Published:Updated:

மீண்டும் ஒரு காதல் கதை

மகாதேவப்பட்டணம் தாஜ்மஹால்

மீண்டும் ஒரு காதல் கதை

மகாதேவப்பட்டணம் தாஜ்மஹால்

Published:Updated:
##~##

ன்னார்குடி அருகே இருக்கும் மகாதேவப்பட்ட ணத்தில் 300 வருடங்களுக்கு முன் நடந்த கதை இது!

 அப்போது மராட்டியர்கள் இந்தப் பகுதியை ஆண்ட னர். மகாதேவப்பட்டணத்தின் ரம்மியமான சூழலில் மனதைப் பறிகொடுத்த இரண்டாம் சரபோஜி மன்ன ரின் மகன் எகோஜி ராவ், எழில் கொஞ்சும் அரண் மனையைக்  கட்டி, கம்பீரமான கோட்டை ஒன்றை எழுப்பினார். அரண்மனையைப் பார்த்த  எகோஜிராவின் காதல் மனைவி உமா பாய் அதன் வனப்பில் உறைந்து போனார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டும் ஒரு காதல் கதை

ஆனால், இந்த சந்தோஷம் நீண்ட காலம் நீடிக்க வில்லை. உமா பாய் திடீர் எனக் காலமானார். தன் காதல் மனைவி அணுஅணுவாக நேசித்த  அரண்மனை அருகிலேயே, அவருக்குச் சமாதி எழுப்ப முடிவு எடுத்தார் எகோஜி ராவ். மொகாலய மன்னர் ஷாஜகான் தாஜ்மஹாலை உருவாக்கியது போல, எகோஜி ராவும் அரண்மனை யில் இருந்து பார்த்தால், தெரியும் தூரத்தில் உமா பாய் நினைவிடத்தை உருவாக்கினார். அடுத்த சில வருடங்களிலேயே எகோஜி ராவும் மரணம் அடைந்தார்.

இந்த நினைவிடம் உள்ள பகுதியை இப்போது வடக்கு சீதாசேகரம் என்று அழைக்கிறார்கள். ஓர் அழகான காதலைச் சுமந்து நிற்கும் அந்த வரலாற்றுக் கட்டடம், இன்று கவனிப்பார் இல்லாமல் சிதிலம் அடைந்துகிடக்கிறது. 'உமா பாய்’ நினைவிடத்தில் புது மணக் காதல் தம்பதியரான அருண் வெங்கடேஷ் - தமிழரசி  உலவிக்கொண்டு இருந்தனர்.

''சென்னை போன்ற நகரங்களில் பீச், பார்க் என்று ஏகப்பட்ட இடங்கள் இருக்கும். இந்த ஊரில் காதலின் நினைவுச் சின்னமாக இது ஒன்றுதானே இருக்கிறது. அதான் ஒரு சென்ட்டிமென்ட் விசிட்!'' என்று தமிழரசியின் தோளை இறுக்கிக்கொள்கிறார் அருண்.

மீண்டும் ஒரு காதல் கதை

சீரான பாதை இல்லாததால், வயல் வரப்புகளுக்கு இடையே புகுந்துதான், உமா பாய் நினைவிடத்தை அடைய வேண்டும். நினைவிடத்தை உமா பாய் கோயில் என்று கன்னிப் பெண்கள் பொங்கல்வைத்து வழிபடுகிறார்கள். அதன் பழங்கால ஓவியங்கள் முழுக்கப் பராமரிப்பு இல்லாமல், சிதிலம் அடைந்து இருக்கிறது. கல்லறைக்குப் பின் பகுதியில் பெரும் குழிகள் தென்படுகின்றன. 'உமா பாயை தங்க, வைர நகைகள் பூட்டி அடக்கம் செய்து இருப்பார்கள். அதை அபகரிக்கலாம் என்கிற எண்ணத்தில் திருடர்களால் தோண்டப்பட்ட குழிகள் அவை’ என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

எகோஜி ராவ் - உமாபாய் காதல் கதை களை மெய் சிலிர்க்கச் சொல்லிக்கொண்டே வந்தார் அருண் வெங்கடேஷ். பிறகு நம் பக்கம் திரும்பி அவர்களின் காதல் கதை சொன்னார். ''பேருந்துப் பயணத்தில் தொடங்கியது எங்கள் காதல். பெற்றோர், உறவினர் எதிர்த்தபோதும்,  காதலில் உறுதியாக நின்றோம். இறுதியில், அனைவரின் மனப்பூர்வ சம்மதம் பெற்று திருமணம் முடித்தோம்.  இந்த இடமும் எகோஜி ராவ் - உமா பாய் காதலும் காலம் கடந்த நினைவுகளில் எங்களைத் தாலாட்டுகின்றன!'' என்கிறார் அருண் வெங்கடேஷ் பெருமிதமாக!

- சி.சுரேஷ், படங்கள்:குணசீலன்

உஷ்...

மலைக்கோட்டை நகரின் சுகாதாரத்தைப் பேண வேண்டிய அதிகாரி அவர். தனக்குக் கொடுக்கப்பட்ட அரசு காரை, வேலைக்குச் செல் லும் தனது மனைவிக்குக் கொடுத்து இருக்கிறார். மனைவியார் காரில் பந்தாவாக வலம் வர, விஷயம் மேலதிகாரிகள் கவனத்துக்குப் போனது. இப்போது அதிகாரியிடம் காரைப் பறித்துவிட்டு, ஜீப் கொடுத்து இருக்கிறார்கள்!

வழக்குகளில் இருந்து மன்னர் எப்படியும் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார் கள் சொந்த ஊர்க்காரர்கள். அவருடைய பெயர் பொறிக்கப்பட்ட பல கல்வெட்டுகள் அவருடைய வருகைக்காகக் காத்து இருந்தன. ஆனால், மன் னரால் ஆட்சியே மாறிவிட்டதும், கல்வெட்டுகளில் மன்னர் பெயரைத் தூக்கிவிட்டு, மாவீரனின் பெயரைச் செதுக்கி விழாக்களை ஜம்மென நடத்தத் தயாராகிவிட்டனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism