Published:Updated:

நீரும் நெருப்பும்!

சீர்காழி ட்வின்ஸ் கலாட்டா

##~##

ருவரைப்போல் இன்னொருவர் என்பது எல்லோருக்குமே ஆச்சர்யமானதுதான். ஆனால், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும் இதற்கு விதிவிலக்கு.  காரணம்... இந்தப் பள்ளியில் 45 ஜோடி இரட்டையர்கள் படிக்கிறார்கள்!

 ஒரு வீட்டில் இரட்டைக் குழந்தைகள் இருந்தாலே அவர்களைச் சமாளிப்பது கடினம். இப்படி 45 ஜோடிகளை எப்படிச் சமாளிக்கிறார்கள்?

நீரும் நெருப்பும்!

''டேய்... உங்கள்ல அருண் யாரு?'' என்று யு.கே.ஜி. வகுப்பில் ஒரு இரட்டையர் ஜோடியைக் கேட்கிறார் எல்.கே.ஜி. இன்சார்ஜ் வானதி. சம்பந்தப்பட்ட இருவரும் ஒரே மாதிரி விழிக்க... ''இப்படித்தான் சார் படுத்திடுவானுங்க. இதோ இந்த ஆண், பெண் இரட்டையர்களைப் பாருங்க. அதில் பெண் குழந்தை ஜீவரியா எல்லா விஷயத்திலும் ரொம்பவே க்யூட். அதனால் அவங்க கிளாஸ் மிஸ் அவளை அடிக்கடி கொஞ்சுவாங்களாம். அது ஆண் குழந்தை ஜாகீருக்குப் பொறாமையாகி வீட்ல போய் 'எங்க மிஸ் அவளை மட்டும் கொஞ்சுறாங்க... என்னைக் கொஞ்சவே மாட்டேங்குறாங்க’னு புகார் பண்ணிட்டான். அவனோட அப்பா அம்மா வந்து  'ஏன் இப்படி செய்யுறீங்க?னு கேட்குறாங்க!'' என்றார் வானதி.

நீரும் நெருப்பும்!

நான்காம் வகுப்பில் மட்டும் 14 ஜோடி இரட்டையர்கள் இருக்கிறார்கள். ''அது என்னவோங்க, இரட்டையர்கள்னா ஒரே மாதிரியான குணம்தான் இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, ஒவ்வொரு இரட்டையிலும் எதிர்மறை குணாதிசயங்களும் இருக்கு. ஒருவர் முரடுன்னா இன்னொருவர் சாது. ஒருவர் சுறுசுறுப்புன்னா இன்னொருவர் மசமச. ஆனால், ஒருவன் அழுதால் கட்டாயம் இன்னொருத்தனும் அழுறான். ஒருத்திக்கு வயித்து வலின்னா இன்னொருத்தியும் 'வலிக்குது’னு அழறா. ரெண்டு பேரையும் சேர்த்தே சமாதானம் செய்ய வேண்டி இருக்கு!'' என்கிறார் நான்காம் வகுப்பு ஆசிரியையான ஹேமா.

''இவ்வளவு இரட்டையர்கள் எங்க பள்ளியில் படிப்பது எங்களுக்குப் பெருமை. ஆண்டு விழா சமயத்தில் அவர்களுக்காகவே தனி விழா நடத்துவோம்!'' என்கிறார் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர் சிங்.

நீரும் நெருப்பும்!

அத்தனை இரட்டைக் குழந்தைகளையும் வரிசையில் நிறுத்தி படம் எடுக்கும்போது இரட்டையர்களின் உருவ ஒற்றுமை நம்மை பிரமிக்க வைத்தது. அச்சு அசலாக அப்படியே ஒருவரைப்போல் மற்றவர். யூனிஃபார்மும் ஒன்றாக இருப்பதால் நம்மால் குழந்தைகளை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. பள்ளியில் இருந்து விடைபெற்று வந்து வெகு நேரத்துக்குப் பிறகும் நினைவுகளில் நீங்காமல் இருக்கிறது அந்த அழகு தெய்வங்களின் அணி வகுப்பு!  

- கரு.முத்து, படங்கள்: எம்.ராமசாமி

அடுத்த கட்டுரைக்கு