Election bannerElection banner
Published:Updated:

60 நொடியில் 62 ஐ லவ் யூ!

திருச்சியில் என் கொண்டாட்டம்

##~##

ப்போதும் வெயில் கொளுத்தும் திருச்சியில், ஜில் மழை பெய்ததுபோல் அன்று கோலாகலம்...  காரணம் 'என் கொண்டாட்டம்’! 'விகடன்’ - 'குமுதம் டிபார்ட்மென்டல் ஸ்டோர்’ இணைந்து நடத்திய இந்தக் கொண்டாட்டத்தில் ஏக உற்சாக வெள்ளம். இக்கொண்டாட்ட மேளாவின்போது விகடன் குழும இதழ்களுக்கு

60 நொடியில் 62 ஐ லவ் யூ!

900 சந்தா கட்டினால்,

60 நொடியில் 62 ஐ லவ் யூ!

450 மதிப்புள்ள தங்களுக்கு விருப்பமான வீட்டு உபயோகப் பொருட்களை எடுத்துச் செல்லலாம். அறிவிப்பு வெளியானது முதல் கொண்டாட்ட தேதிக்குக் காத்திருந்து, குமுதம் டிபார்ட்மென்டல் ஸ்டோரின் நான்கு கிளைகளையும் மொய்த்துவிட்டார்கள் வாசகர்கள்.  

 உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த 60 வயதைத் தாண்டிய கிருஷ்ணன், 'ஆனந்த விகடன்’, 'அவள் விகடன்’ மற்றும் 'சுட்டி விகடன்’ அடங்கிய 'ஃபேமிலி பேக்’ பதிவு செய்திருந்தார். ''நான் கல்லூரி படிக்கிற காலத்துல இருந்து விகடன் வாசகன். வீட்டுக்கு பேப்பர் வர்ற நேரத்துலேயே விகடனையும் கொண்டுவந்து சேர்க்குறதா சொல்லி இருக்கீங்க. அதான், உடனடியா சந்தாதாரராக மாறிட்டேன்!'' என்று உற்சாகத்துடன் சொன்னார்.

60 நொடியில் 62 ஐ லவ் யூ!

வாசகர் கோவிந்தராஜன் விகடன் குழுமத்தின் அத்தனை இதழ்களுக்கும் சந்தா செலுத்தியதுடன் விரைவில் வரவிருக்கும் டாக்டர் விகடனுக்கும் முன்கூட்டியே சந்தா செலுத்தினார். ''விகடன் குழுமத்தில் இருந்து எது வந்தாலும் அது பயன்உள்ளதாகவே இருக்கும்!'' என்றார் அவர்.

சந்தா கட்டியவர்களுக்கு பரிசு மழை ஒரு பக்கம் என்றால், ஹலோ எஃப்.எம்-மின் ஆர்.ஜே-க்களான ஞானமும் ப்ரீத்தாவும் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொன்னவர்களுக்கு இன்னொருபுறம் பரிசு மழை!

செந்தில்குமார்- உமா தம்பதியிடம், ''விகடன் நிறுவனத்தில் இருந்து மொத்தம் எத்தனை பத்திரிகைகள் வருகின்றன? பெயர்களைச் சொல்லுங்க'' என்று கேட்டார் ஞானம். ''ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், நாணயம் விகடன்'' என்று செந்தில்குமார் ஆரம்பித்து வைக்க... ''அவள் விகடன், சுட்டி விகடன், சக்தி விகடன்'' என்று உமா தொடர... ''பசுமை விகடன், மோட்டார் விகடன்'' என்று முடித்து வைத்தார் செந்தில்குமார். அவர்களது ஆர்வத்தைப் பார்த்து, ''விகடன் நிறுவனத்தில் இருந்து இன்னொரு பத்திரிகை, கூடிய விரைவில் வரப்போகுது. அதோட பேர் என்ன?'' என்று கூடுதல் கேள்வியைக் கேட்டுவிட்டு, ''அந்தப் பத்திரிகை தொடர்பான விளம்பரம் இந்த இடத்துலேயே இருக்குது. 30 விநாடிகள்ல கண்டுபிடிச்சு சொல்லுங்க'' என்று சொல்ல... பரபரவென கடையை ஒரு வலம் வந்துவிட்டு, ''டாக்டர் விகடன்!'' என்று இருவருமே கோரஸாக சொல்லிப் பரிசை அள்ளிக்கொண்டார்கள்.

60 நொடியில் 62 ஐ லவ் யூ!

இல்லத்தரசியான மகாலட்சுமிக்கு ஒரு சவால். ''மெய் எழுத்துகளை வரிசை பிறழாமல் சொல்லுங்க'' என்று ஆர்.ஜே. ப்ரீத்தா கேட்க... ''ப்பூ... இதென்னங்க. ஒண்ணாங் கிளாஸ் கேள்வி'' என்று பில்ட்-அப் கொடுத்தார். ஆனால், ''க்,ங்,ச்,ஞ்,ட்,ண்...'' என்று ஆறு எழுத்துகளுக்கு மேல், தடுமாற ஆரம்பித்துவிட்டார். கல்லூரி மாணவியான அனன்யாவை மடக்கி இந்தக் கேள்வியை வீசியபோது, ''வாட்... மெய் எழுத்தா? அப்படின்னா என்ன? '' என்று அதிர வைத்தார். பலரும் முழுதாச் சொல்ல முடியாமல் தடுமாறி நழுவ... கடைசியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சுட்டி நவீன்ராஜ் சரியான பதிலைச் சொல்லிப் பரிசைத் தட்டினான்.

60 நொடியில் 62 ஐ லவ் யூ!

கல்லூரி மாணவியான நிரோஷாவிடம், ''ஐ லவ் யூ ஆனந்த விகடன் என்று ஒரு நிமிடம் மூச்சு விடாமல் சொல்ல வேண்டும்''  என்று சொல்ல... 62 முறை சொல்லி திணறடித்தார். ''வேற யாருக்காவது சொல்லி இருக்கீங்களா? நிறைய பிராக்டிஸ் செஞ்சதுபோல இருக்குதே'' என்று ஞானம் தனது சந்தேகத்தைக் கேட்க... பரிசை வாங்கிக்கொண்டு நைசாக நழுவினார் நிரோஷா.

திருச்சி விகடன் வாசகர்களுடன் ஜாலி, கேலி, மகிழ்ச்சி, நெகிழ்ச்சியுடன் நடந்து முடிந்தது 'என் கொண்டாட்டம்’!

-ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு