Election bannerElection banner
Published:Updated:

தித்திக்கும் சாலை!

தித்திக்கும் சாலை!

##~##

திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் காவிரி ஆற்றுப் பாலத்தை அடுத்து இருக்கிறது மாம்பழச் சாலை. மாம்பழக் கடைகள் நிறைந்த சாலை என்பதால் இந்தச் சாலைக்கே இந்தப் பெயர்.

 மாம்பழ சீஸனில் இரவு நேரத்தில் வாசனை கமகமக்கக் கூடுகிறது மாம்பழச் சந்தை. இரவு 8 மணிக்கு மேல் மாம்பழ வரத்தால் பரபரப்பாகும் ஏரியா, விடியற்காலை 5 மணிக்குள் பழங் கள் விற்பனை முடிந்து அமைதியாகிவிடுகிறது.

தித்திக்கும் சாலை!

மாம்பழச் சாலையின் ஒரு பக்கமாகக் கூரையால் ஆன கொட்டகைகள் போடப் பட்டு இருக்கின்றன. ஒவ்வோர் உரிமையாள ருக்கும் ஒவ்வொரு கொட்டகை. ஒவ்வொருவரும் தத்தமது கொட்டகைகளில் பழங் களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள்.

''என் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து இங்கே மாம்பழச் சந்தை கூடுது. காவிரிக் கரையோரப் பகுதிகளில் மாந்தோப் புகள் நிறைய இருக்கிறதால, அங்கே பறிக்கிற பழங்களை எல்லாம் இங்கே கொண்டுவந்து ஆரம்பத்தில் வித்தாங்க. பழ வியாபாரிகள் நிறையப் பேர் வர ஆரம்பிக் கவே, சுத்துவட்டாரத்துல இருக்குற தோப்பு களில் இருந்தும் மாம்பழங்கள் இங்கே விற்பனைக்கு வர ஆரம்பிச்சது. அப்படித் தான் இந்த ஏரியாவுக்கு மாம்பழச் சாலைனு பேர் வந்துச்சு. ஆனி மாசம் ஆரம்பிக்கும் வியாபாரம்... ஆடி 18 வரை களை கட்டும்!'' என்று விவரம் சொல்கிறார் மாந்தோப்பின் உரிமையாளரான பெரியவர் கரிவண்ணன்.

பழங்களைத் தங்களது கொட்டகை களுக்குக் கொண்டுவந்து சேர்த்ததும், பிரம்புத் தட்டுகளை எடுத்துவைத்து பழங் களை அடுக்கத் தொடங்குகிறார்கள். பெரிய மாம்பழங்களாக இருந்தால் தட்டுக்கு 60 பழங்களும்,  சிறிய மாம்பழங்களாக இருந்தால் 75 பழங்கள் வரை பிடிக்கிறது.

தித்திக்கும் சாலை!

கொட்டகையில் இருந்து 50-ல் இருந்து 100 மீட்டர் தூரம் வரை இருக்கிறது பழங்கள் விற்கும் இடம். நள்ளிரவைத் தொடும் நேரத்தில், தட்டுகள் மாம்பழச் சாலையில் கொண்டுவந்து வைக்கப்படுகின்றன. இங்கும் ஒவ்வொருவரும் தனித் தனி இடம்வைத்து இருக்கிறார்கள். இப்படி அடுக்கும் பணி, விடியற்காலை 4 மணி வரை நீடிக்கிறது.

பஸ்கள், லாரிகள் என்று கிடைக்கும் வாகனங் களில் வந்து வியாபாரிகள் மாம்பழச் சாலையை அடைகிறார்கள். பேருந்து வசதி சரிவர இல்லாத ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகள், இரவே வந்து படுத்துக்கிடக்கிறார்கள். அவர்களும் தூக்கம் கலைந்து எழுந்து தயார் ஆகிறார்கள். தட்டுகள் முழுமையாக அடுக்கி முடிக்கும் வரை அந்தப் பக்கம் வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை. அவர்கள் வெளியே நின்றுகொண்டு இருக்கிறார் கள்.

விற்பனை தொடங்குவதற்கு முன்னர் தட்டு உரிமையாளர்கள் தத்தமது இடத்துக்குப் போய் நிற்க...

'விற்பனைக்கு ரெடி’ என்று சிக்னல் கொடுக்கப் பட்டதும், பரபரவென உள்ளே நுழைகிறார்கள் வியாபாரிகள். இமாம் பசாந்த், ருமேனியா, பங்கனப்பள்ளி, நீலம் என்று வகை வகையாக மாம்பழங்கள் இருக்க... தங்களுக்கு வேண்டப் பட்ட பழம் எங்கே இருக்கிறது என்று தேடிப் போய் வாங்குகிறார்கள். நீல மாம்பழம் ஒரு தட்டு  

தித்திக்கும் சாலை!

300 என்று விலை சொல்லப்பட...    

தித்திக்கும் சாலை!

  250-க்குப் பேரம் பேசி வாங்குகிறார் ஒருவர்.

வாங்கப்படும் மாம்பழங்கள், பெரும்பாலும் தட்டுவண்டிகள் அல்லது கூடைகளில் தலைச் சுமையாகக் கொண்டுசெல்லப்பட்டு தெருக்களில் விற்கப்படுகின்றன. மாம்பழச் சாலை இப்போது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கான்ட்ராக்ட் எடுத்து இருப்பவருக்கு ஒரு தட்டுக்கும்

தித்திக்கும் சாலை!

2 கமிஷனாகத் தர வேண்டும்.

''நான் 6 வருஷமா வியாபரத்தில் இருக்கேன். 10 தட்டுங்க வரைக்கும் வாங்குவேன். கிராமங் களுக்குக் கொண்டுபோய் தெருத் தெருவா கூவி விப்பேன். ஒரு நாளைக்கு

தித்திக்கும் சாலை!

200 இருந்து

தித்திக்கும் சாலை!

300 வரை லாபம் கிடைக்கும். சீஸன் நேரத் தில்தான் இந்த வருமானம். மத்த நேரத்தில் வேற தொழில் பார்க்க வேண்டியதுதான்!'' என்றார் முத்து என்ற வியாபாரி.

4 மணிக்கு ஆரம்பமாகும் வியாபாரம், 5 மணிக்குள் முடிவுக்கு வருகிறது. வாங்கிய வியாபாரிகள் விற்பதற்காகக் கூடைகளைச் சுமந்துகொண்டு செல்ல... விற்பனை செய்தவர் கள் பணத்தை எண்ணி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். கிட்டத் தட்ட எல்லா மாம்பழங்களும் விற்றுவிடுகின்றன!

- ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு