடிச் செல்கிறார் கள். காற்றில் கலக்கிறது கருத்த இசை!  

- கு.ராமகிருஷ்ணன் படங்கள்: கே.குணசீலன்