Published:Updated:

ஷுட்டிங் பார்க்கப் போவோமா?

ஷுட்டிங் பார்க்கப் போவோமா?

ஷுட்டிங் பார்க்கப் போவோமா?

ஷுட்டிங் பார்க்கப் போவோமா?

Published:Updated:
##~##

திருமயம் போகும் ரோடு. கண்மாயில் கூட்டமான கூட்டம். பாதையை அடைச்சுட்டு அப்படி ஒரு கூட்டம். போற வர்ற வண்டி எல்லாம் நின்னு நின்னுப் போவுது. அட, என்னன்னுதான் பாத்துட்டுப் போவோமேனு நாங்களும் போனோம். சுத்தி இருக்குற கிராமத்துச் சனம் அவ்வளவும் நிக்குது. ஜெனரேட்டர் ஒரு பக்கம் ஓடிக்கிட்டு இருக்கு. பட்டப் பகல்ல ரெண்டு மூணு லைட்டு எரிஞ்சு, கண்ணைக் கூசவைக்குது. கிரேன் மேல ஒரு ஆளு உட்காந்து இருக்காரு. ஒரு இடத்துல படுதாவைக் கட்டி நிழலை உருவாக்கி வெச்சிருக்காங்க. அதுக்குள்ள ஒரு டி.வி. பொட்டி ஒண்ணு இருக்கு. அதை ரெண்டு பேரு பாத்துக்கிட்டு இருக்காக.

ஷுட்டிங் பார்க்கப் போவோமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ரெண்டு மூணு பேரு தோள்ல பையைக் கட்டித் தொங்க விட்டுருக்காக. கூட்டத்தோட கூட்டமா நின்னு நாங்களும் பார்த்தா... அட, நம்ம 'களவாணி’ விமலு! தாடி எல்லாம் எடுத்துப்புட்டு, சும்மா மாப்புள்ளை கணக்கா ஒரு சின்னப் புள்ளைகிட்ட பேசிக்கிட்டு நிக்கிறாரு. அந்தப் புள்ளையும் புதுப் பொண்ணு கணக்கா வெட்கத்தோட விமலுகிட்ட பேசிக்கிட்டு இருக்கு. கூடவே ஒரு பாட்டியும் நிக்கிது.

விமலுக்கும் அந்தச் சின்னப் புள்ளைக்கும் குடை புடிச்சிருக்காக. அந்த அளவுக்கு உச்சி வெயில் உச்சந்தலையைப் பொளக்குது. வேடிக்கைப் பாக்குறவுக எல்லாம் வெயில் அடிச்சா என்ன, வெந்தா என்னன்னு வேடிக்கை யிலயே குறியா இருக்காக. அப்பப்ப தோள்ல பைய தொங்கப்  போட்டுருக்கவுக, அந்தச் சின்னப் புள்ளைக்கும் விமலுக்கும் முகத்தைத் தொடச்சுக்கிட்டே இருக்காக.

ஷுட்டிங் பார்க்கப் போவோமா?

இன்னொரு பக்கம் திரும்பிப் பாத்தா பக்கத்தில் நிக்கிற மரத்துக்கு எல்லாம் பெயின்ட் மாதிரி அடிச்சிட்டுருக்காக. அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு ஆளு மட்டும் வானத்தை அண்ணாந்து பாத்தமனியமாவே இருந்தாரு. தலையில தொப்பியோட நின்ன ஒருத்தரு, விமலுகிட்டயும் சின்னப் புள்ளைகிட்டேயும் மெதுவா காதுக்குள்ள என்னமோ சொல் றாரு.

வேடிக்கை பாக்க வந்த அத்தனைச் சனமும் என்ன சொல்றாருனு கேக்க கிட்டக்கப் போக முண்டி அடிக்குது. அதைக் கட்டுப்படுத்த ஒருத்தர், 'கொஞ்சம் ஓரமா நில்லுங்க’னு சொல்லிக்கிட்டே இருக்காரு. தொப்பி போட்டவரு 'ஷாட் ஓ.கே.’-னு சொல்றாரு. உடனே குடையை எடுத்துக்கிட்டு வந்து விமலுக்கும் அந்தச் சின்னப் புள்ளைக்கும் புடிக்கிறாக. அவுகளும் படுதா கட்டியிருந்த எடத்துக்கு வந்து உட்காந்துட்டாக.

அப்புறந்தான் தெரியுது, தொப்பி போட்டவரு நம்ம 'களவாணி’ டைரக்டரு சற்குணம். சரின்னு கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு, மெள்ள அவருகிட்ட பேச ஆரம்பிச்சோம்.

''படம் பேரு 'வாகை சூட வா’. டீச்சர் டிரெய்னிங்  முடிச்சிட்டு வாத்தியார் வேலை தேடுற கதாநாயகனுக்கும் அந்தக் கிராமத்திலேயே டீக்கடை வெச்சிருக்குற ஒரு பொண்ணுக்குமான காதல்தான் படத்தின் கதை. 1960-கள்ல நடக்கிற மாதிரியான கதை. இந்தப் படத்தோட கதைக் காகவே கண்டெடுத்தான்காடுங்கிற பேரில் ஒரு கோடி ரூபா செலவில் ஒரு கிராமத்தையே உருவாக்கி இருக்கோம். குளத்துக்குள்ள இருக்குற சன்னை மீன்கள் மழைக் காலங்கள்ல மரத்தில் ஏறிடும். அந்த ஸீனை ரொம்பக் கஷ்டப்பட்டு எடுத்துருக்கோம். குளத்தில் இருக்கும் நெட்டி தட்டையோட அசைவைவெச்சே உள்ளே இருக்குறது என்ன மீனுன்னு சொல்ற சிறுவர் களை இந்தப் படத்தில் நடிக்கவெச்சிருக்கோம். வேலைக்குப் போகும்போது பாதுகாப்புக்காகச் சுளுக்கில அரளி விஷத்தைத் தடவி எடுத்துக் கிட்டுப் போற அந்தக் கால போஸ்ட் உமன்கள், பின் கொசுவம்வெச்சு புடவை கட்டி இருக்கிற பெண்கள் இப்படிப் பழமை மாறாத அந்தக் காலத்துக் கிராமத்துக் கலாசாரத்தை அப்படியே படத்துக்குள்ள கொண்டு வந்துருக்கோம். கதாநாயகனுக்கு அப்பாவா பாக்யராஜ் சாரும், கதாநாயகியின் அப்பாவா தம்பி ராமையாவும் நடிச்சிருக்காங்க. வர்ற ஆகஸ்ட் மாசம் படம் ரிலீஸ். பார்த்துட்டு நீங்களே கேப்பீங்க... நம்ம ஊர் இவ்வளவு அழகானு?''.

ஷுட்டிங் பார்க்கப் போவோமா?

படத்தோட அருமை, பெருமையைச் சொன்ன சற்குணத்துக்கிட்ட, கதாநாயகியிடம் ஒரு வார்த்தை பேசிடுறோம்னோம். அவரு கேரவனுக்குள் இருந்த அந்தப் புள்ளைகிட்ட நம்மளை அழைச்சுக்கிட்டுப் போனார்.

''என் பேரு ஸ்ருதி. படத்துக்காக இனியா. ப்ளஸ் டூ முடிச்சிட்டு கரஸ்ல பி.பி.ஏ. பண்றேன். மலை யாளத்தில் ரெண்டு படம் பண்ணிருக்கேன். தமிழ்ல இதுதான் முதல் படம். நிறைய எதிர்பார்ப்போட இருக்கேன்''னு இனியா முடிக்கலை. 'ஷாட் ரெடி’ என்று வெளியே ஒருத்தர் கூவ, இனியா பறக்க... ஊரே பார்க்குது சினிமா ஷூட்டிங்!

- வீ.மாணிக்கவாசகம், ச.ஸ்ரீராம், படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism