Published:Updated:

முகப்பொலிவு முதல் கர்ப்பப்பை ஆரோக்கியம் வரை... நலம் தரும் நல்லெண்ணெய்... யாருக்கு, எவ்வளவு?

எந்தப் பொருளுடன் சேர்கிறதோ அந்தப் பொருளின் நன்மையையும் ருசியையும் அதிகப்படுத்துகிற இயல்பு நல்லெண்ணெய்க்கு உண்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ண்ணெய்களில் நல்ல எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய். கலப்படமில்லாத செக்கு நல்லெண்ணெய்யின் பலன்கள் குறித்துச் சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

``உலகத்தில் இருக்கிற எண்ணெய்களில் மிகச்சிறந்த எண்ணெய் நல்லெண்ணெய்தான். ஆயுர்வேத மருத்துவத்தில் எண்ணெய் என்று குறிப்பிட்டிருந்தாலே அது நல்லெண்ணெய்தான்.

oil
oil
Photo: Pixabay

யுர்வேத மருத்துவத்தைப் பொறுத்தவரை உடல் இயக்கத்துக்கு உதவுபவை வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்கள். இவை உடலில் அதிகமாகவும் கூடாது, குறைவாகவும் கூடாது. உடலில் வாதம் சரியாக இருந்தால்தான் கண் சிமிட்டுவது ஆரம்பித்து நுரையீரல் சுருங்கி விரிவதுவரை நடக்கும். இதுவே வாதம் அதிகமானால் இடுப்புவலி, மூட்டுவலி, பக்கவாதம் உள்ளிட்ட 80 வகையான நோய்கள் வரும். வாதத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நல்லெண்ணெய்தான். ஏனென்றால் வாதத்தின் குணமும் நல்லெண்ணெய்யின் குணமும் நேர் எதிர் தன்மை கொண்டவை.

ந்தப் பொருளுடன் சேர்கிறதோ அந்தப் பொருளின் நன்மையையும் ருசியையும் அதிகப்படுத்துகிற இயல்பு நல்லெண்ணெய்க்கு உண்டு.

ம் உடலில் இருக்கிற மூட்டுகள் உராய்வு இல்லாமல் இயங்க வேண்டுமென்றால் உடல் முழுக்க செக்கு நல்லெண்ணெய் பூசி ஊறிக் குளிக்க வேண்டும். அந்தக் காலத்தில் போர்வீரர்கள் உடல் முழுக்க நல்லெண்ணெய் பூசிக் குளிப்பார்கள்.

ல்லெண்ணெய் உஷ்ணத்தன்மை கொண்டது. அதனால் எப்பேர்ப்பட்ட பனிக்காலத்திலும் நல்லெண்ணெய் உறைவதில்லை. அதனால் நல்லெண்ணெய் சாப்பிடும்போது அது உடல் முழுக்க எளிதாகப் பரவும்.

ஆயுர்வேத மருத்துவர் ஆர். பாலமுருகன்
ஆயுர்வேத மருத்துவர் ஆர். பாலமுருகன்

கர்ப்பப்பையில் வரக்கூடிய பிரச்னைகளைத் தடுக்கக்கூடிய தடுக்கிற ஆற்றல் கொண்டது நல்லெண்ணெய். அதனால்தான் அந்தக் காலத்தில் மாதவிடாய் நாள்களில் நல்லெண்ணெய்யைக் குடிக்கக் கொடுத்தார்கள். தற்போது ஒரு பெண் குழந்தை பெரிய மனுஷியாகும்போது தருவதோடு நிறுத்திவிட்டோம். இது சரி கிடையாது.

வ துவாரங்களில் முகத்தில்தான் அதிகமான துவாரங்கள் இருக்கின்றன. அவற்றின் வழியாக நம் உடலுக்குள் கிருமிகள் சுலபமாகச் சென்றுவிடும். தினம்தோறும் 5 நிமிடங்கள் செக்கு நல்லெண்ணெய்யால் வாய்க் கொப்பளித்தால், முகத்துவாரங்களில் இருக்கிற உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட நொதிகள் சரியாகச் செயல்பட ஆரம்பிக்கும். இதனால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். இதன் மூலம் நம்மைத் தாக்க வருகிற கிருமிகளை முகத்துவாரங்களிலேயே தடுத்துவிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ல்லெண்ணெய் கொப்பளிப்பதன் மூலம் முகத்தில் பொலிவு ஏற்படும். ஒட்டிய கன்னங்களில் சதைப்பிடிப்பு ஏற்படும்.

ற்று அண்ணாந்தபடி நல்லெண்ணெய் கொப்பளித்து வந்தால், தொண்டையில் இருக்கும் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்யும்.

ல்லெண்ணெய்யில் கால்சியம் அதிகம் இருக்கிறது என்பதால் பற்களும் வலுவாகும்.

லையில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிராது. அடர்த்தியாக வளரும். நல்ல தூக்கம் வரும். ஞாபக மறதி வராது. முன் கோபம் வருவது குறையும்.

ல்லெண்ணெயைக் காதுகளில் சில துளிகள்விட்டால் காது நரம்புகள் தூண்டப்பட்டு கேட்கும் திறன் மேம்படும். ஆனால், உங்கள் செவிப்பறையில் புண் இருந்தால் நல்லெண்ணெய் விடக்கூடாது. காது, மூக்கு, தொண்டை நோய் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு, காதுகளில் எண்ணெய் விடுவதே பாதுகாப்பு.

ள்ளங்காலில் தினம்தோறும் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் இடுப்புவலி வருவது தடுக்கப்படும். நரம்பு சுருட்டல் என்று சொல்லப்படுகிற வெரிக்கோஸ் வெயின்ஸ் வராது.

ல்லெண்ணெயில் ஈஸ்ட்ரோஜென் இருக்கிறது. மெனோபாஸ் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் குறைந்து எலும்பு தேய்மானம் ஏற்படும். இதை வரும் முன் தடுக்க வேண்டுமென்றால் நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

sesame
sesame
Image by Søren Brath from Pixabay

ல்லெண்ணெய்யில் இருக்கிற கொழுப்பு, ரத்தக்குழாய்களில் படியாது. அதனால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாது. மாரடைப்பும் வராது. ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்களும் நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அதேநேரம் இவர்கள் மருத்துவருடைய ஆலோசனையைக் கேட்டு உணவில் இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

ல்லெண்ணெய் உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் நல்லது. நம் உடலில் வாதம் அதிகமாகும்போது மனம் ஒரு நிலையில் இருக்காது. குழப்ப நிலையிலேயே இருக்கும் நல்லெண்ணெய் இதைச் சரி செய்யும்.

யார், எவ்வளவு சாப்பிடலாம்?

* ஒரு வயதுக் குழந்தைக்கு, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று துளிகள் செக்கு நல்லெண்ணெய்யை உணவுடன் சேர்த்துத் தரலாம். நான்கு அல்லது 5 வயதுக் குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 5 துளிகள் நல்லெண்ணெய் தரலாம். பெரியவர்கள் என்றால் ஒரு நாளைக்கு 25 முதல் 30 மில்லி வரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஐந்து பேர் இருக்கிற குடும்பத்தில் ஒரு நாளைக்கு 100 மில்லி நல்லெண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தலாம். செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய்யை இந்த அளவுக்குச் சாப்பிட்டாலே உடலுக்குத் தேவையான நன்மைகள் கிடைத்துவிடும்.

எண்ணெய்
எண்ணெய்
நோய்கள் வராமல் தடுக்கும் பசு நெய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்?

யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

கல்லீரலில் கொழுப்பு சேரும். ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பவர்கள் நல்லெண்ணெய்யைத் தவிர்ப்பதே நல்லது.

மலச்சிக்கல் இருப்பவர்கள் நல்லெண்ணெய்யைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். அதிகம் சாப்பிட்டுவிட்டால் 2 சிட்டிகை கடுக்காய்த்தூளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

அமிர்தமே என்றாலும் அளவுடன்தான் சாப்பிட வேண்டும். இதற்கு நல்லெண்ணெய்யும் விதிவிலக்கல்ல. அளவுக்கு மீறி சேர்த்துக்கொண்டால் அஜீரணம் வரும். அந்த நேரத்தில் பால் சேர்க்காத சுக்கு காபி சாப்பிட்டு அதைச் சரி செய்துகொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு