Published:Updated:

என் ஊர்!

சாலைக் கடை பாப்பா நாடான கதை!

##~##

''சோழர் காலத்தில் பல கிராமங்களை உள்ளடக்கிய பகுதியை 'நாடு’ என்று அழைத் தார்கள். என்னுடைய ஊரான 'சாலைக் கடை’ அந்தக் காலத்தில் 18 கிராமங்களை உள்ளடக்கியது. பின்னாளில் அதுவே பழகி, ஊர்ப் பெயரே பாப்பாநாடு ஆகிவிட்டது!''

பெயர்க் காரணத்தோடு தன்னுடைய ஊர் நினைவுகளைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார் மனித உரி மைச் செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸ்.

''எங்கள் ஊர் ஒரு சாதாரண கிராமம். பாப்பாநாட் டுக்கு என்று பெரிய சரித்திரப் புகழ் பெற்ற பின்னணி எல்லாம் கிடையாது. ஆனால், அந்தக் காலத்திலேயே ஒரு 'காஸ்மோபாலிட்டன்’ கலாசாரத்தைக்கொண்ட ஊராக, பல சமூகத்தினரும் கூடி வாழும் ஊராக இது இருந்தது. ஒரு கிராமத்துக்கே உரிய சுவாரஸ்யமான, எளிய மனிதர்கள் பலர் இங்கு இருந்தார்கள்.

என் ஊர்!

என் தந்தை அந்தோணிசாமி, தீவிரமான கம்யூனிஸ்ட். மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு, என் தாத்தா-பாட்டி ஊரான வெள்ளூருக்கு வந்தார். முறைப் படி விவசாயம் செய்ய அவருக்குத் தெரியவில்லை. ஆகையால், அங்கு நிலத்தை விற்றுவிட்டு, பாப்பாநாட் டில் ஒரு சோடா கம்பெனி ஆரம்பித்து இங்கேயே தங்கிவிட்டார்.

என்னை நான்காம் வகுப்பு வரை வீட்டிலேயேதான் படிக்க வைத்தார் என் தந்தை. ஐந் தாம் வகுப்பில்தான் பாப்பா நாடு அரசுத் தொடக்கப் பள்ளியில் சேர்த்தார்கள். எனக்கு ஆசிரி யராக இருந்த யோகநாதராவ், ராமநாதன், சுப்பிரமணியன் ஆகியோரும் தலைமை ஆசிரி யர் ரத்தினம் வாண்டையாரும் இன்றும் என் நினைவில் வாழ்கி றார்கள். பள்ளிப் பருவத்தை நினைத்தவுடன், எனக்கு நான் நடத்திய கையெழுத்துப் பத்திரிகை நினைவில் வருகிறது. பள்ளி மாணவனாக இருந்தபோதே, நான் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி, தலைமை ஆசிரியரிடம் திட்டு வாங்கி இருக்கிறேன். அந்தப் பள்ளிக்கூடம் இன்றும் வளமையோடு காட்சியளிக்கிறது.

பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில், அந்தக் காலத்தில் மலையாளத்தார் கடை என்று ஒரு சின்ன உணவகம் உண்டு. பள்ளிக்கூட மாணவர் கள் அவ்வளவு பேரும் இடைவேளை நேரத்தில் அங்குதான் வந்து தண்ணீர் குடிப்போம். ஊரில் இருந்த இன்னோர் உணவகம், அப்துல் காசிம் கடை. இரண்டு கடைகளிலும் வயிறார நல்ல சாப்பாடு போடுவார்கள்.

என் ஊர்!

எங்கள் ஊரிலேயே எனக்குப் பிடித்த இடம், கணக்கன் குளம். எங்கள் ஊரின் உயிரோட்ட மான இடம். பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து பஞ்சம் பிழைக்க வருபவர்கள் இந்தக் குளக் கரையில்தான் தங்குவார்கள். குளத்தில் இக்கரைக்கும் அக்கரைக்குமாக நீச்சல் அடித் துப் போய் வருவதுதான் எங்கள் ஊரின் சின்ன வயசுக் கொண்டாட்டம். கரையோரத்தில் ஒரு புளிய மரம் நிற்கும். அதில் ஏறி, கிளையில் இருந்து குளத்தில் குதித்து விளையாடு வோம். குளக்கரையில் விநா யகர் கோயில் உண்டு. திருமேனி அம்மன் கோயிலில் இருந்து அம் மன் ஊர்வலமாக இங்கு வந்துதான், குளத்தில் தெப்பம் ஏறும். அன்றைய தினம் கடைகள், நாடகங்கள் என ஊரே களை கட்டிவிடும். எங்கள் ஊரின் பெரிய கொண்டாட்டம் என் றால் இந்த ஊர்வலம்தான். இன்றும் அந்தக் கோயில், குளம், புளியமரம், திருவிழா  எல்லாமும் இருக்கின்றன.

'பால் டூரிங் டாக்கீஸ்’ - இப்போது இந்த தியேட்டர் இருந்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை. அப்போது எங்கள் ஊர் மக்கள் வாழ் வின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் இது. மண் தரையும் நாற்காலிகளும் காற்றோட்டமான அரங்கமும் என்று அற்புதமான கொட்டகை அது. சிவாஜி படங்களை ஒன்றுவிடாமல் நான் பார்த்தது பால் டூரிங் டாக்கீஸில்தான்.

எங்கள் ஊர் வழியாகச் செல்லும் 'மூன்றரை பஸ்’ எங்களுக்கு மணி காட்டி. இரவு இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு, இந்த பஸ்ஸில் தான் ஊர் திரும்புவோம்.     இந்த பஸ் வந்தால், விடியப் போகிறது எனத் தெரிந்துக் கொள்வோம். பஸ்ஸின் பெயர் 'மணியம்’ !

எனக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தியது பாப்பாநாடு அஞ்சல் நிலையம். 'ஆனந்த விகடன்’ உள்ளிட்ட எல்லாப் புத்தகங்களும் தபால் மூலம் இங்கே வரும். போட்டி போட்டுக்கொண்டு புத்தகம் வாங்குவோம். ஒரு வகையில் தபால்காரர், நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹீரோ!

பாப்பாநாட்டில் என்னால் மறக்க முடியாத இடம் அங்கு உள்ள கல்லறைத் தோட்டம்தான். என் தந்தை யும் தாயும் அங்குதான் புதைக்கப்பட்டு இருக்கிறார்கள்!''

-சி.சுரேஷ், படங்கள்:கே.குணசீலன்

என் ஊர்!
அடுத்த கட்டுரைக்கு