Election bannerElection banner
Published:Updated:

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

##~##

புதுக்கோட்டை நகரின் மையப் பகுதி அது. அதிகாலை 4 மணி. ''ந்... தா... ஹை... ஹை...'' எனும் குரலும் ''சூடான டீயே...'' எனும் குரலும் அது மாட்டுச் சந்தை என்று நமக்குப் புரிய வைக்கின்றன.

மாடுகளை ஓட்டி வந்தவர்களும் வாங்க வந்தவர்களும் தரகர்களும் டீக்கடையை மொய்க்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் முன்பின் முகம் தெரியாதபோதும்கூட, ''என்னண்ணே... எந்தூரு நமக்கு? என்ன பல்லுல மாடு பாக்குறீய, என்ன ரேட்டுல மாடு வேணும்?'' என நைஸாகப் பேச்சுக் கொடுத்து மாடு வாங்க வந்தவர்களை நாடி பிடித்துப் பார்க்கிறார்கள் தரகர்கள்.

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

விடிந்தும் விடியாத அந்த அரை வெளிச்ச வேளையிலேயே மாட்டு பேரம் தொடங்கிவிடுகிறது. தாயைப் பிரிந்த கன்றுகளும், கன்றைப் பிரிந்த பசுக்களும் அதனதன் பாஷையில் கூப்பிட்டு, குரல் கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. இது எதையும் பொருட்படுத்தாத வியாபாரிகள், தமது தொழிலில் மும்முரமாக இருக்கிறார்கள். மாடுகள் தரம் பிரித்து நிறுத்தப்பட்டு இருக்கின்றன. ஒருபுறம் காளை மாடுகள் வரிசை கட்டி நிற்க, மறுபுறம் வீட்டுக்காகவே ஏதோ ஒரு வகையில் உழைத்து, களைத்து, இளைத்த மாடுகள், அறுப்பு மாடுகளாகப் பரிதாபப் பார்வையோடு நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

முதலில் தரகர்கள் மாடுகளுக்கு ஒரு விலையை வைத்து,

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

100-ஐ முன் பணமாகக் கொடுத்து அந்த மாட்டை  ஓரமாகக் கட்டி வைக்கின்றனர். பிறகு கூடுதல் விலைக்கு அந்த மாடுகளை விற்றுவிடுகின்றனர். இவர்கள் விற்ற பின்புதான் மாட்டை விற்றவர்களுக்குப் பணம். அதுவரை மாட்டை விற்றவர்கள் தரகர்களிடம் தவம்கிடக்கிறார்கள்.

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

மாட்டுத் தரகரான மதியிடம் பேசினோம். ''எனக்கு 40 வயசாவுது. கிட்டத்தட்ட 20 வருஷங்களா தரவு வேலை பாக்குறேன். அப்ப எல்லாம் கொறைச்சலா 1,000 மாட்டுக்கும் அதிகமா மாடுங்க வரும். அறுப்பு மாடே வராது. இப்ப வெவசாயம் கொறஞ்சி மாட்டுத் தீனிக்குப் பஞ்சமாப் போயி பூரா மாடுகளயும் அறுப்புக்கு விக்கக் கௌம்பிட்டாக.

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

500,

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

1000-துக்கு வாங்குனமா, மேல

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

100,

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

200 வெச்சி வித்தமான்னு போயிருவோம். இப்பதான் வெவசாய வேலைக்கு மாடுகள பூட்டி வேலைப் பாக்குறதும் கொறஞ்சிப் போச்சே? அதனால, வண்டி மாடு, உழவு மாடெல்லாம் இப்ப சுத்தமாக் கொறஞ்சிப் போச்சு.

ஆனா, மாடுக கொறையக் கொறைய ரேட்டு எகிறிருச்சி. சாதாரணமா ரெண்டு பல்லு, நாலு பல்லு சோடி கொறைஞ்ச ரேட்டே

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

25 ஆயிரத்துல தான் ஆரம்பிக்குது. இந்தச் சந்தையில

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

60ஆயிரம் வரைக்கும் மாடுக விக்கிது'' என்றார். சந்தையின் ஓர் ஓரத்தில் சாட்டை, மூக்கணாங்கயிறு, தலைக் கயிறு, கழுத்துக் கயிறு என்று வியாபாரம் சூடு பறக்கிறது. மாடு வாங்கும் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு சாட்டையை வாங்கிச் செல்கிறார்கள்.

''எங்க வீட்டுல இந்த வண்டி மாட்டைப் போன வருஷம் வாங்கினோம். அப்ப

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?

30 ஆயிரத்துக்கு வாங்கினது. போன வருஷம் முழுக்க இதை வெச்சிதான் விவசாய வேலை பார்த்தோம். முன்ன மாதிரி வெளைச்சலும் இல்லை; வைக்கோலும் இல்லை. யாரு வீட்டு பலன்லயாவது வாய் வச்சிருது. அப்புறம் சண்டை சச்சரவுனு ஆயிருது. சரி, இந்த வருஷம் டிராக்டரைவெச்சு உழுதுக்கு வோம்னு விக்க வந்துட்டேன். மாட்டு வண்டிக்குத் தான் வேலையே இல்லாமப் போயிருச்சே, அப்புறம் என்னத்துக்கு இவ்வளவு வெலைக்கி மாடுனு முடிவு பண்ணித்தான் ஓட்டியாந்துட்டேன்'' என்றார் மாடு விற்க வந்த மணி.

மாடு வாங்க வந்த கந்தசாமியிடம் பேசினோம்.

''கிராமத்தைப் பொறுத்தவரைக்கும் குடியானவன் வீடுன்னாலே ஒரு ஜோடி மாடு வேணும். இல்லைன்னா கிராமத்துல மதிப்பு இருக்காது. வேலை இருக்கோ, இல்லையோ ஒரு ஜோடி மாடு வீட்டுல கெடக்கணும். அதனால, ஒரு ஜோடி மாடு எப்பவும் நம்ம வீட்டுல கெடக்கும். அதோட வருஷம் ''ஒரு ஜோடி மாட்ட மாத்திக்கிட்டே இருக்கணும் எனக்கு. இப்பவும் போன வருஷம் வாங்குன மாட்டை வித்துட்டு புதுசா ஒரு ஜோடி மாட்டை வாங்கத்தான் வந்திருக்கேன். ராசா, இப்ப வேணா மாட்டுக்கு மவுசு கொறஞ்சிருக்கலாம். அந்தக் காலத்தை மாடு இல்லாம நெனைச்சே பார்க்க முடியாது. கல்யாணம்னாலும் மாட்டு வண்டியிலதான்;  யாருக்காவது முடியலன்னாலும் மாட்டு வண்டியிலதான். இப்ப அதெல்லாம் இல்லன்னாலும் மாடு வெச்சிருந்துட்டு இல்லாம இருந்தா நமக்கே என்னமோ மாதிரி இருக்கு'' என்றார்...

அவர் சொல்வதை ஆமோதிப்பதுபோல 'ம்மா...’ என்று குரல் கொடுத்தன மாடுகள்!

- வீ.மாணிக்கவாசகம், ச.ஸ்ரீராம், படங்கள்: பா.காளிமுத்து

மாட்டுச் சந்தைக்குப் போவோமா?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு