Published:Updated:

ஆபரேஷன் நுங்கு வேட்டை!

ஆபரேஷன் நுங்கு வேட்டை!

##~##

ஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள  பெரியகுளம். காலையிலும் சேராத, மதியத்திலும் சேராத ஒரு பகல் பொழுதில், புனல் வாசலைச் சேர்ந்த ஈஸ்வரன், சூர்யா, பாண்டியன், செந்தில் ஆகியோர் தீட்டப்பட்ட அரிவாளுடன் பெரியகுளத்துக்கு வருகின்றனர். கரை ஓரங்களில் வானத்தை முட்டினாற்போல வளர்ந்து நிற்கும் பனை மரங்களை நோட்டம் இடுகிறது

ஆபரேஷன் நுங்கு வேட்டை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தக் கும்பல்.

 'டேய்! தெரியுமுல்ல... நான் ஏறி இறங்குற வரைக்கும் யாரும் கீழ விழுந்த குலையைத் தொடக் கூடாது. அப்படிச் செஞ்சீங்கன்னா என் உசுருக்கு ஆபத்தாயிடும். நீங்க எல்லோரும் மாட்டிக்குவீங்க'' எச்சரித்தவாறே மரத்தில் ஏறத் தயாராகிறான் ஈஸ்வரன்.

''சரி மாப்ள... நீ ஏறு. நல்ல நுங்கு உள்ள குலையாப் பார்த்து வெட்டிப் போடு. நாங்க ஒரே இடத்துல குவிச்சு வைக்கிறோம். பார்த்து ஏறுரா''

- கோரஸாகக் குரல் கொடுக்கின்றனர் மற்றவர்கள்.

கைலியை மடித்து சுருக்குப் போட்டுக்கொண்டு, அரிவாளை லாகவமாக இடுப்பில் சொருகியவாறு மரத்தை இறுகப் பற்றிக்கொண்டு ஏற ஆரம்பிக்கிறான் ஈஸ்வரன்.

சில நிமிடங்கள் கழிகின்றன.

ஆபரேஷன் நுங்கு வேட்டை!

பனை மரத்தின் உச்சியில் நிழல் ஆடுகிறது. காய்ந்த மட்டைகள் வரிசையாகக் கீழே விழுகின்றன. அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கும் நமக்குத் தலைச் சுற்ற ஆரம்பிக்கிறது. தொடர்ந்து, இளநுங்குக் குலைகள் கீழே விழுகின்றன. பனங்காய்கள் சிதறி ஓடுகின்றன. கீழே நிற்பவர்கள் அவற்றைச் சேகரிக் கின்றனர். ஏழு, எட்டு குலைகள் சேர்ந்த நிலையில், ''போதும்டா, மாப்புள்ள... இறங்கி வா...'' என்று கீழே இருந்து மேலே குரல் போகிறது.

பனங்காய்களின் தலைகள் சீவப் படுகின்றன.  எல்லோருடைய கட்டை விரல்களும் இப்போது நுங்கு சுளை களுக்குள். நமக்கும் இரண்டு கிடைக்கிறது. போதும் போதும் என்கிற அளவுக்கு உள்ளே போனதும், மிச்சம் கிடந்த குலைகளைத் தோள்களிலும் தலையிலும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் புறப்படுகிறது அந்தக் கோஷ்டி!                               

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்

ஆபரேஷன் நுங்கு வேட்டை!