Published:Updated:

`எல்லாரும் வீகன் ஆகலாமே...!' - ஆஸ்திரேலிய விலங்குகளுக்காக குரல் கொடுக்கும் எமி ஜாக்ஸன்

எமி ஜாக்ஸன்
எமி ஜாக்ஸன்

`நமக்காக இந்தப் புவியில் வாழும் உயிரினங்களுக்காக, நாம் நம்மை மாற்றிக்கொள்ளலாமே!' - எமி ஜாக்ஸன்.

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களிலுள்ள காடுகள்யாவும், கடந்த செப்டம்பர் மாதம் முதல் மிகத்தீவிரமாக எரிந்து வருகின்றன.

ஆஸ்திரேலிய காட்டுத் தீ
ஆஸ்திரேலிய காட்டுத் தீ
GETTY IMAGES

இந்தத் தொடர் காட்டுத் தீ காரணமாக, பல கோடி விலங்குகள் உயிரிழந்துவிட்டன எனக்கூறி விலங்கியல் ஆர்வலர்கள் பலரும் வேதனை தெரிவித்துவரும்நிலையில், உடல் கருகிய விலங்குகள் சிலவற்றின் புகைப்படங்கள், கடந்த சில நாள்களாகச் சமூக வலைதளங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன. உடன் தண்ணீருக்காக ஏங்கும் கங்காருக்கள், கோலாக்கள் போன்றவற்றின் புகைப்படங்களும் கண்கலங்க வைக்கிறது.

ஆஸ்திரேலிய காட்டுத்தீ, க்ளைமேட் எமெர்ஜென்சி!
எமி ஜாக்ஸன்

இந்த நிலையில், காட்டுத்தீ மற்றும் கோடிக்கணக்கான விலங்குகளின் இறப்பு குறித்த தன்னுடைய வேதனையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்‌ஸன்.

View this post on Instagram

Australia, we are with you 🇦🇺 🙏🏼 Dozens of people have lost their lives, thousands left without homes and OVER HALF A BILLION ANIMALS HAVE DIED! It’s so bad that there are fears of entire species of animals and plants being wiped out. This is a climate emergency and if this doesn’t ring alarm bells I don’t know what will. This beautiful planet we call home is our responsibility and everything we do impacts it directly. When I read the news, my heart breaks at seeing all of these disasters but it also makes me more determined to do my part! You can too... change to a plant based diet or at least consider more veggies and less meat to begin with. Choose wisely/buy less. Support the people who are supporting our planet 💪🏼 PLEASE DONATE @nswrfs 📸 @thuie #CLIMATECHANGEISREAL

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

அதில், விலங்குகளின் இறப்பு தன்னை மிகவும் பாதித்துவிட்டதாகக் கூறி, இறப்புகளை ஈடுகட்ட வருங்காலங்களில் அனைவரும் தாவர வகை உணவு முறைக்கு மாற வேண்டுமென்றும், குறைந்தபட்சம், `நிறைய காய்கறிகள் - மிகக்குறைவாகக் கறி வகைகள்' என்றாவது தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் எமி.

Vikatan

இந்தக் காட்டுத்தீயை அனைவரும் காலநிலை எமெர்ஜென்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தனது அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அவர். ``நமக்காக இந்தப் புவியில் வாழும் உயிரினங்களுக்காக, நாம் நம்மை மாற்றிக்கொள்ளலாமே!" எனும் எமி, இந்நேரம் சைவத்துக்கு மாறியிருக்கக்கூடும்!

காலநிலை எமெர்ஜென்சி
காலநிலை எமெர்ஜென்சி
இறுதியாக, `வாய்ப்பிருப்பவர்கள், நியூ சௌத் வேல்ஸின் தீயணைப்புப் படைகளுக்கு உங்களால் முடிந்த நன்கொடையை அளியுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார் இந்த சைவப் பிரியை.

எமியின் இந்த சைவப் பரிந்துரைக்கு, உங்க பதில் என்னனு கீழே கமென்ட் பண்ணுங்க மக்களே!

அடுத்த கட்டுரைக்கு