Published:Updated:

சிங்கப்பூருக்குப் போகலாமா?

##~##

''சிங்கப்பூருக்குப் போறோம்!'' சொன்ன தும் ஏக குஷியாகக் கிளம்பினார் போட்டோ கிராஃபர். மோட்டார் சைக்கிளை அல்லித்துறை ரோட்டில் திருப்ப, ''ஹேய்... ஏர்போர்ட் புதுக்கோட்டை ரோட்டுலல இருக்கு!'' என்று அவர் பதற, பைக்கை இன்னும் விரட்டி 'சிங்கப்பூரு’க்குள் நுழைந்தேன்.

''100 வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பகுதி முழுக்க சிங்கம் புஞ்சையார் என்பவர் கட்டுப் பாட்டில் இருந்துச்சு. தன் காலத்துக்குப் பிறகு, அவரோட சொத்தை எல்லா மக்களுக்கும் பிரிச்சுக் கொடுக்க முடிவு செஞ்சாரு. அப்பதான் இந்தப் பகுதிக்குப் பேர் வைக்கணும்னு முடிவு பண்ணி, சிங்கம் புஞ்சையார்ங்கிற அவரோட பேரையே மாத்தி 'சிங்கப்பூர்’னு வைச்சார்!'' குறும்பாகச் சிரிக்கிறார்... ஊர் எல்லையில் வர வேற்ற சீனியர் சிட்டிசன் ஒருவர்.

சிங்கப்பூருக்குப் போகலாமா?

எண்ணிப் பார்த்தால் மொத்தம் 50 வீடு களைத் தாண்டாது. முழுவதும் வெட்ட வெளி யாக இருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக விரவிக் கிடக்கின்றன வீடுகள். வயல்வெளி கூறு போடப்பட்டு மனைகள் விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்கின்றன. ஊரில் பலருக்கும் கூலி வேலைதான். ஊரில் ஒரு பெட்டிக் கடைகூட இல்லை. ஆக, ஒரிஜினல் சிங்கப்பூருக்கும் இந்த சிங்கப்பூருக்கும் தம்மாத் துண்டு ஒற்றுமைகூட கிடையாது.  ''இந்த ஊர்ல இருந்து யாரும் அந்த சிங்கப்பூருக்குப் போனதே கிடையாது!'' என்று கூடுதல் தகவல் சொல்லி ஆச்சர்யப் படுத்துகிறார்கள் 'சிங்கப்பூர்’வாசிகள்!

அந்த ஊரைச் சேர்ந்த ஜானகி, ''வெளியூ ருக்குப் போகும்போது எந்த ஊருன்னு கேட்க றவங்ககிட்ட நாங்க, 'சிங்கப்பூர்’னு சொன்னா ஆச்சர்யப்படுவாங்க. ஆனா, 'அப்படியா... எத்தனை வருஷமா அங்கே இருக்கீங்க? பார்த்தா அப்படி தெரியலையே’ன்னு அடுத் தடுத்து கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துடுவாங்க. 'திருச்சி பக்கத்துலேயே சிங்கப்பூர்னு ஓர் ஊர் இருக்கு’ன்னு அவங்களுக்கு விளக்கம் சொல்லிச் சொல்லியே, நாங்க ஓய்ஞ்சு போயிட்டோம்!'' என்று அலுத்துக்கொள்கிறார்.

சிங்கப்பூருக்குப் போகலாமா?

''இங்க வாக்கப்பட்டு வந்த ஒரு பொண் ணோட கதையைச் சொல்றேன் கேளுங்க. வெளியூரைச் சேர்ந்த அந்தப் பொண்ணுகிட்ட, 'மாப்பிள்ளையோட ஊரு சிங்கப்பூரு’ன்னு பொண்ணு பார்க்கப் போகும்போது சொல்லி இருக்காங்க. 'அங்கே எத்தனை வருஷமா இருக் காரு’ன்னு அவங்க கேட்க, 'அவரு பிறந்து வளர்ந்த ஊரே சிங்கப்பூருதான்’னு இவங்க சொல்ல, வித விதமான கனவுல மிதந்திருக்கு அந்த அப்பாவிப் பொண்ணு. கல்யாண நெருக் கத்துலதான் அது எங்க ஊருன்னு தெரிஞ்சிருக்கு. இதுக்கிடையில மாப்பிள்ளையை அந்தப் பொண்ணுக்கு ரொம்பவும் பிடிச்சிப் போனதால, கல்யாணம் ஜாம்ஜாம்னு நடந்து முடிஞ்சிடுச்சு. அப்புறமா தன் வீட்டுக்காரர்கிட்ட அந்தப் பொண்ணு தான் தப்பா புரிஞ்சுகிட்ட விஷயத்தைச் சொல்லி சிரிக்க... 'ஆமா... நீ அம்பானி வீட்டுப் பொண்ணு பாரு. சிங்கப்பூர் மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் கட்டி வைப்பாங்களாக்கும்’னு அவரும் பதிலுக்கு கிண்டலடிச்சு சிரிச்சாராம்!'' என்று தானும் சிரிக்கிறார் புஷ்பலதா.

கதை இத்துடன் முடியவில்லை! சிங்கப் பூருக்குப் போட்டியாக பக்கத்தில் ஒரு நகர் உருவாகி இருக்கிறது. பெயர்: நியூயார்க் நகர்!

- ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்