Published:Updated:

உளுந்து வடைக்கு இருக்கும் தனிச்சிறப்பு! - ஆயுர்வேத மருத்துவர் சொல்லும் ரகசியம்

கிராபியென் ப்ளாக்

உடலுழைப்பில் அதிகமாக ஈடுபடுபவர்களும் அலைச்சல் அதிகமுள்ள பணிகளை மேற்கொள்பவர்களுக்கும் உளுந்து வடை ஒரு வரப்பிரசாதம்....

உளுந்து வடை
உளுந்து வடை

நம்முடைய வீட்டு சுபநிகழ்ச்சிகளிலும் பண்டிகைக்கால பலகாரங்களிலும் காலை உணவிலும் முக்கிய இடம்பிடிப்பது உளுந்து வடை. தமிழர்களுடைய பண்பாட்டில் வடைக்கு முக்கியத்துவம் உண்டு. வடையில் பலவகை இருக்கிறது.

உளுந்து வடை
உளுந்து வடை

அதில் உளுந்து வடைக்கு தனிச்சிறப்பு உண்டு. `வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு உளுந்து வடை ஒரு வரம்’ என்கிறது ஆயுர்வேதம்.

வடைக்கும் மருத்துவத்துக்கும் என்ன தொடர்பு? விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

``உளுந்தைக் கொண்டு தயாரிக்கப்படும் வடையைத் தரமான எண்ணெய்யில் தயாரிக்க வேண்டும். வடைக்கான மாவில் மிளகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி உள்ளிட்டவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்படித் தயாரிக்கப்பட்ட வடை எளிதில் செரிமானம் அடையும். மாலை வேளைகளில் உளுந்து வடை மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது.

தரமான எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட உளுந்து வடை வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
உளுந்து வடை மகத்துவம்

இதற்குப் பின்னால் ஒரு மருத்துவக் காரணம் உண்டு. ஆயுர்வேதத்தின் கூற்றின்படி மாலை வேளைகளில் உடலில் வாதம் அதிகமாக இருக்கும். அதனால் மாலை நேரத்தை `வாதகாலம்' என்று குறிப்பிடுவார்கள். காலையிலிருந்து மாலை வரை பணியாற்றுவதால் அசதி ஏற்படும். அதனால் மாலை வேளையில் உடலுக்கு ஊட்டத்தையும் ஆற்றலையும் தருகிற சிற்றுண்டியையே உட்கொள்ள வேண்டும்.

அதற்கு மிகச்சிறந்த உணவு வடை. தரமான எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட உளுந்து வடை வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. உடலுழைப்பில் அதிகமாக ஈடுபடுபவர்களும் அலைச்சல் அதிகமுள்ள பணிகளை மேற்கொள்பவர்களுக்கும் உளுந்து வடை ஒரு வரப்பிரசாதம்.

உளுந்து வடை
உளுந்து வடை

மலச்சிக்கல், செரிமானப் பிரச்னை, மூக்கில் நீர் வடிதல், ஜலதோஷம், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருப்பவர்கள் வடை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார் ஆர்.பாலமுருகன்.