Published:Updated:

இட்லி பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய ரகசியங்கள்... சொல்லப்போகும் அவள் விகடன் வெபினார்!

நிகழ்ச்சியில் இட்லி ரெசிபிக்கள், பூப்போன்ற இட்லி வார்க்க டிப்ஸ் ஆகியவற்றுடன் இட்லி பற்றிய சந்தேகங்களுக்கான விடையும் அளிக்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இட்லி என்பது தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிய ஓர் உணவு. எளிதில் ஜீரணமாகும் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் எப்போதும் முதலிடம் இட்லிக்குத்தான். ஆனால், இட்லி என்பது எல்லாருக்கும் எல்லா நாளும் பஞ்சு போன்று வருவதில்லை. புதிது புதிதாய் உத்திகளைக் கையாண்டாலும் தீர்வு கிடைத்தபாடில்லை. இந்தப் பிரச்னைக்கு தீர்வளிக்கவுள்ளது அவள் விகடன்.

idly
idly

அவள் விகடன், இட்லி எக்ஸ்பர்ட் மு.இனியவனுடன் இணைந்து `இட்லி ரகசியங்கள் - அறிந்ததும் அறியாததும்!' என்ற கட்டணமில்லா வெபினாரை ஏப்ரல் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை நடத்தவுள்ளது.

1997-ம் ஆண்டு முதல் இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மு.இனியவன். பிரபலமானவர்களின் திருமணக்கூடங்களில் இனியவனின் இட்லிக்கு எனத் தனி இடம் உண்டு. காலத்துக்கேற்றாற்போல, சாக்லேட் இட்லி, பீட்ரூட் இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி, சிறுதானிய இட்லிகள் என விதவிதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தியவர்.

Idly Iniyavan
Idly Iniyavan

இந்த நிகழ்வில் இனியவன் பங்கேற்று வித்தியாசமான இட்லி ரெசிபிக்கள், பூப்போன்ற இட்லி வார்க்க டிப்ஸ் ஆகியவற்றுடன் இட்லி பற்றிய சந்தேகங்களுக்கான விடையும் அளிப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக இட்லி தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 30-ம் தேதியே இந்த வெபினார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் காரணங்களால் சிறு சிறு தடங்கல்கள் ஏற்பட்டன. வாசகர்கள் பலரும் தங்களின் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதற்காகவே, மீண்டும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படாத வகையில் கூடுதல் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே பங்கேற்றவர்கள், புதிய வாசகர்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.

இட்லி ரகசியங்கள்
இட்லி ரகசியங்கள்

வெபினாரில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். கட்டணமில்லா வெபினாரில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு