Published:Updated:

நீங்களும் செய்யலாம்: இது ஆரோக்கிய டீ!

நீங்களும் செய்யலாம்; இது ஆரோக்கிய டீ!
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் செய்யலாம்; இது ஆரோக்கிய டீ!

கிரீன் டீ, கிரீன் காபிக்கும் மாற்று வழி கண்டுபிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த வள்ளியம்மை அருணாசலம்.

நீங்களும் செய்யலாம்: இது ஆரோக்கிய டீ!

கிரீன் டீ, கிரீன் காபிக்கும் மாற்று வழி கண்டுபிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த வள்ளியம்மை அருணாசலம்.

Published:Updated:
நீங்களும் செய்யலாம்; இது ஆரோக்கிய டீ!
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் செய்யலாம்; இது ஆரோக்கிய டீ!

புத்தாண்டு சபதங்களில் உணவுக் கட்டுப் பாட்டைப் பின்பற்றப்போவதாக உறுதிமொழி ஏற்ற பலரும் காபி, டீக்கு விடைகொடுப்பது அல்லது குறைத்துக்கொள்வது என்பதையும் லிஸ்ட்டில் வைத்திருப்பார்கள். மணிக்கொரு காபி, டீ அருந்திப் பழகியவர்களுக்கு அது கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும், முயன்றால் முடியாத அளவுக்கு அது மாபெரும் சவாலும் அல்ல!

நீங்களும் செய்யலாம்: இது ஆரோக்கிய டீ!

காபி, டீக்கு பதிலா கிரீன் காபியும் கிரீன் டீயும் குடிக்கலாமா என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு. பாலும் சர்க்கரையும் சேர்க்காத இந்த இரண்டும் ஓகேதான் என்றாலும் நாக்கு கேட்குமா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிரீன் டீ, கிரீன் காபிக்கும் மாற்று வழி கண்டுபிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த வள்ளியம்மை அருணாசலம்.

எம்.சி.ஏ பட்டதாரியான இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்த படியே இன்னொரு பிசினஸையும் செய்கிறார். அது ஆரோக்கியமான டிப் பேக்ஸ் தயாரிப்பு!

நீங்களும் செய்யலாம்: இது ஆரோக்கிய டீ!

‘’பூர்வீகம் காரைக்குடி.ஆரோக்கிய விஷயத்துல எனக்கு ரொம்ப அக்கறை உண்டு. அது சம்பந்தமா நிறைய விஷயங்களைத் தேடுவேன். காபி, டீயைக் குறைக்கணும்னு முடிவு பண்ணினபோது, மத்தவங்களைப் போலவே நானும் அதுக்கு மாற்று தேடினேன். வேலை பார்க்கிற இடங்களில் டீ, காபிதான் கிடைக்கும். அது வேண்டாம்னா பால் கிடைக்கும். அவ்வளவுதான்.அப்பதான் வெந்நீரில் முக்கி உடனே குடிக்கிற மாதிரியான டிப்ஸ் பத்தி யோசிச்சேன். இப்போதைக்கு டீ மட்டும்தான் இப்படி டிப் பேக்ல கிடைக்குது. அதையே ஆரோக்கியமான முறையில எப்படித் தயாரிக்கலாம்னு யோசிச்சபோது ஒரு ஐடியா வந்தது. சங்குப்பூ, துளசி, முருங்கை, நித்யகல்யாணி, தொட்டாச்சிணுங்கி, ஆவாரம்பூ மற்றும் லெமன்கிராஸ்னு ஏழு வகைகளில் டிப் பேக்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். ஏழு நாள்களுக்கு ஏழு வெரைட்டி, தினம் ரெண்டு வேளைகள் குடிக்கிற மாதிரி பிளான் பண்ணினேன். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், சித்த மருத்துவர்கிட்ட பேசி, மருத்துவப் பலன்களை உறுதிசெய்த பிறகுதான் தயாரிப்பு வேலைகளில் இறங்கினோம்.

ஆரம்பத்தில் இந்த கான் செப்ட்டை மத்தவங்களுக்குப் புரியவெச்சு உபயோகப்படுத்த வைக்கிறதுல பெரிய சவால் இருந்தது. ஆனா, ஒருமுறை பயன்படுத்தினவங்களுக்கு பிடிச்சுப்போய் தொடர்ந்து வாங்க ஆரம்பிச்சாங்க. பிரச்னைகள் இருக்கறவங்க தொடர்ந்து 48 நாள்கள் குடிச்சா நிவாரணம் கிடைக்கும். பிரச்னைகளே இல்லாதவங்க ஆரோக்கியத்துக்காகக் குடிக்கலாம்.

இது ஆரோக்கிய டீ!
இது ஆரோக்கிய டீ!

சங்குப்பூ பெண்களுக்கு நல்லது. குறிப்பாக பீரியட்ஸ் பிரச்னைகளுக்கு. முருங்கையின் பலன்கள் எல்லோருக்கும் தெரியும். துளசி, சளி, இருமலுக்கு நல்லது. நித்யகல்யாணி, சிறுநீரக ஆரோக்கியத்துக்கானது. தொட்டாச்சிணுங்கி உடல் பலத்துக்கு. ஆவாரம்பூ நீரிழிவுக்கானது. உடல் நாற்றத்தையும் போக்கும். லெமன் கிராஸ் எடைக்குறைப்புக்கானது’’ - பலன்களைச் சொல்பவர், பிசினஸுக்கான ஐடியாக்களையும் பகிர்கிறார்.

என்ன ஸ்பெஷல்?

இவை எவற்றிலும் செயற்கை மணமோ, நிறமிகளோ, ரசாயனங்களோ சேர்க்கப்படுவதில்லை. அப்படியே வெந்நீரில் முக்கி, தேவைப்பட்டால் இனிப்பு சேர்த்துக் குடிக்க வேண்டியதுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் குடிக்கலாம்.

நீங்களும் செய்யலாம்: இது ஆரோக்கிய டீ!

என்னென்ன தேவை... முதலீடு..?

மூலப் பொருள்களான மூலிகைகள், டீ பேக்ஸ், பேக் செய்ய அட்டைப் பெட்டிகள் .. இவ்வளவுதான் தேவையான பொருள்கள். குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாய் தேவை. நாமே மூலப்பொருள்களை வாங்கி உலர்த்தி, பொடியாக்குவதுவரை எல்லாவற்றையும் செய்கிறோம் என்றால், ஒருவார காலம் தேவை. உலரவைத்த மூலிகைகளை வாங்குவதென்றால் ஒரே நாளில் வேலையை முடிக்கலாம்.

நீங்களும் செய்யலாம்; இது ஆரோக்கிய டீ!
நீங்களும் செய்யலாம்; இது ஆரோக்கிய டீ!

விற்பனை வாய்ப்பு.... லாபம்?

ஐ.டி கம்பெனிகள், உணவுக் கண்காட்சி, ஆர்கானிக் கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் சப்ளை செய்யலாம்.

14 டீ பேக்ஸ் அடங்கிய பாக்ஸை 200 ரூபாய்க்கு விற்கலாம். ஒன்றரை வருடம்வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். 30 சதவித லாபம் பார்க்கலாம்.

பயிற்சி... கட்டணம்?

ஒரே நாள் பயிற்சியில் ஏழு வகையான டீ பேக்ஸ் செய்யக் கற்றுக்கொள்ள லாம். கட்டணம் 2,000 ரூபாய்