Published:Updated:

தலை வாரி பூச்சூடி உன்னை...

தலை வாரி பூச்சூடி உன்னை...

தலை வாரி பூச்சூடி உன்னை...

தலை வாரி பூச்சூடி உன்னை...

Published:Updated:
##~##

திருச்சி மாநகர வீதிகளில் திடீர் டிராஃபிக் ஜாம். ஒன்றரை மாதங்களாக ஹாயாக விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகளுக்கு ஸ்கூல் ஓபனிங் டே.

''ஒண்ணாங் கிளாஸுக்கும் ஆறாங்கிளாஸுக்கும் மட்டும்தான் புக்ஸ் ரெடியாகி இருக்காம். நமக்கெல்லாம் இப்போதைக்கு புக்ஸ் இல்லையாம். ஹை, ஜாலி''- சிக்னலில் தனது நண்பனிடம் உற்சாகமாகத் தகவல் பரிமாறுகிறான் சைக்கிளில் பயணிக்கும் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''லீவுல நான் குன்னூர்ல இருக்குற அத்தை வீட்டுக்குப் போயிருந்தேன் தெரியுமா?''- தனது தோழியிடம் ஒரு மாணவி பெருமையடித்துக்கொள்ள...  ''ஹும். உனக்கு ஜாலிதாம்பா. எங்கம்மாதான் கம்ப்யூட்டர் கிளாஸ், டான்ஸ் கிளாஸ்னு அனுப்பி என்னை லீவுக்கு எங்கேயும் அனுப்பல!'' என்று சலித்துக்கொண்டாள்.

தலை வாரி பூச்சூடி உன்னை...

பள்ளி அருகே உள்ள சாலைகளில் பைக், ஆட்டோ, கால் டாக்ஸி என்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் பறக்க, கூடவே புழுதியும் பறக்கிறது. முதல் நாள் என்பதால், யூனிஃபார்ம் மற்றும் கலர் டிரெஸ் என்று கலந்துக்கட்டி மாணவர்கள் தென்படுகிறார்கள். கலக்கலான சுடிதாரில் வந்த தனது தோழியிடம், ''இதை எங்கேப்பா வாங்கின? என்ன ரேட்?'' என்று விசாரிக்கிறாள் ஒரு மாணவி.

''ஒன்றரை மாசம் லீவு முடிஞ்சு திரும்பவும் ஸ்கூலுக்குக் கிளம்ப, பசங்க டென்ஷன் ஆகறாங்களோ இல்லையோ... நாங்க ரொம்பவே டென்ஷன் ஆயிட்டோம். காலையில சீக்கிரமா எழுந்து மதியத்துக்கும் சேர்த்து சமைச்சு, சரியான நேரத்துக்குள்ள வாண்டுகளைக் கிளப்பிவிடுற வேலை இருக்கே, ஸ்ஸ்ஸ் அப்பப்பா...'' என்று அலுத்துக்கொள்கிறார்கள் அம்மாக்கள்.

தலை வாரி பூச்சூடி உன்னை...

ஒரு பாட்டி, ''என்னோட பெரிய பேத்தி எல்.கே.ஜி. படிச்சப்ப... வீட்டுக்குப் போக விடாம ஸ்கூல்லேயே என்னை உக்கார வெச்சுட்டா. மூணு மாசம் நானும் அவளோட ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தேன். சின்னவ என்ன செய்யப் போறாளோ?'' என்கிறார். ''எங்களை விட்டுப் பிரிஞ்சு எம் பொண்ணு தனியா எங்கேயும் இருந்தது கிடையாது. தாத்தா பாட்டி வீட்டுக்குக் கூட எங்களை விட்டுட்டுப் போனது கிடையாது. எப்படிதான் தனியா ஸ்கூல்ல இருக்கப் போறாளோ?'' எல்.கே.ஜி. வகுப்பில் தனது பெண்ணை விட வந்திருந்த அப்பா ஒருவர், 'அபியும் நானும்’ பிரகாஷ்ராஜ் ஆக உருகினார்.

ஸ்கூலுக்குப் போகிற சந்தோஷத்தில், அப்பாவுடன் ஜம்மென்று பைக்கில் வந்திறங்கிய வாண்டு ஒருவன், செம சமர்த்தாக கிளாஸ் வரைக்கும் சென்றான். அங்கே முன்னரே வந்திருந்த சுட்டிகள் விதவிதமான டிசைன்களில் அழுதுகொண்டு இருக்க... கோரஸோடு சேர்ந்து தானும் வீறிட்டு அழ ஆரம்பித்துவிட்டான். சில நிமிடங்களுக்கு முன் வந்து விட்ட சீனியர் (!) சுட்டி, ''அழாதப்பா!'' என்று இன்னொரு சிறுவனைச் சமாதானம் செய்துகொண்டு இருந்தான்.

அழுதுகொண்டு இருந்த மகளிடம் அம்மா டாட்டா சொல்லும்படி கேட்க... ''நான் அழுவுறேன். நாளைக்கு டாட்டா சொல்றேன்'' என்று கவிதையாய் விளக்கம் சொல்ல... அம்மாவுக்குத் தாங்க முடியாத சிரிப்பு.

இதில் எல்.கே.ஜி. மிஸ்களின் பாடுதான் ரொம்பவே திண்டாட்டம். ''அமைதியா உக்காருவியாம். அம்மா வீட்டுக்குப்போய் சாப்பாடு கொண்டு வருவாங்களாம்'' என்று விடாமல் வீறிட்டுக்கொண்டு இருந்த ஒரு சுட்டியிடம் சொல்ல... ''மாத்தேன் போ'' என்றபடி அவரது கையைக் கடிக்கப் பாய்கிறான் அந்த டெரர் சிறுவன்.

வரும் வழியில் ஒரு பள்ளிக்கு இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏதும் இல்லாமல் குழந்தைகள் எல்லாம் சமர்த்தாகச் சென்றுகொண்டு இருக்க... எட்டிப்பார்த்து விசாரித்தால், ''சார், இது சி.பி.எஸ்.சி. ஸ்கூல். ஒண்ணாந்தேதியே ஆரம்பிச்சாச்சு. குழந்தைங்க எல்லாம் ரெண்டு வாரமா ஸ்கூலுக்கு வந்து பழகிட்டாங்க. அதான் இந்த அமைதி'' என்று பதில் கிடைக்கிறது.

அதானே பார்த்தோம்!

-ஆர்.லோகநாதன்

தலை வாரி பூச்சூடி உன்னை...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism