Published:Updated:

ஆதனக்கோட்டை முந்திரியின் கதை!

Cashew

ஆதனக்கோட்டை முந்திரியின் கதை!

ஆதனக்கோட்டை முந்திரியின் கதை!

ஆதனக்கோட்டை முந்திரியின் கதை!

Published:Updated:
Cashew
##~##

ந்திரிக்கும் முந்திரிக்கும் எப்போதுமே மவுசு உண்டு. வகை வகையாக முந்திரிப் பருப்பு சாப்பிட்டு இருப்பீர்கள். அது தயாராகும் கதை தெரியுமா?  

தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலையில் கந்தர்வக்கோட்டைக்கு அடுத்து இருக்கும் கிராமம் ஆதனக்கோட்டை. ஊருக்குள் நுழையும்போதே முந்திரி மணம் மூக்கைத் துளைக்கிறது. சாலையோரம்  சின்னச் சின்ன கீற்றுக் கொட்டகைகள். வெளியே முந்திரிப் பருப்புகள் பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின் றன. மூக்கைத்துளைக்கும் வாசனை பிடித்துக்கொண்டே வரும் வாகனங்கள் பளீர் என்று காட்சி தரும் முந்திரி யைப் பார்த்ததும் ஓரம் கட்டி நின்று இரண்டு பாக்கெட் வாங்கிவிட்டுத்தான் நகருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆதனக்கோட்டை முந்திரிப் பருப்புக்கு அப்படி என்ன சிறப்பு?

ஆதனக்கோட்டை முந்திரியின் கதை!

''பொதுவா முந்திரியை ஆலையில்தான் உடைப்பாங்க. அதுல முந்திரியில் உள்ள பால் அப்படியே இருக்கும். ஆனா, நாங்க இங்க வறுத்து எடுக்கும்போது, அதில உள்ள பாலைத் தனியாப் பிரிச்சு எடுத்துடுவோம். அதனால், முந்திரி எத்தனை நாளானாலும் கெடாது, நிறம் மாறாது. அத்தோடு உடம்புக்கு எந்தக் கெடுதலும் செய்யாது. அவ்வளவும் நல்லது!'' என்கிறார் முந்திரிக் கொட்டையை உடைத்துக்கொண்டே விற்பனையைக் கவனித்துக்கொண்டு இருக்கும் சித்ரா.

ஒரு கொட்டகையில் ஆறேழுப் பெண்கள் அமர்ந்து அதிகபட்சமாக ஒரு நாளில் ஒரு மூட்டை முந்திரிக் கொட்டையை உடைக்கிறார்கள். அதில் 15 கிலோ பருப்பு கிடைக்குமாம்.

ப்ளஸ் டூ முடித்துவிட்டு இந்த முந்திரித் தொழில் செய்யும் கோகிலா தொழிலில் உள்ள சிரமங்களைப் பட்டியலிட்டார். ''8,500 ரூபா மொதல் போட்டாத்தான் ஒரு மூட்டை முந்திரிக்கொட்டை கெடைக்கும். அதை வறுக்க ஒரு ஆள், உடைக்க ஆறு ஆள்னு மொத்தமா ஏழு பேர் வேணும். இந்த ஏழு பேருக்கும் மண்வெட்டுக் கூலி (ஒரு நாளைக்கு 100 ரூபாய்  சம்பளம்) கொடுக்கணும். வர்றவங்க தெறமையா இருந்தாத்தான், ஒரு மூட்டைக் கொட்டையையும் உடைச்சு எடுக்கலாம். அதுல கெடைக்கிற பருப்பை அன்னிக்கே வித்தாதான், மொதலை எடுக்க முடியும். அதுல வேலைக்காரங்களுக்கு கூலியும்,  மறுநா மூட்டை வாங்கப் பணமும் போக ஏதாவது மீந்தா, அதுதான் லாபம். ஆனா, எல்லாப் பருப்பும் விக்காமத் தங்கிப்போச்சுன்னா, மொதலுக்கே மோசம்தான். லாபம் எடுக்க முடியாது. மறுநா விக்க கொட்டை எடுக்கவும் முடியாது!''

இன்னொரு கொட்டகையில் வறுத்துக் கொட்டிய கொட்டையைக் கல்கொண்டு உடைத்துக்கொண்டு இருந்தார் ஜானகி. ''சூடா உடைச்சாதான், முழுப் பருப்பா கெடைக்கும். கொஞ்சம் ஆறிப்போனாலும் பருப்பு தூளா யிடும். அதனாலதான், வறுத்துக் கொட்டிய உடனேயே வேகவேகமா உடைக்க ஆரம்பிச்சுடுவோம். அப்படி உடைக்கும்போது சூடு அப்படியே கை வழியா ஒடம்புக்கு ஏறிடும். அதான் ஒரு நா இருக்க மாதிரி மறுநா ஒடம்பு இருக்காது. கை முந்திரிப்பாலு பட்டு வெந்துடும். அப்படியே கறுத்துப் போயிடும்!'' என்று வெந்துபோன கை களைக் காட்டுகிறார். இவர் திருமணம் ஆகி பக்கத்து ஊருக்கு சென்றுவிட்டாலும், வேலைக்காக தினமும் இங்கே வந்துவிடுகிறார்.

இவரைப்போல கிட்டத்தட்ட 100 பெண்கள் இந்த வேலையில் இருக்கிறார்கள். முதல் போடுகிறவர்கள் வீட்டுப் பெண்களும் இதில் முழுமையாக ஈடுபடு கிறார்கள். அப்போதுதான் லாபம் பார்க்க முடியு மாம்.

ஒரு மூட்டை உடைத்து விற்றால், அதுவும் ஒரு நாளில் விற்றுவிட்டால், முதல் போட்டவர்கள் குடும்பமும் சேர்ந்து உழைத்தால்

ஆதனக்கோட்டை முந்திரியின் கதை!

1,000 லாபம் பார்க்க முடியும். அதுவே வேலை ஆட்கள் வைத்து இருந்தால்,

ஆதனக்கோட்டை முந்திரியின் கதை!

300 ரூபாய் மட்டுமே கிடைக்குமாம். கிடைக்கும் பருப்பை 50, 100 கிராம் மற்றும் கால் கிலோ, அரை கிலோ பொட்டலங்களாக விற்கிறார் கள். தற்போதைய விலை ஒரு கிலோ

ஆதனக்கோட்டை முந்திரியின் கதை!

450 ஆகும்.

''இந்தாங்கண்ணே, சாப்பிட்டுப் பாருங்க...'' கை நிறைய நயமான முந்திரிப் பருப்புகளை அள்ளித் தந்தனர் அந்தப் பெண்கள். மணிமணியான பருப்பு கள். ஆனால், சூடுபட்டு காய்ச்சிப்போன அந்தக் கைகளைப் பார்த்தபோது, முந்திரி ருசிக்கவில்லை!

- கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism