Published:Updated:

எம்.ஜி.ஆரின் திருச்சி கனவு!

எம்.ஜி.ஆரின் திருச்சி கனவு!

##~##

றையூரில் காவேரி கல்லூரி ஹாஸ்டலின் பின்புறம் இருக்கிறது அந்த பங்களா. தென்னந்தோப்புகளுக்கு நடுவில் 'சந்திரமுகி’ பங்களாவை நினைவூட்டுவதுபோல் பாழடைந்து காணப்படுகிறது. ஏகப்பட்ட சிதிலங்கள்!

1984-ம் வருடம் இந்த பங்களாவை

எம்.ஜி.ஆரின் திருச்சி  கனவு!

4 லட்சத்துக்கு வாங்கி இருக்கிறார் எம்.ஜி.ஆர். 'ராமாவரம் தோட்டத்தில் இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் திரு. கோபாலமேனன் அவர்களின் புதல்வர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன்’ வாங்கியதாகப் பத்திரம்

எம்.ஜி.ஆரின் திருச்சி  கனவு!

சொல்கிறது.

தமிழகத்தின் மத்தியில் இருக்கும் திருச்சியைத் தலைநகராக்கத் திட்டம் தீட்டிய எம்.ஜி.ஆர்., கட்சி அலுவலகம் அமைப்பதற்காகவே இந்த இடத்தை வாங்கினார் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். பங்களாவை வாங்கிய பின்னர் மராமத்து வேலைகள் பார்த்து, கனஜோராகத் தயாரான நிலையில், எம்.ஜி.ஆரின் உடல்நிலை சரியில்லாமல் இறக்க, அதன் பின்னர் பங்களா கேட்பாரற்றுப் போனது. அப்போதைய மாவட்டச் செயலர் நல்லுசாமி, பங்களாவுக்கு வாட்ச்மேன் ஒருவரை நியமித்து பாதுகாத்து வந்தார். இதைஅடுத்து பொறுப்புக்கு வந்த மாவட்டச் செயலர்கள், அந்த வாட்ச்மேனுக்குச் சம்பளம் கொடுத்து வருகிறார்கள்.

எம்.ஜி.ஆரின் திருச்சி  கனவு!

பங்களாவுக்கு 22 வருடங்களாக வாட்ச்மேனாக இருக்கும் ஆறுமுகம், ''எனக்குச் சொந்த ஊரு மணச்சநல்லூருக்குப் பக்கத்தில் இருக்குற நொச்சியம். மூத்த மகன் விசு கைக்குழந்தையா இருக்கும்போது மனைவி செல்வமணியோட இங்கே வந்தேன். கூடவே ஒரு கன்னுக்குட்டியையும் ஓட்டிக்கிட்டு வந்தேன். ஆரம்பத்தில் பங்களாவுக்குப் பக்கத்தில் இருக்குற அவுட் ஹவுஸ்லதான் குடியிருந்தேன். காலப்போக்கில் கூரையெல்லாம் போய் குடியிருக்க முடியாத நிலை வந்துடுச்சு. அதுக்கப்புறம் பங்களா முன் பக்கத்திலேயே பொட்டி படுக்கையைக் கொண்டுவந்து வெச்சுகிட்டேன்.  15 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நிறைய குரங்குகள் வரும். தென்னை மரத்தில் ஏறி உலுக்கி, பங்களா உள்ளே புகுந்து பொருட்களை எடுத்துப்போட்டு துவம்சம் பண்ணி... ஏகப்பட்ட சேட்டை பண்ணும். அதனாலயே இந்த பங்களாவுக்குக் குரங்கு பங்களானு பேரு வந்துடுச்சு. பராமரிப்பு இல்லாத தால், பங்களா கொஞ்சம் கொஞ்சமா வீணாப் போயிடுச்சு. 10 வருஷத்துக்கு முன்னாடி 'பேய்ப் படம் எடுக்கப்போறோம்’னு சொல்லிகிட்டு சினிமாக்காரங்க சிலர் வந்தாங்க. அப்புறமா, 'பங்களா ரொம்ப வீக்கா இருக்குது. தாங்காது’னு சொல்லிட்டு அவங்களே திரும்பப் போயிட்டாங்க.

சொற்ப சம்பளம்தான் எனக்கு. ஊர்ல இருந்து ஓட்டிட்டு வந்த கன்னுகுட்டிதான், இன்னிக்கு வளர்ந்து பால் கொடுத்து என் குடும்பத்தைக் காப்பாத்துது. எம்.ஜி.ஆர். பங்களாவைப் பத்திரமா பாத்துக்குறோம்ங்கிற ஆத்ம திருப்தி போதும்!'' என்கிறார் நெகிழ்வாக!

-ஆர்.லோகநாதன்

அடுத்த கட்டுரைக்கு