Election bannerElection banner
Published:Updated:

வண்டி கட்டிப் போறோம், வைத்தீஸ்வரனைப் பார்க்க!

வண்டி கட்டிப் போறோம், வைத்தீஸ்வரனைப் பார்க்க!

##~##

ன்றல்ல... இரண்டல்ல... 58 இரட்டை மாட்டு வண்டிகள். வரிசையாக அணிவகுத்து வருகின்றன. காரைக்குடிக்கு அருகே உள்ள கீழச்சீவல்பட்டியில் கிளம்பி ஆறு இரவுகளைக் கடந்து, நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலை வந்து அடைகின்றன. ஆண்டுதோறும் சித்திரை மாதம் தவறாமல் தொடர்கிறது இந்தப் பயணம். 10 ஆண்டுகளாகவோ, 20 ஆண்டு களாகவோ அல்ல; 200 ஆண்டுகளாக!

 ஏன் இந்தப் பயணம்?

''200 வருஷத்துக்கு முன்னால் பி.அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த மு.க.செட்டியார் வம்சத்தில் ஒருவருக்கு தீராத வயிற்று வலி வந்தது. அது தீராத நிலையில் அவரது கனவில் வந்த வைத்தீஸ்வரர், தான் வைத்தீஸ்வரன்கோவிலில் இருப்பதாகவும் தன்னை வந்து வழிபட்டால் உடல் நலம் சரியாகும் என்றும் சொல்ல,  அவரது குடும்பத்தினர் போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் வண்டி கட்டிக்கொண்டு புறப்பட் டனர். சுவாமியைத் தரிசித்ததும் அவரது வயிற்று வலி தீர்ந்து போனதாம்.

வண்டி கட்டிப் போறோம், வைத்தீஸ்வரனைப் பார்க்க!

இதை ஊரில் வந்து மு.க.செட்டியார் சொல்ல, அடுத்தடுத்த வருஷம் ஒவ்வொருவராக சேர்ந்து, கும்பல் பெருகியது. அப்படி ஆரம்பிச்ச இந்த வண்டிப் பயணம் இன்றைக்கு ஆயிரக் கணக்கான பக்தர்களோடுப் பெருகி மிகப் பெரிய ஆன்மிக நடைப்பயணமாக மாறிடுச்சு!'' - முன்கதைச் சுருக்கம் சொன்னார், இந்தப் பயணத்துக்குத் தலைமை ஏற்று வந்த பெரியவர் சாத்தப்பன் செட்டியார்.

செட்டிநாட்டு மக்கள் எங்கே என்ன வேலை யில் இருந்தாலும் தவறாமல் சித்திரை முதல் வாரத்தில் ஊருக்கு வந்து அங்கே இருந்து கிளம்பி, கால்நடையாக வைத்தீஸ்வரன்கோவில் வந்துவிடுகிறார்கள்.

''என் முதல் பையன் நல்லா படிச்சு சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருக்கான். நான் இங்க வர ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நடந்த விஷயம் இது. இப்ப இரண்டாவது பையனுக்கு நல்ல பொண்ணு அமையணும்னு வேண்டி வந்திருக்கிறேன்'' என்கிறார் அழகம்மை.

ஆரம்ப காலத்தில் குறைவான எண்ணிக்கை யில் வண்டியில் வந்தவர்கள் தங்களுக்கு வேண் டிய உணவுப் பொருட்களையும் வழிநடைக்குத் தேவையானவற்றையும் தங்கள் வண்டிகளிலேயே ஏற்றிவந்தனர். பிறகு கூட்டம் அதிகமானதும் தங்களுக்கு உரிய பொருட்களை மட்டும் வண்டியில் ஏற்றி வருகின்றனர். இந்த ஆண்டு வந்த 58 வண்டிகளுக்கும் 12 காவல்காரர்கள் கூட வந்தனர். இவர்கள் சொல்வதுதான் அத் தனை வண்டிக்காரர்களுக்கும் வேதவாக்கு.

வண்டி கட்டிப் போறோம், வைத்தீஸ்வரனைப் பார்க்க!

கீழச்சீவல்பட்டி, பி.அழகாபுரி மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களில் மாட்டு வண்டி யின் உபயோகம் முடிந்த பின்னும், இன்னும் வண்டிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது இந்த ஒரு பயணத்துக்காகத்தான் என்கிறார்கள். ஆண்டு முழுவதும் இதற்காக வண்டிகளைப் பராமரிக்கிறார்களாம். சிலரிடம் வண்டி மட்டும் தான் இருக்கிறது. மாடுகள் இல்லை. அவர்கள் உழவு மாடுவைத்து இருப்பவர்களிடம் அஞ்சா யிரம், ஆறாயிரம் என்று வாடகை பேசி மாடுகளை வாங்கி வண்டியில் பூட்டி வருகிறார் கள்.

இந்த வண்டிகள் இரவில் மட்டுமே பயணிக் கின்றன. விடியற்காலையில் எந்த ஊர் வரு கிறதோ அந்த ஊரில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு ஓய்வு எடுக்கின்றன. மறுநாள் இரவு பத்து மணிக்குத்தான் மீண்டும் வண்டிகள் பூட்டப்படுகின்றன. இடையில் எந்தக் காரணம் கொண்டும் வண்டியைப் பூட்டுவது இல்லை.

பாதசாரிகள் இந்தப் பயணத்தை மாற்றி மேற்கொள்கிறார்கள். அதாவது, பகல் முழுவதும் நடைப்பயணம், இரவில் ஓய்வு!

சித்திரை மாதம் இரண்டாம் செவ்வாய்க் கிழமை காலையில் நடக்கும் முதல் பூஜையில் கலந்து கொண்டு விட்ட பிறகு, பாதசாரிகள் பஸ்களிலோ, ரயில்களிலோ கிளம்பி ஊர் செல்கிறார்கள். வண்டிகள் மட்டும் வெள்ளிக் கிழமை வரை ஓய்வு எடுத்துவிட்டு கிளம்பு கின்றன. ஆறு நாட்கள் இரவில் பயணித்து தங்கள் ஊரை அடைகின்றனர்.

முன்பு எல்லாம் மாடுகளுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி, பயணம் முடியும் வரைக்குமான உணவைக் கட்டி எடுத்து வர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இப் போது வழி எங்கும் செட்டிநாட்டு பிரமுகர்கள் பந்தல் அமைத்து, உணவுத் தேவையைக் கவனித்துக்கொள்வதால் எந்தச் சுமையும் இல்லாமல் இறைவனைக் காண வர முடிகிறது என்கிறார்கள்.

இறைவனைக் காண வருவதே சுமைகளைத் தீர்க்கத்தானே?

-கரு.முத்து, படங்கள்:எம்.ராமசாமி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு