மணம்மிக்க வேர்... சாம்பல் நிறத் தோல்… பெருவிரல் அளவில் நீண்டிருக்கும் கச்சிதப் பொருள்… அஞ்சறைப் பெட்டியின் அற்புத மருந்து… கிராமங்களின் முதலுதவிப் பொக்கிஷம் - இதுபோன்ற பல்வேறு பெருமைகளைக்கொண்டது வசம்பு!

`பேர் சொல்லா மருந்து, பிள்ளை மருந்து, உக்கிரம், வேணி, உரைப்பான், வசை, சுடுவான், வசம்’ என்பதுபோன்ற பல்வேறு பெயர்கள் வசம்புக்கு உண்டு. ஈரப்பதம் நிறைந்த அழுத்தம் இல்லாத பூமிக்குள் செழிப்பாக முளைத்துக்கிடக்கும் வசம்பை முறையாகப் பயன்படுத்தினால், குழந்தைகளுக்கு வரும் நோய்களைப் போக்கலாம். வசம்பின் வாசனை, ஏறக்குறைய ரோஜாவின் மணத்தை ஒத்திருக்கும்.

குழந்தைகளுக்கான முக்கிய மருந்தாக வசம்பு நெடுங்காலமாக நம் நாட்டிலும் சீனாவிலும் புழக்கத்தில் இருக்கிறது.

3,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்திய `பைபரஸ்’ சுவடிகளில் வசம்பு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வாசனைத் திரவியங்கள் தயாரிக்க எகிப்தியர் அதிக அளவில் வசம்பைப் பயன்படுத்தியிருக் கின்றனர். உணவுகளுக்கு நறுமணம் கொடுக்கவும், பானங்களுக்குப் புதுமை வழங்கவும் ஐரோப்பிய நாடுகளில் வசம்பின் சாரங்கள் ஆதாரமாக விளங்குகின்றன. பல்வேறு இனக்குழுக்களில் வசம்பு மிக முக்கியமான மருத்துவ ஆயுதமாகத் திகழ்கிறது.

கார்ப்புச் சுவையுடன் வெப்பத் தன்மை கொண்டது வசம்பு. வாய்வகற்றி, தொற்றுப் புழுவகற்றி, புழுக்கொல்லி, பசித்தூண்டி சுரமகற்றி போன்ற செயல்பாடுகளுக்காக வசம்பு பயன்படுகிறது. வசம்பு பற்றிய தேரையர் குணவாகடப் பாடலில் குன்மம், வாய்நாற்றம், இருமல், ஈரல் நோய்கள், குடற்புழு ஆகியவை வசம்பினால் நீங்கும் என்பதை எடுத்துக் கூறுகிறது.

ஆசியப் பகுதிதான் வசம்பின் தாயகமாகக் கருதப்படுகிறது.

13-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு வசம்பு பரவத் தொடங்கியது. இனிப்பு வகை தயாரிப்பில் வசம்பைச் சேர்க்கும் வழக்கம் அப்பகுதியில் இருக்கிறது. சூப் ரகங்களில் சிறு துண்டு வசம்பைச் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்கவைத்த பிறகு, வசம்பை நீக்கிவிட்டு பரிமாறலாம்.

பசியில்லை என்று போக்குக்காட்டி சாப்பிட அடம்பிடிக்கும் பேரக் குழந்தைகளின் வயிற்றில், தனது தளர்ந்த விரல்களால் வாஞ்சையுடன் தடவி, நவீன ஸ்கேனர் போல, வயிற்றுப் புழுக்களின் நடமாட்டம் அறியும் பாட்டிகள் கையிலெடுக்கும் வைத்தியம் எளிமையான பேதி மருந்து. குறிப்பிட்ட அளவு உடல் கழிவுகளை வெளியேற்றியதும் பேதியின் பத்திய முறிப்பாக வசம்பைச் சுட்டு தேனில் குழைத்து நாவில் தடவுவது பிரபலமான மருத்துவமுறை. அதன் பிறகு, அக்குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறன் மட்டுமல்ல, ஊட்டங்களை உட்கிரகிக்கும் குடலின் செயல்பாடுகளும் பன்மடங்கு அதிகரிக்கும்.

மஞ்சளை அரைத்து வசம்பின் மேல் பூசி, மஞ்சள் கருகும் வரை அடுப்பில் சுட வேண்டும். இதேபோல மேலும் ஆறுமுறை சுட்டு கவசத்தை நீக்கி வசம்பை கரியாக்கிப் பயன்படுத்துவதே வசம்புக்கான சுத்தி முறை. வசம்பை சுட்டுப் பயன்படுத்தும்போது, மிகக் குறைந்த அளவில் உள்ள ரசாயனமும் ஆவியாகிவிடும். காயம்பட்ட இடத்தில், மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க வசம்பின் இலைகள் விரைவாகத் தூண்டுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. நரம்புகளை உரமாக்கும் தன்மை இருப்பதால், நரம்பியல் சார்ந்த கோளாறுகளுக்கு முக்கிய மருந்தாகச் செயல்படுகிறது. நினைவுத் திறனை அதிகரிக்கவும், அறிவுத்திறனைக் கூர்மையாக்கவும் வசம்பைப் பயன்படுத்தலாம் என்கிறது ஆய்வு.

வயிறு மற்றும் குடல் பகுதிகளில் கிருமிகளின் தாக்கம் இல்லாமல் வசம்பு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. வசம்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்க்கு, வலிநிவாரணி செய்கை இருப்பது குறிப்பிடத்தக்கது. வீக்கமுறுக்கி செய்கையும் வசம்புக்கு இருப்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆட்டிசம் குறைபாட்டுக்கும் செரிமானப் பகுதிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நவீன குறிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் ஆட்டிசம் குறைபாட்டுக்காக வழங்கப்படும் சித்த மருந்துகளில் வசம்பு சேர்க்கப்படுவதால் சிறப்பான பலனளிக்கிறது.

சுத்திசெய்த வசம்புத் தூளை, தேனில் குழைத்து குழந்தைகளின் நாக்கில் தடவினால், திக்குவாய்ப் பிரச்னை குறையும் என்கிறது தேரன் கரிசல்.

`வசம்புத் தூளை தேனுடன் சேர்த்துக் குழைத்து சிறிதளவு சாப்பிட்டுவந்தால் கழிச்சல், வயிற்றுப் பொருமல், சுரம், செரியாமை ஆகிய பிரச்னைகள் நீங்கும்’ என்கிறது சித்த மருத்துவம். தொற்றுநோய் பரவும் நேரத்தில், வசம்பை வாயிலிட்டு மெல்லும் வழக்கம் முற்காலத்தில் இருந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல், மாந்தம் போன்ற பிரச்னைகளுக்கு வசம்பு சேர்ந்த உரை மாத்திரையை தாய்ப்பாலில் குழைத்துக் கொடுக்கும் வழக்கம் இப்போதும் ஓரளவு தொடர்கிறது. அக்காலத்தில் கட்டாயமாக இருந்த உரை மருந்து கொடுக்கும்முறை இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது வருத்தத்துக்குரியது.

இரவு நேரங்களில் திடீரென இனம் புரியாமல் குழந்தைகள் அழும்போது வயிற்றுவலி என்பதை உணர்ந்து வசம்பு சுட்ட கரியைத் தேனில் குழைத்து வயிற்றுப் பகுதியில் தடவி வலி தணிப்பார்கள். பிரச்னை நீடித்தால் மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.

வசம்பு சுட்ட கரி, அதிமதுரம், தண்ணீர் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர், சிறுவர்களுக்கு வரும் இருமல், சளி போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த பலனளிக்கும். விறுவிறுப்பு நிறைந்த சிறு வசம்புத் துண்டை வாயிலிட்டு சுவைத்துத் துப்ப, இருமல் மற்றும் தொண்டைக் கம்மல் காணாமல் போகும்.

வசம்பை அளவோடு மருந்தாகப் பயன்படுத்துவது அவசியம். ஒரு கிராமைத் தாண்டினால் வாய்க் குமட்டல், வாந்தி உண்டாகும். சுத்தி செய்யப்பட்ட வசம்பை 500 மில்லிகிராம் அளவு பயன்படுத்தினால் பல்வேறு மருத்துவப் பலன்கள் கிடைக்கும்.

மூட்டு நோய்களுக்கு வசம்பு, காய்ச்சுக் கட்டி, முடக்கறுத்தான் இலை சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் வலி, வீக்கம் வடியும். வசம்பைத் தீயில் சுட்டு அதன் கரியுடன் விளக்கெண்ணெய் சேர்த்துக் குழைத்து அடிவயிற்றில் பற்றுபோட்டால் வயிற்றுப் பொருமல் நீங்கும். வசம்புடன் கடலை மாவு, மஞ்சள் சேர்த்து அரைத்துப் பொடியாக்கி, குளியல் பொடியாகப் பயன்படுத்தினால் சரும ஆரோக்கியம் காக்கப்படும். தடிப்பு, அரிப்பை ஏற்படுத்தும் காணாக்கடி குறிகுணங்களுக்கு வசம்பை அரைத்துப் பூசும் வழக்கம் இருக்கிறது.

வசம்பு… அஞ்சறைப் பெட்டிக்காகவே அவதரித்த மூலிகை சுயம்பு!

வசம்பு வைத்தியம்!

வசம்பு ஊறல் நீர்: வசம்பு ஒரு பங்கு, 10 பங்கு வெந்நீர் சேர்த்து நன்றாக ஊறவிட வேண்டும். இதில் ஐந்து முதல் 10 மில்லி அளவு குடித்தால் செரிமானக் கோளாறுகள் உடனடியாக விலகும். கழிச்சல் ஏற்படும்போது இந்த ஊறல் நீரைப் பயன்படுத்தலாம்.

கம்போட் (Compote): தண்ணீரில் பனைவெல்லம் மற்றும் சில நறுமணமூட்டிகளைச் சேர்த்து கலக்க வேண்டும். அதில், நறுக்கிய பழத் துண்டுகளைப் போட்டு லேசாக வேக வைக்க வேண்டும். கருக்கிய வசம்புத் தூள், லவங்கப்பட்டை, தேங்காய்த் துருவல், சில தாவரப் பிசின்கள், தேன் சேர்த்து பாகு போல காய்ச்சவும். இதில் வேகவைத்த பழத்துண்டுகளைப் போட்டு மூழ்கச் செய்து தயாரிக்கப்படும் டிஷ் ஐரோப்பிய நாடுகளில் பிரபலம். ஊட்டங்களுடன் வயிற்றில் ஏற்படும் மாந்தக்கோளாறுகளை சரிசெய்யும். கூடுதலாகப் பசியை உண்டாக்கும்.

வசம்புச் சூரணம்: சுத்திசெய்த வசம்பு, அதிவிடயம், திப்பிலி, மிளகு, சுக்கு, பெருங்காயம், கடுக்காய்த்தோலுடன் இந்துப்பு சேர்த்துப் பொடியாக்க வேண்டும். அதில் ஒரு கிராம் அளவு சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள், மாந்தம், கழிச்சல், வாத நோய்களின் தீவிரம் படிப்படியாகக் குறையும்.

உரை மாத்திரை: நெருப்பில் சுட்ட வசம்பு, அதிமதுரம், அக்கிரகாரம், சுக்கு, கடுக்காய் தோல், சாதிக்காய், மாசிக்காய், பெருங்காயம், பூண்டு, திப்பிலி போன்றவற்றை சீந்தில் குடிநீர், வேப்பங்கொழுந்து குடிநீர் ஆகியவற்றில் அரைத்துத் தயாரிக்கப்படும் பாரம்பர்யம் மிக்க உரை மாத்திரை, குழந்தைகளின் அக்கால தடுப்பு மருந்து. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், காய்ச்சல், சளி, இருமல், உடல் மெலிவுக்கு அற்புத மருந்து. நோய் எதிர்ப்பு சக்தி பெருக, மருத்துவர் ஆலோசனையுடன் உரை மருந்து கொடுத்து வந்தால், சிறந்த பலன் கிடைக்கும். குழந்தைகள் உள்ள வீட்டில் கட்டாயம் இடம்பிடிக்கவேண்டிய இயற்கை மருந்து, உரை மாத்திரை!