என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

''சிம்புவுடன் நடிக்க நான் ரெடி!''

''சிம்புவுடன் நடிக்க நான் ரெடி!''

##~##

திருச்சி வந்த ஜீவாவின் செல்லுக்கு, 'என் விகடனுக்காக ஒரு பேட்டி?’ என்று எஸ்.எம்.எஸ். தட்ட, உடனே ரிப்ளை வந்தது 'ஓ.கே.’ என்று!

 அடுத்த ஒரு மணி நேரத்தில், திருச்சி ஏஞ்சல்ஸ் அஞ்சலி, தீபிகா, ஷைனி, காயத்ரி, மது சகிதம் ஜீவா முன் ஆஜர்.

''என்ன நண்பா, இவங்க உங்க ரிலேட்டிவ்ஸா? போட்டோ எடுத்துக்கணுமா?'' என்றவரிடம், 'ஹலோ உங்களைப் பேட்டி எடுக்கப் போறதே நாங்கதான்!'' என்று மிரட்டினார்கள் பெண்கள்.

பயந்த பிள்ளைபோல கொஞ்சம் பதற்றம் காட்டிய ஜீவா, ''பரவாயில்ல கேர்ள்ஸ், ஆரம்பிங்க!'' என்றார்.

''சிம்புவுடன் நடிக்க நான் ரெடி!''

''கார்த்திகா, பியா ரெண்டு பேர்ல யார் அழகு?''

''சிம்புவுடன் நடிக்க நான் ரெடி!''

''முதல் கேள்வியிலேயே வீட்ல மாட்டிவிடணுமா? நான் இன்னும் நிறையப் படங்கள் நடிக்கணும். இவங்க ரெண்டு பேர் கூடவும் சேர்ந்தும் நடிக்கணும். இப்போ எங்க மூணு பேருக்குள்ள யும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு. அதைக் கெடுத்துடாதீங்க பொண்ணுங்களா!''

''உங்க ரோல் மாடல்?''

''ரஜினி, கமல்ல ஆரம்பிச்சு நேத்து அறிமுக மான ஹீரோ படம் வரை பார்த்துடுவேன். ஒவ்வொருத்தரிடம் இருந்தும் ஏதோ ஒரு விஷயம் கத்துப்பேன். அப்படிப் பார்த்தா, என் ரோல் மாடல் லிஸ்ட் பெரிசு. ஹாலிவுட் தாண்டியும் நீளும்!''

''முதல்ல 'கோ’, அப்புறம் 'நண்பன்’. அது என்ன குறிவெச்சு சிம்புவையே காலி பண்றீங்க?''

''அய்யய்யோ... இப்படி யார் கிளப்பி விடுறாங்கன்னு தெரியலையே! இதனாலதான், 'நண்பன்’ பண்ண நிறைய யோசிச்சேன். அப்ப ஷங்கர் சார், 'நான் 'நண்பன்’ படத்துல நடிக்கச் சொல்லி இதுவரை சிம்புகிட்ட ஒரு வார்த்தைகூட பேசலை’ன்னு சொன்னார். அதுதான் உண்மை!'

''உங்க முதல் காதலி யார்?''

''போரடிக்கிற பதில்தான். பரவாயில்லையா... என் மனைவிதான்!''

''சிம்புவுடன் நடிக்க நான் ரெடி!''

''ஓ.. அப்போ மனைவின்னா உங்களுக்குப் போரடிக்குமா?''

''அம்மா... தாயே உங்களுக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்? இதுக்கு ரிப்போர்ட்டர்ஸே பரவாயில்லை போல! நான் பதில்தான் போரடிக்கும்னு சொன்னேன். ஆக்சுவலா அவங்க எனக்கு ஆறாவது படிக்கும்போது இருந்து பழக்கம்!''

''அப்ப ஆறாவதுலேயே கரெக்ட் பண்ணிட்டீங்களா?''

''சிம்புவுடன் நடிக்க நான் ரெடி!''

''ஏங்க ஆறாவது படிக்கும்போது என்னங்க தெரியும்? நீங்கள்லாம் அப்படி ஏதும் கரெக்ட் பண்ணி இருக்கீங்களோ? கொஞ்சம் கொஞ்சமா ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். காலேஜ் சமயம் லவ் ஆரம்பிச்சது. ரெண்டு குடும்பமும் ஏற்கெனவே பழக்கம்கிறதால, வெளியில பார்க், பீச்னு சுத்த முடியலை. இப்ப ஸ்பர்ஷானு ஒரு பையன். வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு!''

''பழைய ஹீரோயின்களில் யார்கூட நடிக்க ஆசை?''

''ஸ்ரீதேவி கூட நடிக்கணும்னா அப்பா வேஷம்னாகூட நான் ரெடி!''

''உங்க ஃபேவரைட் டாஸ்மாக் சிரிப்பு ஒண்ணு சிரிங்க!''

''அதுக்கு ஒரு குவார்ட்டர் போடணுமே பரவாயில்லையா?'' என்று ஜீவா இந்த முறை சதாய்க்க, 'ஓஹோ!’ என்று கோரஸ் உற்சாகம் பெண்களிடம்!

''வரிசையா டபிள், ட்ரிபிள் ஹீரோ சப்ஜெக்டா நடிச்சுட்டு இருக்கீங்களே..! அடுத்து அஜீத் கூட நடிப்பீங்களா?''

''யார்கூட நடிக்கவும் நான் ரெடி. சிம்புன்னா டபுள் ஓ.கே!''

க.ராஜீவ்காந்தி, படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்