Published:Updated:

கலெக்டர் தர்பார்!

கலெக்டர் தர்பார்!

கலெக்டர் தர்பார்!

கலெக்டர் தர்பார்!

Published:Updated:
##~##

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், ஆட்சியரைப் பார்க்க நின்றுகொண்டு இருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத் தோம்.

பூலாம்படி தேவராஜ் நகரைச் சேர்ந்த சித்ராவும் பழனியம்மாளும் 75-க்கும் மேற்பட்டோர் கையெழுத்து போட்டு இருந்த ஒரு மனுவுடன் காத்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்க நகருல, வூடுங்க இருக்குற பகுதிக்கு நடுவுல கக்கூஸ் கட்டுறோம்னு அரசாங்கத்து ஆளுங்க குழி பறிச்சுட்டாங்கய்யா. அங்கே கக்கூஸ் கட்டினா, அதைச் சுத்திதான் நாங்க இருக்கணும். அதனால, வூடுகளுக்கு நடுவுல கக்கூஸ் கட்டாம ஒதுக்குப்புறமா கட்டச் சொல் றோம். அப்படி பண்ணலைன்னா, நாங்க போராடுறதைத் தவிர வேற வழி இல்ல!'' என்கிறார்கள் இருவரும்.

கலெக்டர் தர்பார்!

அவர்கள் பின்னாடியே மனு கொடுக்க வந்த செல் வமோ, ''பூலாம்படி தேவராஜ் நகர்ல சுகாதாரம் வேணும்யா... எட்டு கக்கூஸ் கட்டித் தரோம்னு கவர் மென்டே வரப்ப, இந்த சனம் ஏன் தடுக்குதுங்கன்னே தெரியலை!'' என்றார்.

கையில் கொத்துக்கொத்தாக மனுக்களோடு வந்தார் ஒருவர். ''நான் இது வரை 700 மொறை வந்து மனு  கொடுத்துருக்கேங்க. கலெக்டரு என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிறாரு. என்னால கவர்மென்ட்டுக்கு இலவசமா மின்சாரம்  கொடுக்க முடியும். என்கிட்ட நிறைய ஐடியா இருக்கு. அதெல்லாம் யாருமே கேட்க மாட்டேங்கறாங்க!'' என்று அடுக்கிக் கொண்டே போனவரை, அதிகாரிகள் ஒதுக்கிக்கொண்டு போன போதுதான் தெரிந்தது, அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது!

கலெக்டர் தர்பார்!

''நாங்க கல்லைலேர்ந்து வர்றோமுங்க. எங்க ஒன்றியம் வேப்பூருங்க. நாங்க ஊருக்கு ஒரு ஆளா இங்க மனு கொடுக்க வந்திருக்கோங்க. இவரு கல்லைங்க, இவரு ஓலைப்பாடிங்க, இவரு கோவிந்தராஜபட்டினங்க, இவரு வீரமா நல்லூருங்க, இவரு வயலப்பாடிங்க'' என்று ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார் கல்லை சாமிராஜ்.

''ஐயா எங்க ஊர்ல பலப் பிரச்னைங்கய்யா. குடி தண்ணிகூட ஒழுங்கா வர்றது இல்லை. ஆனா, சமாளிச்சுக்குறோம். பஸ் வசதி கேட்டு எவ்வளவோ நாளாப் போராடுறோம். நடவடிக் கையே இல்லைங்கய்யா. அரசாங்க பஸ் இல்லாததால, மினி பஸ்காரனுங்க அநியாய டிக்கட் போட்டு ஓட்டுறானுங்கய்யா. அதான் கலெக்டரைப் பாக்க வந்துட்டோம். பஸ்ஸு வுடுறியலா, இல்லையான்னு கேட்க!'' என்றார் சாமிராஜ்.

பெரம்பலூரைச் சேர்ந்த அஞ்சலை முதி யோர் ஓய்வு ஊதியத்துக்காக வந்து இருந்தார். ''எம் புருசனுக்கு உடம்புக்கு முடியலை. சீக்கி ரமே போனாலும் போயிடுவாரு. எனக்குப் புள் ளைங்க பாக்கியமும் இல்ல. அநாதை ஆயிட் டேன். இப்பத்தான் மொத மொதல்ல வந்து சாமிகிட்ட மனு போட்டு இருக்கேன். ஏதாவது உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ங்கப்பா!'' என்றார் அஞ்சலை பாவமாக!

கலெக்டர் தர்பார்!

இதே உதவித் தொகை பஞ்சாயத்துக்காக வந்து இருந்த முருக்கன்குடி துரைசாமியின் பிரச்னை வேறு தினுசு. ''ஒரு வருஷம் மிந்தி மனு போட்டப்பவே, எனக்கு பென்ஷன் போட்டுட்டாங்க.  ஆனா, துரைசாமி பையன் மெய்யப்பன்னு என் அப்பா பேர் சேத்து வந்த தால, வந்த தொகையைத் திருப்பி அனுப்பிச்சிட் டாரு தபால்காரரு. அப்பவே வந்து மனு கொடுத்தேன். கலெக்டரும் குன்னத்துக்கு என் மனுவைப் பரிசீலனைக்கு அனுப்பி, மெய்யப்பன் மகன் துரைசாமின்னு வந்ததும் பணம் கொடுக் கலாம்னாங்க. இன்னிக்கு வரைல எம் பேருல பணம் வரலைங்க. எங்க அப்பா பேருல வர தால, என்னாலயும் உதவித் தொகையப் பெற முடியலைங்க. வந்த பணத்தைக் கண்ணுல பாக்க முடியல சாமி!'' என்றார் துரைசாமி.

குழந்தையும் கையுமாக வந்தனர் ஒரு தம்பதி. ''சார் எம் பேரு சுதாகருங்க. இங்க அம்மாபாளை யம் பக்கத்துல இருக்கிற களரம்பட்டுதான் எங்க ஊருங்க. நான் ப்ளஸ் டூ தாங்க படிச்சிருக்கேன். டிரைவர் வேலை பார்க்கிறேன். நான் இவ மேல ஆசைப்பட்டு போன வருஷம் கல்யாணம் கட்டிக்கிட்டேங்க. நான் வேற சாதி, இவ வேற சாதி. அதனால குடும்பத்துல சரியா செட் ஆகலைங்க. இவ பி.காம். வரை படிச்சிருக்கா. இப்போதைக்கு குடும்பம் நடத்த வருமானம் பத்தலை. கலப்புத் திருமண உதவித் தொகை ஏதோ கொடுப்பாங்களாமே... அதை வாங்கிட்டுப் போய் கொஞ்ச நாள் சமாளிக்கலாம்னு பார்க்குறோம்!''  என்கிறார்கள் இருவரும்.

மாவட்ட ஆட்சியர் விஜயகுமாரிடம் தங்கள் குறைகளை கைமாற்றிவிட்டு நம்பிக்கையுடன் திரும்பிக் கொண்டு இருந்தார்கள் அவர்கள்!

- க.சண்முகவடிவேல், படங்கள்:சுமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism