Election bannerElection banner
Published:Updated:

அது திருச்சிராப்பள்ளி காலம்!

ஒரு ஃப்ளாஷ்பேக்

##~##

திருச்சிராப்பள்ளி நகரம், விஜயநகர மன்னர்களால் உருவாக்கப்பட்டது. அவர்களுடைய அரண்மனைதான் தற்போது டவுன் ஹாலில் உள்ள தாலுகா அலுவலகம். நகரத்தின் கோட்டையை அந்நியர்களின் படையெடுப்பில் இருந்து பாதுகாத்தது அகழி. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக் காரர்கள், ஆற்காடு நவாப் ஆகியோர் கோட்டையைப் பிடிக்க பல யுத்தங்களை நடத்தி உள்ளனர். 1801-ல் ஆற்காடு நவாப்புக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் ஏற்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி வந்தது. 1802-ம் ஆண்டில் ஜில்லா அந்தஸ்துடன் திருச்சி உருவாக்கப்பட்டது. 1865-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி நகராட்சி உருவானது. நகரத்தை விரிவாக்கும்போது, கோட்டை மதில் சுவர் இடிக்கப்பட்டு, அகழிகள் மூடப்பட்டன. சுற்றி இருந்த கிராமங்களான உறையூர், சிந்தாமணி, செங்குளம், வடவூர், வரகனேரி உள்ளிட்டவை இணைக்கப்பட்டு நகராட்சியானது!'' திருச்சி நகரத்தின் வரலாற்றை ஒரே பாராவில் சுருக்கமாகச் சொல்கிறார் முருகானந்தம். இவர், திருச்சிராப்பள்ளியின் நூற்றாண்டு கால வரலாற்றைச் சொல்லும் 'நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி’ என்ற புத்தகத்தை எழுதியவர்.

அது திருச்சிராப்பள்ளி காலம்!

''மூன்று ஆண்டு கால கடும் உழைப்பின் பலன் இந்தப் புத்தகம். நண்பர்கள் தி.மா.சரவணன், பைம்பொழில் மீரான், கவிஞர் நந்தலாலா ஆகியோர் என்னுடன் இணைந்து பணியாற்றினார்கள்!''  எனும் முருகானந்தம், பழைய புகைப்படங்களை சிலவற்றைக் கொண்டு திருச்சியின் வரலாற்றை விவரித்தார்.

''1858-ம் ஆண்டு திருச்சி நகரத்தை ஆங்கிலேயர்கள் விரிவாக்கம் செய்தபோது, கோட்டை மதில் சுவரை தரைமட்டமாக்கி, அகழியைத் தூர்த்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது. அகழி இருந்த இடம்தான் தற்போது மேலரண் சாலை (மேல புலிவார்டு ரோடு), கீழரண் சாலை (கீழ புலிவார்டு ரோடு) என்று அழைக்கப்படுகிறது. மதில் சுவரில் இடிக்கப்படாமல் விடப்பட்ட சிறிய பகுதிதான், தற்போது தெப்பக்குளம் அருகே உள்ள கோட்டைச் சுவரும், நீண்ட மரக் கதவும் உள்ள பகுதி.

1926-ல் காவிரி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது, உடைந்துவிட்ட காவிரி ஆற்றுப் பாலத்தை மக்கள் பெருந்திரளாக வந்து வேடிக்கை பார்த்த காட்சி. இந்த வெள் ளத்தில் திருச்சி நகரம் முழுக்கவே தத்தளித்தது.

அது திருச்சிராப்பள்ளி காலம்!

இது 1930-க்கு முன்பு எடுக்கப்பட்ட மலைக் கோட்டை, என்.எஸ்.பி. ரோடு தோற்றம். மலைக்கோட்டையில் தற்போது உள்ள மணிக் கூண்டு அப்போது கட்டப்படவில்லை. சிந்தாமணி சூப்பர் பஜாருக்கு எதிரில் அந்தக் காலத்தில் மாட்டுவண்டி ஸ்டாண்ட் இருந்த தைப் படத்தில் காணலாம். அதேபோல், தெப்பக்குளத்தில் ஒரு படித்துறை இருந்து உள்ளது.

1954-ல் மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். இதில் லூர்து மேரி சர்ச்சையும், அதன் பின்புறம் தற்போது உள்ள தில்லைநகர் வயல்வெளியாகக் காட்சி அளிக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் உருவாகிக்கொண்டு இருந்ததையும் காணலாம்.

1965-ல் தேவர் மன்றத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்ட மாநாடு. இந்த தேவர் மன்றம் இடிக்கப்பட்டு, தற்போது புதிதாகக் கட்டப்பட்டு உள்ளது.

அது திருச்சிராப்பள்ளி காலம்!

1972-ல் திருச்சி காவிரி ஆற்றில் மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் ஜெயின்ட் ஜோசப் கல்லூரியின் விளையாட்டு மைதானம் முழுக்க நீர் நிரம்பி இருக்கும் காட்சி. தற்போது அந்த மைதானம் இருந்த பகுதி, வணிக வளாக மாக மாறி உள்ளது!'' என்கிறார் முருகானந் தம்.

- ஆர்.லோகநாதன், படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு