Published:Updated:

பெண்களுக்கான மூலிகை என்று ஏன் சொல்லப்படுகிறது கற்றாழை?! - மூலிகை ரகசியம் - 8

கற்றாழை

நல்ல சதைப்பற்றுடன் பசுமையாக காட்சியளிக்கும் மூலிகை கற்றாழையின் தோலை சீவிவிட்டு உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியை முகத்தில் தினமும் தடவி வாருங்கள். கற்றாழையைப் போலவே உங்கள் முகமும் விரைவில் பொலிவடைதை நீங்களே நேரடியாகப் பார்க்கலாம்.

பெண்களுக்கான மூலிகை என்று ஏன் சொல்லப்படுகிறது கற்றாழை?! - மூலிகை ரகசியம் - 8

நல்ல சதைப்பற்றுடன் பசுமையாக காட்சியளிக்கும் மூலிகை கற்றாழையின் தோலை சீவிவிட்டு உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியை முகத்தில் தினமும் தடவி வாருங்கள். கற்றாழையைப் போலவே உங்கள் முகமும் விரைவில் பொலிவடைதை நீங்களே நேரடியாகப் பார்க்கலாம்.

Published:Updated:
கற்றாழை

ஒரு பிஞ்சுக் குழந்தையை உங்களிடம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? வாரி அணைத்து ஆசை தீர கொஞ்சுவீர்கள் அல்லவா! அதைப் போலவே மூலிகைகளில் குழந்தையைப் போல தூக்கிக் கொஞ்சம் தூண்டும் தோற்றமுடையது கற்றாழை. நல்ல சதைப்பற்றுடன் பசுமையாக காட்சியளிக்கும் மூலிகை குழந்தையான கற்றாழை, தோற்றத்திலும் மருத்துவ குணத்திலும் பேரழகு!

செங்கற்றாழை, ரயில்வே கற்றாழை, பேய்க்கற்றாழை, பாம்புக் கற்றாழை, வரிக்கற்றாழை என பல வகைகள் கற்றாழையில் இருக்கின்றன. சதைப்பற்றுடன் ஓரத்தில் சிறுசிறு முட்களுடன் காட்சியளிக்கும் கற்றாழையை அனைத்து வீடுகளிலும் தாராளமாக வளர்க்கலாம். எளிதாக தொட்டிகளிலும் தஞ்சமடைந்து மகிழ்ச்சியாக வளரும் தாவரம் கற்றாழை.

அழகு, ஆரோக்கியம் இரண்டுக்குமே கற்றாழை!
அழகு, ஆரோக்கியம் இரண்டுக்குமே கற்றாழை!

கற்றாழைக்கு தீய சக்திகளைத் தடுக்கும் குணம் உண்டு என்ற நம்பிக்கை கிராமங்களில் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் வீடுகளின் முன் கற்றாழைகள் தொங்கவிடப்படுகின்றன! நம்பிக்கையை அறிவியல் ரீதியில் ஆராய்ந்தால், அப்பகுதியில் அதிகளவில் ஆக்ஸிஜனை பரப்பும் சக்தி கற்றாழைக்கு இருக்கும் உண்மை புலப்படும்.

வீட்டின் முன் தொங்கவிடப்பட்டிருக்கும் கற்றாழையை கவனித்திருக்கிறீர்களா? ’அது எப்படி மண் இல்லாமலே கற்றாழை உயிரோடு இருக்கிறது…’ என சிந்தித்து இருக்கிறீர்களா! கற்றாழை செடியானது மண்ணில் புதையாமலே காற்றிலிருக்கும் பிராணவாயுவை ஈர்த்துக்கொண்டு செழுமையாக வாழும் தன்மை உடையது. அடுத்த முறை வீடுகளின் முன் கட்டப்பட்டிருக்கும் கற்றாழையைப் பார்க்கும்போது சிறு ஆய்வு செய்து பாருங்கள்! மூலிகைகள் குறித்த நிறைய அதிசயங்கள் உங்களுக்கு அறிமுகமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முகப்பொலிவுக்கு

உங்கள் முகத்தை எப்போதும் பளபளவென வைத்துக் கொள்ள விருப்பமா? அதற்காக கடைகளில் விற்கப்படும் செயற்கை கிரீம்களை அதிகமாகப் பயன்படுத்தவே வேண்டாம்… செயற்கை கிரீம்களை பூசுவதை நிறுத்திவிட்டு கற்றாழையின் உதவியை முதலில் நாடுங்கள். முகத்தை பொலிவாக்க கற்றாழை உங்களுக்கு எப்படி உதவ முடியும் என பார்ப்போமா!

கற்றாழையின் தோலை சீவிவிட்டு உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியை முகத்தில் தினமும் தடவி வாருங்கள். கற்றாழையைப் போலவே உங்கள் முகமும் விரைவில் பொலிவடைதை நீங்களே நேரடியாகப் பார்க்கலாம். முகத்தை மெருகேற்ற வேதியியல் கலவைகள் நிறைந்த செயற்கை கிரீம்களை மட்டும் எந்தக் காரணம் கொண்டும் இனி பயன்படுத்த வேண்டாம்!

Skin care
Skin care

தொடர்ந்து நீண்ட நாள்களுக்கு செயற்கை கலவைகளை முகப்பூச்சாகப் பயன்படுத்தும் போது, விரைவில் சருமத்தின் இயற்கைத் தன்மை பாதிக்கப்பட்டு சுருக்கங்களும் கருமையான படலங்களும் உங்கள் தேகத்தில் உருவாகத் தொடங்கும். ஆனால் கற்றாழையோ சருமத்தில் சுருக்கங்கள் உருவாவதைத் தடுப்பதோடு, மென்மையையும் கொடுக்கும். வேடிக்கை என்னெவென்றால செயற்கை முகப்பூச்சுகளில் கூட கற்றாழையின் சத்து தவறாமல் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சருமப் பாதுகாப்பிற்கான பிரத்யேக தாவரம் கற்றாழை! பழைமையான எகிப்திய நாகரிகத்தில்கூட கற்றாழை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரக் குறிப்புகள் இருக்கின்றன. கற்றாழையில் இருக்கும் ஜெல் போன்ற பகுதியோடு பால்/தயிர்/பப்பாளிப்பழம் போன்றவற்றில் ஏதாவதொன்றைச் சேர்த்தும் முகப்பூச்சுக்குப் பயன்படுத்தலாம். கற்றாழை இருக்கும்போது இயற்கையான முகப்பொலிவு செலவே இல்லாமல் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேஜிக் செய்யும் மாயாவி மாரீசன்

மேஜிக் என்ற பெயரை உச்சரித்தாலே அனைவருக்கும் குதூகலம் தான் இல்லையா! அதுவும் மூலிகைகளைக் கொண்டும் நிறைய மேஜிக் செய்யலாம் என்றால் கூடுதல் குதூகலம் தான்! ’அது சரி… கற்றாழையை வைத்து எப்படி மேஜிக் செய்யலாம்…

Aloe Vera
Aloe Vera

தோல் சீவிய சிறிய கற்றாழை மடலை ஒரு துணிக்குள் வைத்து மூடிவிடுங்கள். துணி மூடிய கற்றாழையின் மீது சிறு கற்பூரத்தை வைத்து எரியவிடுங்கள். உங்களை வியக்க வைக்கும் விதமாக துணி எரியாமல் கற்பூரம் மட்டும் நன்றாக எரியும், கற்றாழையின் ஈரம் வற்றும்வரை! கற்றாழை ஒரு ’மாயாவி மாரீசன்’ என்பது உங்களுக்குப் புரியும்!

குளுகுளு கற்றாழை சாறு

குளிர்சாதனப் பெட்டியில் (ஃப்ரிட்ஜ்) வைத்த பானங்கள் மட்டும் தான் அதிக குளிர்ச்சியாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் கணிப்பு தவறு நண்பர்களே! இயற்கையின் படைப்பில் எப்போதுமே பல அதிசயங்கள் காத்துக்கிடக்கின்றன. எந்தவித குளிர்சாதன வசதியுமின்றி இயற்கையானதொரு ஒரு மூலிகையிலிருந்து குளிர்ச்சிமிக்க ஒரு பானம் தயாரிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆம்… குளுகுளு கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படும் கூலிங் பானம் உங்களுக்காக…

கற்றாழையின் மேல் தோலை சீவிய பின் உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியை பல முறை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யுங்கள். பின் மோருடன் கலந்து, உப்பும் சீரகத்தூளும் சேர்த்து மத்து கொண்டு நன்றாகக் கடைந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் குளுகுளு கற்றாழை பானம் தயார்!

Juice (Representational Image)
Juice (Representational Image)
Photo by Qin Fan on Unsplash

ஐஸ்கட்டி இல்லாமலே குளிர்ச்சியைத் தரக்கூடியது இந்த கற்றாழை பானம். கோடைக்காலங்களில் கட்டாயம் பருக வேண்டிய அற்புதமான பானம் இது. வேனிற்காலத்தில் குடித்து வர உடலில் தேங்கிய அதிக வெப்பத்தைக் குறைத்து உடலை உற்சாகமாக்கும். மிகுந்த குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால் இந்த பானத்தை மழைக் காலங்களில் அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். நோய்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பன்னாட்டு குளிர்பானங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு கற்றாழை போன்ற இயற்கை மூலிகைகளிடம் சரணடையுங்கள்!

