Published:Updated:

டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வு முடிவும் முழுமையான தகவல்களும்!

Tea

தேநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து இங்கிலாந்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். 40 முதல் 60 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் உட்பட 5,00,000 மேற்பட்டவர்கள் தந்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வு முடிவும் முழுமையான தகவல்களும்!

தேநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து இங்கிலாந்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். 40 முதல் 60 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் உட்பட 5,00,000 மேற்பட்டவர்கள் தந்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

Published:Updated:
Tea

அனைத்து தரப்பு மக்களின் விருப்ப பானம் தேநீர். பணிபுரியும் இடத்திலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி... தலைவலியோ, டென்க்ஷனோ ஏற்பட்டால் உடனே நமது உடல் தேடுவது ஒரு கப் சூடான தேநீரை தான். டீ குடித்த சில நிமிடங்களில் ஏற்படும் புத்துணர்ச்சி அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் சிறிது நேரம் நம்மை ஆறுதல்படுத்திவிடும்.

அத்தகைய தேநீர் குறித்து, அடிக்கடி ஏதேனும் ஓர் ஆய்வு முடிவு வந்து டீ பிரியர்களை அச்சுறுத்தும். ஆனால், சமீபத்தில் தேநீரை அதிகளவு அருந்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து, இங்கிலாந்தில் ஆய்வாளர்கள் நடத்திய ஓர் ஆய்வின் முடிவுகள் வெளியாகி, தேநீர் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 2006 -2010 வரை, பிரிட்டனின் பயோபேங்கில் சேமித்து வைக்கப்பட்ட மனிதர்களின் தரவுகளை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 40 முதல் 60 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் உட்பட 5,00,000 மேற்பட்டவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

Green Tea
Green Tea

இந்த ஆய்வு முடிவுகள், சர்வதேச மருத்துவ இதழில் வெளியிடப்பட்டன. ஆய்வு செய்யப்பட்டதில் 80% பேர் பிளாக் டீ குடிப்பவர்கள். மேலும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் தேநீர் அருந்தும் நபர்களின் வாழ்நாள், தேநீர் அருந்தாத நபர்களின் வாழ்நாளை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, கிரீன் டீ குறித்து ஆராய்வதிலேயே முழுமையான கவனம் செலுத்துகிறது.

இந்த தேநீர் குறித்தான ஆய்வு முடிவுகள், தேநீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மை - தீமைகள், தேநீருக்கு மாற்று பானம் என்ன என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதாவிடம் பேசினோம்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டீ அதிகமாக குடிப்பதால் மட்டுமே ஆயுள் அதிகரிக்காது!

சமீபத்தில் வந்த ஆய்வு முடிவுகளின் படியும், அறிவியல் ரீதியான கூற்றின்படி, தேநீர் குடித்தால் அதிக நாள்கள் உயிர் வாழலாம் என்று எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை. இந்தக் காலத்தில் ஒருவர் தனது 35-40 வயதை கடக்கும் போதே இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற நிறைய உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளின் மூலம் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவை 35-40 வயதில் ஒருவருக்கு ஏற்படாமல் தடுக்கலாம். தேநீர் குடிப்பதால் மட்டுமே ஒருவர் நீண்ட காலம் உயிர் வாழலாம் என்பது குறித்து இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

பொதுவாக தேநீர் என்பது நமது நோய் எதிர்ப்பு சக்தியை (Immune System) தூண்டிவிடும் ஒரு பானம். நமக்கு வரும் சளி, காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து மீண்டு வர நமக்கு நோய்எதிர்ப்பு சக்தி கண்டிப்பாக தேவை.

Herbal Tea
Herbal Tea

எந்த தேநீர் நல்லது?

வொயிட் டீ (White Tea):

தேநீர் இன்று பல சுவை மற்றும் வகைகளில் உள்ளது. தேநீரில் ஆரோக்கியமானது வொயிட் டீ (White Tea) தான். இந்த வொயிட் டீயில் நல்ல ஃப்ளேவர் (Flavour) இருக்கும். இந்த தேநீர் கேமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) என்ற, சீனாவில் விளையும் தேயிலை தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மிக அதிகமாக இருப்பதால் புற்றுநோய்க்கு எதிரான ஆற்றலைக் கொண்டிருக்கும். மேலும் இதில் ஃப்ளூரைடு மற்றும் டானின்கள் (Fluoride, Tannins) அதிகமாக உள்ளதால் பற்களை வலுப்படுத்த மிகவும் நல்லது. இதை அதிகமாகக் குடித்தாலும் எந்த கேடும் வராது.

மூலிகைத் தேநீர் (Herbal Tea):

மூலிகைத் தேநீர் (Herbal Tea), திஸ்னேஸ் (Tisanaes) என்று சொல்வார்கள். பழங்கள் அல்லது சில மசாலாக்களை (Spices) கொண்டு இந்த தேநீரை தயாரிப்பார்கள். காஃபின் இல்லாததால் இந்த தேநீரும் மிகவும் நல்லது. இப்போது பொதுவாக பிரபலமாவது கெமோமில் தேநீர் (Chamomile tea). இந்த தேநீர் பூவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கெமோமில் தேநீர் பெண்களின் மாதவிடாய்க்காலங்களில் வலியை குறைப்பதற்கும், மனஅழுத்தம் இன்றி ஓய்வு எடுக்கவும், தூங்குவதற்கு முன்பாகவும் அருந்தப்படுகிறது.

ரூய்போஸ் (Rooibos) என்ற தேநீரும் மிகவும் நல்லது. இது செரிமானம், மூட்டு வலி போன்றவற்றிக்கு நல்லதாகும். அடுத்ததாக செம்பருத்தி டீ. இதை குடிப்பதனால் நமது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் குறைவது மட்டுமல்லாமல், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் செய்யும்.

கிரீன் டீ (Green Tea):

கிரீன் டீயை பல நிலைகளில் தயாரிக்கிறார்கள். முதலில் ஒரு பேனில் அந்த இலைகளை வறுத்து எடுத்து, பின் அந்த இலைகளை உலர்த்திய பின்னர், கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீயில் ஃபிளாவனாய்டுகள் (Flavanoid) என்ற பொருள் அதிகளவில் இருக்கிறது. இது இதய நோய்க்கு மிகவும் நல்லது. இதயநோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிரீன் டீயை தொடர்ந்து குடித்து வர நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஓலாங் டீ (Oolong Tea):

இது பிளாக் டீ நிறத்தில் தான் இருக்கும். இதில் காபின் கண்டிப்பாக இருக்கும். கேபின் அதிகமாக எடுக்க எடுக்க நெஞ்செரிச்சல், இதய எரிச்சல், செரிமானக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். முடிந்த அளவுக்கு கேஃபின் அதிகம் உள்ள பிளாக் டீயையோ தவிர்ப்பது நல்லது.

Milk
Milk

பாக்கெட் பாலில் டீ போட்டு குடிப்பது நல்லதா?

பாக்கெட் பால் குறித்து இன்றளவும் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. பசும்பாலை விட பாக்கெட் பால் பலமுறை சுத்திகரிக்கப்பட்டு, அதில் உள்ள கிருமிகள், பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நம்மிடம் பாக்கெட்டில் டெலிவரி செய்யப்படுகிறது. ஆனால் நேரடியாக வாங்கும் மாட்டுப் பாலில் கிருமிகள், பாக்க்டீரியாக்கள் நீக்கப்படாமல் அப்படியே தான் கிடைக்கும். அப்படி பார்த்தால் பாக்கெட் பால் நல்லது.

பொதுவாக பாலில் இருந்து நமக்கு கால்சியம் சத்து கிடைக்கிறது. பாக்கெட் பால் பலமுறை சுத்திகரிக்கப்படுவதால் அந்த சத்துகள் எல்லாம் அதில் நீங்கலாம். பாலில் உள்ள சத்துகள் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றால் நேரடியாக மாட்டுப்பால் வாங்கிக் குடிப்பதே நல்லது; அதுவே ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரை.

ஆய்வுகளின் மூலமே தீர்வு கிடைக்கும்!

சில காலங்களுக்கு முன்வரை, தேநீரில் இவ்வளவு வகைகள் உள்ளதா என்று கூட தெரியாத நிலைதான் இருந்தது. நிறைய நோய்கள், பிரச்னைகள் வர ஆரம்பித்த பிறகே நாம் நிறைய ஆய்வுகள் செய்கிறோம். ஆய்வுகளால் எது நல்லது, கெட்டது என்று தெரிந்து கொள்கிறோம்.

அந்தக் காலத்தில் டீ இலையை காயவைத்து கையால் கசக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அப்படியே குடித்தனர். இப்போது பல வகை டீக்கள் வந்துவிட்டன. இதுபோன்ற ஆய்வுகள் வெளிவருவதும், அது பேசுபொருளாவதும் நல்ல விஷயம் தான். இப்படி பேசும்போது ஏதோ ஒரு வகையில் எது நல்லது என்ற தெளிவு கிடைக்கும்.

தேநீர்
தேநீர்

டீ, காபிக்கு மாற்று பானம்!

இந்த டீ, காபி போன்ற பானங்கள் நம் பாரம்பர்யத்தில் இல்லை. அயல் நாட்டவர்களால் நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக வரகு, சாமை, குதிரைவாலி, கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி எல்லாவற்றையும் அரிசி கஞ்சியாக எடுத்துக்கொண்டு அதில் தேங்காய்ப்பால் தேவையான அளவு விட்டு, காலை நேரங்களில் டீ, காபிக்கு பதிலாகக் குடிக்கலாம். டீ, காபி அதிகளவில் குடிப்பதற்கு பதிலாக நம் பாரம்பர்ய உணவு வகைகளை எடுத்துக்கொள்வது நம் உடலுக்கு நல்லது.