Published:Updated:

என் ஊர்!

காதல் கோட்டைக்கு சந்தனச் சிலை!

என் ஊர்!

காதல் கோட்டைக்கு சந்தனச் சிலை!

Published:Updated:
##~##

'தேசிய விருது இயக்குநர்’ அகத்தியன்தன் ஊர் பற்றி இங்கே மலரும் நினைவுகளைப் படரவிடுகிறார்!

''பேராவூரணி  என்றாலே நீலகண்ட விநாய கர் கோயில்தான் என் நினைவுக்கு வரும். எனக்குப் பாடங்கள் கற்றுக் கொடுத்த இடம் அதுதான். ஆனால், நான் சாமி கும்பிட மாட்டேன்!'' முரண் சுவையுடன் தொடங்கினார் இயக்குநர் அகத்தியன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காவிரியின் கடைமடைப் பகுதி பேராவூரணி. இதைத் தாண்டினால் நெடுக கடற்கரையோரக் கிராமங் கள். ஆற்றுக் கலாசாரமும் கடற்கரைக் கலாசாரமும் சேர்ந்த ஒரு கலாசாரம் எங்களுடையது.  உணவில் தொடங்கி எங்க வாழ்க்கை முழுக்க இந்தக் கலவையான சுவையைப் பார்க்கலாம்.

என் ஊர்!

தென் தமிழ்நாட்டோட வறண்ட பிரதேசங்களில் இருந்து வர்றவங்களுக்கு பசுமையான வரவேற்பைக் கொடுப்பதே பேராவூரணிதான். அந்தக் காலத்துல பஞ்சம் பொழைக்க வர்றவங்க மொதல்ல வர்றது இங்கேதான். அடிப்படையில வளமான பூமி இது. பத்திரிகையில் புதுசா ஒரு பைக் விளம்பரம் வந்துச் சுன்னா, அடுத்த வாரத்துல அந்த பைக் ஏழெட்டு எங்க ஊருக்குள்ள ஓடும். எங்க வளத்துக்கு அடிப்படை ஆதாரம் தென்னை!

என் ஊர்!

பிள்ளையாருக்கு நெருக்கமான உறவுள்ள ஊர் எங்களுடையது. பிள்ளையார்பட்டிக்கு அடுத்து பிள்ளையாருக்குப் பெரிய திருவிழா நடப்பது எங்க நீலகண்ட விநாயகர் கோயில்லதான். ஊருல வீட்டுக்கு ஒரு நீலகண்டன் இருப்பார். இப்படி இருக்குற ஊர்ல தான் லெனின்கள், ஸ்டாலின்கள், மாஸ்கோக்களும் அதிகம். திராவிட இயக்க வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் பேராவூரணிக்கு உண்டு. பெரியாரின் கண் அசைவுக்கு இயங்கின பெரிய படையே இங்கே இருந்தது. பெரியார் தாலி இல் லாத திருமணங்களைப் பத்தி பேசுனப்ப, அதைப் பெரிய அளவில் செயல்படுத்தியது எங்க ஊர்தான். பெரியாருக்குத் தூண் மாதிரி இருந்த வி.எஸ்.கே. எங்க ஊர்க்காரர்!

எங்க ஊரின் காவிரி, ஆனந்தவள்ளி வாய்க் கால். அந்தக் காலத்துல ஆள் மூழ்கும் அளவுக் குத் தண்ணீர் ஓடும். சின்னப் பசங்களோட சந்தோஷம் எல்லாம் அதுதான். பொன்னாங்கன்னிகாடு குளத்தில் கோடைக்காலத்தில்கூட தண்ணீர் இருக்கும். சின்ன வயசுல கண் சிவக் கும் அளவுக்கு குளித்து, களித்த இடங்கள் இவை. இந்தக் குளத்தில் உவர் படிந்த மண் இருக்கும். சோப்பு பயன்படுத்தும் அரிதான காலகட்டத்தில் மக்கள் துணிகளுக்கு இந்தமண் ணைப் பயன்படுத்திதான் துவைப்பார்கள்.

பேராவூரணி வாழ்க்கையின் தவிர்க்க முடி யாத இடம் எங்க ஊர் ரயில் நிலையம். எங்க ளுக்கு கடற்கரை, பூங்கா எல்லாம் இந்த ரயில் நிலையம்தான். கல்லூரிப் படிப்புக்கு பெரும் பாலும் அதிராம்பட்டினத்துக்கோ, காரைக் குடிக்கோதான் போக வேண்டி இருக்கும். அதற் கும் ரயில்தான் துணைவன்!

பஸ்ஸும் அப்படித்தான். அப்போதெல்லாம் அதை வண்டியாக மட்டும் பார்க்கலை... காலம் காட்டும் கடிகாரமாகவும் பார்த்தோம். அந்த அளவுக்குச் சரியான நேரத்துக்கு பஸ் வந்து போகும்!

மீன் வகை உணவு எங்க ஊர் ஸ்பெஷல். பக்கத்துல கடல் இருக்கிறதால, உடனே மீன் விற்பனைக்கு வந்து குழம்பாக மணக்க ஆரம்பிச் சுடும். ஒவ்வொரு மீனுக்கும் தனித்தனி வாசம் உண்டு. ஆத்தங்கரை ஓரத்தில் நடந்து வரும்போது வரிசையாக இருக்கும் வீடுகளில் இருந்து வரும் வாசத்தை வைத்தே, இங்கு 'கெண்டை மீன் குழம்பு, அங்கு கெளுத்தி மீன் குழம்பு’ன்னு சரியா சொல்லிடுவேன். அந்தக் காலத்துல பேராவூரணியில் விடிய விடிய சாப்பாட்டுக் கடைகள் உண்டு. துரைராஜ் அண்ணன் கடை புரோட்டா, கறிக் குழம்புக்குனு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு!

அப்போ எங்க ஊர்ல ஏகப்பட்ட நாடக ட்ரூப்  இருந்தாங்க. ராமையான்னு ஒருத் தர். நல்ல கலைஞர். அவரைப் பார்த்தால் நம்மளும் நடிகனாயிடணும்னு தோணும். எனக்கும் தோணுச்சு.  

ராமையாகிட்ட சான்ஸ் கேட்டேன். மேலும் கீழும் பார்த்துட்டு 'போய், உங்க வீட்டுல அனுமதி வாங்கிட்டு வா’ன்னு சொன் னார். சொன்னேன். அப்பா போட்டார் ஓர் அடி. அதோடு ஆசை நிராசை ஆயிடுச்சு!

பின்னாடி எல்லாரும் சினிமா ரசிகர்களா யிட்டோம். பக்கத்துல நிறைய டூரிங் டாக்கீஸ்கள் வந்துடுச்சு. எனக்கும் என் நண்பர்கள் பன்னீர், அன் பழகன், மூர்த்தி, அழ.மூர்த்திக்கும் அழகப்பா தியேட் டரும் சக்கரம் தியேட்டரும் திரை உலகத்தைக் காட்டுற இடங்களா மாறிடுச்சு. அதுலயும் அழ.மூர்த்தியோட படம் பார்க்குறது தனி அனுபவம். படம் பார்க்கும்போது எந்த ஸீன் வந்தாலும் கடைசியில் 'நச்’னு ஒரு கமென்ட் அடிச்சு, அந்த ஸீனையே காலி பண்ணிடுவான் அவன். பின்னாடி படத்துக்கு வசனம் எழுதும்போதெல்லாம் மூர்த்தியை மனசுலவெச்சுட்டுதான் எழுது வேன்.

நான் 'காதல் கோட்டை’ படத்துக்காக தேசிய விருது வாங்கினப்ப ஊர்ல விழா எடுத்து பெருமைப்படுத்தினாங்க. அப்போ அவங்க கொடுத்த சந்தனச் சிலை இப்பவும் என் வீட்டு மேஜையை அலங்கரிக் குது!''

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்

என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism