Published:Updated:

கலைஞர் முதல் ரஜினி வரை!

குண்டு போடும் திருச்சி வேலுச்சாமி!

கலைஞர் முதல் ரஜினி வரை!

குண்டு போடும் திருச்சி வேலுச்சாமி!

Published:Updated:
##~##

திடுக்கிடவைக்கும் செய்திகளுக்கு, திருச்சி வேலுச்சாமி கியாரன்ட்டி!

ராஜீவ்காந்தி கொலை பற்றிய இவர் ஸ்டேட்மென்ட்கள்,  பரபரப்பைக் கிளப்பியவை. 60 வயதைத் தாண்டினாலும், 40 வயதுக்காரரைப்போல வாலிபத்துடன் வளைய வருகிறார். வேலுச்சாமியிடம் பேசினால், அவர் சொல்லும் பல செய்திகள், 'உண்மையா?, மனிதர் அளந்துவிடுகிறாரா?’ என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனாலும், இவர் சொல்லும் விஷயங்களைச் சுலபமாகப் புறக்கணித்துவிடவும் முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலைஞர் முதல் ரஜினி வரை!

''குளித்தலை பக்கம் நச்சலூர்தான் என் சொந்த ஊர். அப்ப எனக்கு பத்து வயசு இருக்கும். சட்டமன்றத் தேர்தல் நேரம். திடீர்னு ஒருநாள் எங்க ஊருக்கு மோரீஸ் மைனர் கார் வந்து நிக்குது. அதுல இருந்து ரெண்டு பேர் இறங்குறாங்க. அதுல ஒருத்தர் காலர் இல்லாத ஜிப்பா போட்டுகிட்டு அரும்பு மீசையோட இருக்கார்.

அந்தக் காலத்தில் கார் அபூர்வமான விஷயம். நானும் என் செட்டு பசங்களும் காரையே ஆர்வமா சுத்தி சுத்தி வர்றோம். வந்தவங்க, 'குன்னன் வீடு எங்கே இருக்கு?’ன்னு விசாரிக்கிறாங்க. அழைச்சுகிட்டுப் போறோம். வந்தவங்க குன்னன்கிட்ட ஏதோ பேச, 'என்கிட்ட நிறைய ஆளுங்க இருக்குறது உண்மைதான். அவங்க கட்சி வேலையும் செய்ய வருவாங்க. ஆனா, இந்த ஊர்ல இருக்குற நடுத்தெருப் பெரியவரை மீறி நாங்க எதுவும் செய்ய மாட்டோம். அவரு மனசுவெச்சாத்தான் நாங்க வேலை செய்ய முடியும்’னு சொல்றாரு குன்னன். 'சரி... அவரைப் போய் பார்ப்போம்’னு பெரியவர் வீட்டை நோக்கி எல்லாரும் போறாங்க.

அப்ப நடுத்தெரு பெரியவர் வீட்டுல ஊர் விஷயம் தொடர்பா ஏதோ பஞ்சாயத்து. வீட்டுத் திண்ணையில நடுத்தெரு பெரியவர் நாற்காலியில் உக்காந்து பேசிட்டு இருக்க, மத்தவங்க நின்னுட்டு இருக்காங்க. போன வேகத்தில் டக்குன்னு பெரியவர் கால்ல விழுந்துட்டாரு அந்த அரும்பு மீசைக்காரர். பெரியவர் பதறிப்போய், 'என்னடா... என்ன விஷயம்?’னு குன்னனைப் பார்த்துக் கேட்கிறார்.

கலைஞர் முதல் ரஜினி வரை!

'இவர் பேரு கருணாநிதி. சினிமாவுல கதை வசனம் எல்லாம் எழுதுறவரு. நம்ம குளித்தலை தொகுதியில போட்டி போடறாரு’னு குன்னன் சொல்றாரு. 'சரி... அதுக்கு எதுக்கு என் கால்ற விழுறார்?’னு பெரியவர் கேட்க... 'நீங்க ஆதரவு தர்றேன்னு சொன்னாத்தான், நான் எழுந்திருப்பேன்’னு கீழே இருந்து குரல் வருது. பெரியவர் சரி சொன்ன பிறகுதான் முக மலர்ச்சியோடு எழுந்திருச்சார் அரும்பு மீசைக்காரர். கருணாநிதியை நான் முதன்முதலா இப்படித்தான் சந்திச்சேன்.

1998-ம் வருஷம் கன்னியாகுமரியில இருந்து சென்னைக்கு 35 நாட்கள் நடைப்பயணம் போனார் ம.நடராஜன். அப்ப அமல்ல இருந்த பொடா சட்டத்தை எதிர்த்துதான் அந்த நடைப்பயணம். 'சகோதரத்துவ நடைப்பயணம்’ என்ற பெயர்ல புறப்படுறோம். நான்தான் ஒருங்கிணைப்புப் பணிகளைக் கவனிச்சேன். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து புறப்படுறோம். அதுவரை நடராஜன் பொது நிகழ்ச்சிகளுக்கு அதிகம் வந்தது இல்லை. அரசியல்ல சில முக்கிய முடிவுகளை எடுக்கப் பின்புலமா இருந்தாலும், அவரை 'நிழல் மனிதர்’னுதான் பத்திரிகைகள்ல வர்ணிச்சாங்க. இந்த நடைப்பயணம் முடிஞ்ச பிறகுதான் முழு வீச்சில் அரசியல் விவகாரங்கள்ல தலையிட ஆரம்பிச்சாரு.

கோவையில குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த பிறகு, மத நல்லிணக்கக் கூட்டம் நடத்தினோம். அந்த நிகழ்ச்சியில், நடராஜனும் மதுரை ஆதீனமும் ஒண்ணாக் கலந்துக்கிட்டாங்க. அதுக்கு முன்னாடி ரெண்டு பேருக்கும் இடை யில் அறிமுகம் உண்டுனாலும், அவங்களுக்கு இடையில் நட்பு மலர்ந்தது அந்த மேடையில்தான்.

கலைஞர் முதல் ரஜினி வரை!

ரஜினி அரசியலுக்கு வருவாரா?, வந்தா நல்லா இருக்குமே!னு எல்லோரும் எதிர்ப்பார்ப்போடு இருந்த காலகட்டம். ரஜினியோட பல்ஸ் பார்க்கலாம்னு நடராஜனுக்கு ஓர் எண்ணம். அப்ப நடிகர் சங்கத் தலைவரா ராதாரவி இருந்தார். 'ரஜினி அரசியலுக்கு வருவாரா?’னு அவர்கிட்ட கேட்டப்ப 'அதை நான் எப்படிங்க அவருகிட்ட கேட்க முடியும்? நீங்களே கேட்டுப் பாருங்க’ன்னு சொல்லிட்டார்.  ரஜினியை அவரோட வீட்ல சந்திச்சுப் பேசினோம். சந்திப்பு ரொம்ப நேரம் நீண்டது. பேசி முடிச்சுட்டு வெளியே வந்ததும் நான் நடராஜன்கிட்ட சொன்னேன்... 'இவர் இப்ப மட்டும் இல்ல; எந்தக் காலத்துலயும் அரசியலுக்கு வர மாட்டார்’னு. என்னோட கணிப்பு தப்பலை!''

- சிரித்தபடி விடை தந்தார் வேலுச்சாமி!

-ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்