கொலாஜென், எலாஸ்டின் புரதங்களின் உற்பத்தியை அதிகரித்து, தேகத்தில் உண்டாகும் வயோதிக மாற்றத்தை தள்ளிப்போடுவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. வீக்கமுறுக்கி செய்கையுடைய C-glycosyl chromone எனும் பொருள் கற்றாழையிலிருந்து சமீபத்தில் பிரித்தெடுக்கப்பட்டது. வலி உண்டாக்கும் பிராடிகைனினுடைய (Bradykinin) செயல்பாட்டினைத் தடுத்து, உடனடி வலிநிவாரணியாக செயல்படுவதையும் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

பெண்களுக்கான மூலிகை

பெண்களுக்கான வரப்பிரசாதம் கற்றாழை! கருப்பையில் ஏற்படும் நோய்களை நீக்குவதில் கற்றாழை முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்றாழை கொண்டு செய்யப்படும் சித்த மருந்துகளின் எண்ணிக்கையோ மிக மிக அதிகம். மாதவிடாய் காலங்களில் உண்டாகும் பிரச்னைகளை சரிசெய்ய கற்றாழை சாற்றில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக்கொடுப்பது அக்கால பாட்டிகளின் வழக்கம். மார்பகப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாக ஆய்விதழில் வெளியான கட்டுரை ஒன்று தெரிவிக்கின்றது. தெரியுமா… பெண்களுக்கு அதிகம் பயன்படுவதால் கற்றாழைக்கு ‘கன்னி’, ‘குமரி’ போன்ற பெயர்களும் இருக்கின்றன. குமரி எண்ணெய், குமரி லேகியம், பாவன பஞ்சாங்குலத் தைலம் போன்றவை கற்றாழை கொண்டு செய்யப்படும் சித்த மருந்துகள்.

Eye care (Representational Image)
Eye care (Representational Image)
Photo by Craig Adderley from Pexels

வாரம் ஒருமுறை கற்றாழை கூழோடு சிறிது உப்பு சேர்த்து வாய்க் கொப்பளித்து வர பற்கள் பலமாகும். ஈறுகளிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். நெருப்பு சுட்ட புண்களுக்கு வாழை இலையோடு சேர்த்து, கற்றாழையையும் வெளிமருந்தாகப் பயன்படுத்தும் வழக்கம் சித்த மருத்துவத்தில் உண்டு. நேரடியாக சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கற்றாழையை ‘சன் – ஸ்கிரீன்’ லோஷன் போல பூசிக்கொள்ளலாம். சருமம் வறண்டு காணப்படுகிறதா?... கற்றாழை கூழை உங்கள் தேகத்தில் தடவுங்கள். விரைவில் சருமம் நீர்த்துவம் பெற்று கண்ணாடிபோல பளபளக்கும்! அதிக வெப்பம் காரணமாக கண்களில் உண்டாகும் எரிச்சலைக் குறைக்க, சிறுதுண்டு கற்றாழையை கண்களின் மீது வைத்துக் கட்டலாம்.

குட்டிக் கற்றாழைகள்

கற்றாழை செடிக்கு நீர் ஊற்றிப் பராமரிக்கும் போது, விரைவில் தாய் கற்றாழைகளைச் சுற்றி பல குட்டிக் குட்டி கற்றாழைகள் உருவெடுக்கும். பார்ப்பதற்கு அழகாகத் தென்படும் குட்டி கற்றாழைகளை ரசித்து மகிழ இப்போதே ஒரு பெரிய கற்றாழையை மண்ணில் நிலைநிறுத்துங்கள். ஓரளவிற்கு வளர்ந்த கற்றாழைகள், வறண்ட சூழலையும் தாங்கும் தன்மை கொண்டவை. வளமான மண்ணும், அதிகம் நீர் தேங்காத இடமாகவும் இருந்தால் கற்றாழைகள் செழிப்பான வளர்ச்சியைக் கொடுக்கும்.

கற்றாழை
கற்றாழை

தாவரவியல் பெயர்:

Aloe vera

குடும்பம்:

Liliaceae

கண்டறிதல்:

வறண்ட சூழலில் பல ஆண்டுகள் வாழும் சிறுசெடி. மடல்கள் சதைப்பற்றுள்ளவை. தண்டு இல்லாத தாவரம் கற்றாழை. அதன் ஓரத்தில் முட்களைக் கொண்டிருக்கும். மடல்களை சிதைத்தால் கசப்புச் சுவை கொண்ட திரவம் வெளியாகும். மடல்களின் நுனி கூர்மையானது. இதன் உட்பகுதியில் இருக்கும் கூழ் போன்ற பகுதியே ’கற்றாழைச் சோறு’ என அழைக்கப்படுகிறது. பருவத்தில் நீண்டு வளர்ந்த தண்டில் பூக்கள் காணப்படும். ரெசிம் வகை மஞ்சரி.

தாவரவேதிப் பொருள்கள்:

Barbaloin, Aloesin, Amino acids, Anthroquinones, Lignins.

கற்றாழை… மூலிகைகளுள் பேரழகு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism