Published:Updated:

தீபாவளி ஸ்வீட்ஸ்: வீட்டுப் பலகாரங்கள்... ஷாப் ஸ்வீட்ஸ்! - ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகள்

தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிடணும், திணறாமலும் இருக்கணுமா...?

இனிப்புகள்
இனிப்புகள்

கொண்டாட்டங்களும் இனிப்புகளும் கண்ணும் இமையும் போல, பிரிக்க முடியாதவை. 'கொள்ளாத வாய்க்குக் கொழுக்கட்டை'.. பண்டிகை பட்சணங்களுக்கு மிகவும் பொருந்துகிற சொலவடை. திகட்டத் திகட்ட நாம் உண்ணும் இனிப்புகள், எப்படியாகிலும் நலத்தைச் சீர்கெடுப்பனவே. 'எதையும் லைட்டா எடுத்துக்கிட்டா வெயிட்டான செலிபரேஷன் உறுதி' என்கின்றனர், டயட்டீஷியன்கள்.

தீபாவளிக்கு ஸ்வீட்ஸும் சாப்பிடணும், திணறாம ஸ்டெடியாகவும் இருக்கணுமா...? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ் இதோ!

இனிப்புகள்
இனிப்புகள்

நல்ல பண்டங்களை எப்படித் தரம்பிரித்து அறிந்துகொள்வது?

"மறுசுழற்சி செய்யப்படாத சுத்தமான நெய்யில் சமைத்த பலகாரம்தான் நல்லது. என்னதான் நல்ல ஸ்வீட்டாக இருந்தாலும் அளவு மிஞ்சக் கூடாது, அஜீரணக் கோளாறு ஏற்படும்."

- ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்

வீட்டுப் பலகாரங்களோடு ஒப்பிடுகையில் கடைப் பலகாரத் தயாரிப்புகளின் குறைபாடென்ன?

"நம் வீடுகளில் செய்யும் பாயசமும், ரவா லட்டுகளும் தேவைப்பட்டதை மட்டுமே வாங்கிக்கும். தேவையற்ற பொருள்களைச் சேர்த்தால் பதமும் பக்குவமும் சரியா வராது. ஆனா, பெரிய கடைகள்ல செய்யப்படுற 'காலா ஜாமூன்' போன்ற மெகா இனிப்புகள், எதைச் சேர்த்தாலும் ஏத்துக்கும். ஆனா அவற்றையெல்லாம் நம்ம உடல் ஏத்துக்காதே!"

- ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்

ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்
ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்

யார் யார், எப்போதெல்லாம் இனிப்பு சாப்பிடலாம் / சாப்பிடக்கூடாது?

காலையில கொஞ்சம் இனிப்புகள் எடுத்துக்கலாம். குழந்தைகள் ஓரளவு சாப்பிடலாம். பெரியவர்கள் ரொம்பவே அளந்துதான் ஸ்வீட்ஸ் எடுத்துக்கணும். அதுவும், மதியம் அசைவம் சாப்பிட்டா ஸ்வீட்ஸ் விஷயத்தில கவனம். இரண்டும் சேர்த்து வயிற்றைப் பதம் பார்த்திடலாம்!"

- ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்

இனிப்பு அதிகம் சாப்பிட்டு அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகள் உண்டானால்..?

"பல வீடுகள்ல இஞ்சிசுரசம் செஞ்சுக் குடிப்பாங்க.. இஞ்சிச்சாறு, நெய், வெல்லப்பாகு அல்லது கருப்பட்டி எல்லாத்தையும் சேர்த்துக் காய்ச்சி சூடுபண்ணிக் குடிக்கிறது. அப்படி செஞ்சா ஸ்வீட்ஸ் சாப்பிட்டு ஏற்பட்ட உப்பசம் மாறிடும். இஞ்சிசுரசம் பண்ண முடியாவிட்டால் எளியவழி, வெந்நீர் குடிப்பதுதான்"

- அம்பிகா சேகர்

ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்
ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்

இனிப்புகளைக் கடைகளில் வாங்குவது சரியா?

"கடைகள்ல வாங்குறது, தப்பில்ல. ஆனா, நல்ல கடைகளா பார்த்து எச்சரிக்கையோட வாங்கணும். சின்னக் கடைகள்ல மட்டுமல்லாம, பெரிய பெரிய கடைகள்லயும்கூட சமையல்சோடாவும் மைதாவும் கலந்துடுறது, கூடுதல் சேர்மானங்களைத் திணிக்கிறதுன்னு ஆரோக்கியக்கேடுகள் நடக்குது. கவனமா இருக்கணும்."

-  தாரிணி கிருஷ்ணன்

கலோரிகளைக் கணித்துத்தான் கடை இனிப்புகள் செய்யப்படுகின்றனவா?

"குலாப் ஜாமூன், ரசகுல்லா மாதிரி ஸ்வீட்ஸ்ல அந்தளவுக்கு கலோரிகள் அதிகமிருக்காது. மைசூர்பாகு மாதிரி இனிப்புகள்ல டபுள் கோட்டடு ஷுகர் இருக்கும். ஒன்றுக்கு ஒன்றுங்கிற கணக்கிலதான் இனிப்பு சேர்க்கணும். எல்லாக் கடைகள்லயும் அப்படி சரியா சேர்த்துச் செய்வாங்கன்னு சொல்லமுடியாது. நாமதான் விழிப்புணர்வோடு இருக்கணும்!"

- அம்பிகா சேகர்

இனிப்புகள்
இனிப்புகள்
இனிப்புகளைப் பகிர்ந்துகொடுத்து நாமும் அளவா எடுத்துக்கிட்டு வீட்டில வச்சுப்போம். ஒரு மாசத்துக்காவது அவை நமக்குத் தின்ன இருக்கும். அந்தக் காலமெல்லாம் போச்சு.
தாரிணி கிருஷ்ணன்

வீட்டில் பலகாரம் செய்து சாப்பிட்ட காலம்.. இப்போதிருக்கும் 'ஸ்வீட்ஸ் ஷாப்' காலம்.. - எப்படிப் பார்க்கிறீர்கள்?

"வீட்டு நபர்களுக்குப் போதும்ங்கிற அளவுல, இனிப்பு இடுபொருள்கள் சேர்த்து, முந்தினநாள் முழுக்கப் பலகாரம் செய்து பண்டிகை நாள்ல சொந்தக்காரங்க, அண்டை வீட்டுக்காரங்க எல்லாருக்கும் அந்த இனிப்புகளைப் பகிர்ந்துகொடுத்து நாமும் அளவா எடுத்துக்கிட்டு வீட்டில வச்சுப்போம். ஒரு மாசத்துக்காவது அவை நமக்குத் தின்ன இருக்கும். இப்படிப் பண்டிகைக்கால இனிப்புப்பண்டங்களை வீடுகள்லதான் செஞ்சுக்கிட்டு இருந்தோம். ஆனா, அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லாத வாழ்க்கையாகிப் போச்சு, நமக்கு. வேகவேகமா ஓடுறோம். அதனால வெளிக்கடைகள்ல ஸ்வீட்ஸ் வாங்கிக்கிறோம்"

- தாரிணி கிருஷ்ணன்.

``தீபாவளி லேகியம் கேக்குறா கீர்த்தி சுரேஷ்!’’ - மேனகா சுரேஷ்
தீபாவளியிலதான் ஸ்வீட்ஸ்ன்னு ஆகிப் போச்சு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாத்தணும். இனிப்புகளையே ஆரோக்கியம் கலந்ததா ஆக்கணும்
அம்பிகா சேகர்

கொண்டாட்டமும் கெடாமல், ஆரோக்கியமும் கெடாமல் இனிப்புக் கலாசாரத்தை மடைமாற்றும் வழி..?

நம்ம பண்டிகைகள் ஆரோக்கியமான உணவுகளுக்கானவையா தான் எப்பவும் அமைந்திருக்கும். உதாரணத்துக்கு விநாயகர் சதுர்த்தின்னா, அவல் பொரிகடலை.. இப்படி. ஆனா, தீபாவளியிலதான் ஸ்வீட்ஸ்ன்னு ஆகிப் போச்சு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாத்தணும். இனிப்புகளையே ஆரோக்கியம் கலந்ததா ஆக்கணும். ஃப்ரூட்ஸ் கேசரி, கேரட் அல்வா.. இப்படி நிறைய செய்யுறாங்க. அப்படிப்பட்ட பண்டங்களை வீட்டில செஞ்சு சாப்பிட்டா அதுதான், ஹெல்தி!"

- அம்பிகா சேகர்

இனிப்புகள்
இனிப்புகள்
தீபாவளி எண்ணெய்க் குளியல்களில் கவனிக்க வேண்டியவை..! சித்த மருத்துவ ஆலோசனைகள்!

இனிப்பைச் சேர்ப்பதில் கவனம் இருப்பின், இன்பத்தில் எப்போதும் குறைவிருக்காது.