Published:Updated:

ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி? வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

ஆரோக்கிய உணவு பற்றிய வழிகாட்டல் நிகழ்ச்சி

பெண்கள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுகிறார்களா, ஆரோக்கியமான உணவு என்றால் என்ன என்பது பற்றி ஆலோசனை வழங்கப்படும்.

ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி? வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

பெண்கள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுகிறார்களா, ஆரோக்கியமான உணவு என்றால் என்ன என்பது பற்றி ஆலோசனை வழங்கப்படும்.

Published:Updated:
ஆரோக்கிய உணவு பற்றிய வழிகாட்டல் நிகழ்ச்சி

``நீங்கள் ஆரோக்கியமாகத்தான் சாப்பிடுகிறீர்களா?" - இந்தக் கேள்வியை நம் வீட்டுப் பெண்களின் முன் வைத்தால் பெரும்பாலானவர்களின் பதில் `இல்லை' என்பதாகத்தான் இருக்கும்.

ஸ்கூலுக்கு லேட்டாச்சு, காலேஜுக்கு லேட்டாச்சு, ஆபீஸுக்கு லேட்டாச்சு என்ற காரணத்தால் பல பெண்கள் காலை உணவைச் சாப்பிடுவதே இல்லை. வீட்டிலிருப்பவர்களுக்கு ஆளுக்கோர் உணவு என்று விதம்விதமாகச் சமைத்துவிட்டு, ஐந்து நிமிடம் தாமதமாவதால் அந்த உணவை டிபன்பாக்ஸில் எடுத்துச் செல்ல முடியாத பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

Food (Representational Image)
Food (Representational Image)
Photo by Lai YuChing on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுதவிர, சமூக பொருளாதாரப் பிரச்னைகள், நொறுக்குத்தீனி மற்றும் பாஸ்ட் ஃபுட் கலாசாரம், சைஸ் ஜீரோ உடலமைப்பு பெறும் ஆசை என பல்வேறு காரணங்களால் பெண்களுக்கும் ஆரோக்கிய உணவுக்குமான தூரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பூப்பெய்துதல், பீரியட்ஸ், திருமணம், மகப்பேறு, மெனோபாஸ் என ஒரு பெண்ணின் உடல் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு மாற்றங்களை அடைகிறது. ஒவ்வொரு நிலையிலும் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண்கள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுகிறார்களா, ஆரோக்கியமான உணவு என்றால் என்ன என்பன உள்ளிட்ட விஷயங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள, மகளிர் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் Prithvi Inner Wears இணைந்து வழங்கும் `நீங்கள் ஆரோக்கியமாகத்தான் சாப்பிடுகிறீர்களா?' என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி மார்ச் 26-ம் தேதி (சனிக்கிழமை) ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

ஆரோக்கிய உணவு பற்றிய வழிகாட்டல் நிகழ்ச்சி
ஆரோக்கிய உணவு பற்றிய வழிகாட்டல் நிகழ்ச்சி

பெங்களூருவை சேர்ந்த Clinical Dietician & Wellness Nutritionist ஸ்ரீமதி வெங்கட்ராமன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தத் துறையில் 23 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கு ஸ்ரீமதி வெங்கட்ராமன் விடையளிப்பார். மார்ச் 26-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism