Published:Updated:

அஞ்சறைப் பெட்டி: ஆரோக்கியத்துக்கான திடமான விழுது உளுந்து

உளுந்து
பிரீமியம் ஸ்டோரி
உளுந்து

தோல் நீக்கிய வெள்ளை உளுந்தின் மல்லிகைப்பூ இட்லியில் மனதைப் பறி கொடுக்கிறோம்

அஞ்சறைப் பெட்டி: ஆரோக்கியத்துக்கான திடமான விழுது உளுந்து

தோல் நீக்கிய வெள்ளை உளுந்தின் மல்லிகைப்பூ இட்லியில் மனதைப் பறி கொடுக்கிறோம்

Published:Updated:
உளுந்து
பிரீமியம் ஸ்டோரி
உளுந்து

`கறுத்த சருமத்துக்குள் வெள்ளை முத்து…’ - இது உளுந்துக்கான விடுகதைக் குறிப்பு. நெடுங்காலமாக நமது உணவுமுறையில் தவிர்க்கமுடியாத பிணைப்பு கொண்டிருக்கிறது உளுந்து. அகழ்வாராய்ச்சியில் 3,500 ஆண்டுகளுக்கும் முந்தைய உளுந்தின் படிமங்கள் நர்மதை நதியின் கரையோரத்தில் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவே உளுந்தின் தாயகமாகக் கருதப்படுகிறது.

புகழ்பெற்ற உளுந்து வடை 17-ம் நூற்றாண்டு வங்காள ராஜ விருந்துகளில் முக்கிய சிற்றுண்டியாக இருந்திருக்கிறது. உளுந்துடன் இஞ்சி, பெருங்காயம், கீரை வகைகள் அல்லது கிழங்கு வகைகளைச் சேர்த்து சமைக்கப்படும் சத்து நிறைந்த உணவு, வங்காள மக்களின் உணவியலில் ஊடுருவி இருந்தது. மாடம், மாஷம் போன்றவை உளுந்துக்கான மாற்றுப் பெயர்கள். புரதம், வைட்டமின், தாதுச்சத்து, அமினோ அமிலம் போன்றவற்றை நமது தேவைக்கேற்ப உளுந்து வாரி வழங்கும். பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்து சார்ந்த உணவுகளைப் பயன்படுத்துவது கிராமத்துப் பாட்டிகளின் நுண்ணறிவின் விளைவு!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காமம்பெருக்கி, பால்பெருக்கி, உரமாக்கி, உள்ளழலாற்றி ஆகிய செய்கைகள் உளுந்துக்கு உரித்தானவை. இனிப்புச் சுவையுடன், குளிர்ச்சித் தன்மைகொண்ட உளுந்து, சித்த மருத்துவ தத்துவப்படி, செரிமானத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக மாறும். வாதத்தைக் கட்டுப்படுத்தி, பல்வேறு காரணங் களால் ஏற்படும் வலி உணர்வைக் குறைக்கும் தன்மை உளுந்துக்கு உண்டு. நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் குணம் படைத்த உளுந்து, சிறந்த நரம்புரமாக்கி!

பெண்கள் நலன் சார்ந்த உணவுப் பட்டியலில் கட்டாயம் இடம்பிடிக்க வேண்டிய பொருள் உளுந்து. மாதவிடாயை முறைப்படுத்தி ஆரோக்கியம் காக்கும். பால் சுரப்பை அதிகரிக்கவும் உளுந்து துணை நிற்கும்.

அஞ்சறைப் பெட்டி: ஆரோக்கியத்துக்கான திடமான விழுது உளுந்து

எவ்வகையான காய்களின் பொரியல், கூட்டாக இருந்தாலும் உளுந்தை வறுத்துத் தயாரிக்கும்போது, உணவுக்கு புதுச் சுவை கைகூடும். துவையலுக்கு மணத்தைக் கொடுக்க உளுந்தின் சேர்மானம் அவசியமல்லவா?

வயதானோருக்கு ஏற்படும் எலும்பு வலிமை சார்ந்த பிரச்னைகளுக்கு உளுந்து சிறந்த தேர்வு. இதிலுள்ள சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை உடலுக்கு உறுதுணையாக இருக்கும். இரும்புச் சத்து, ஊட்டத்தைக் கொடுக்கும். குடல் அசைவுகளை முறைப்படுத்தி, மலக்கட்டு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள மிகச் சிறந்த துணை, இட்லிப் பொடி. இதில் பெருமளவு அங்கம்வகிப்பது உளுந்தே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் ஒன்று, அரிசியின் துணை இல்லாமல் உளுந்தை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்ட தோசையைப் பற்றி பதிவுசெய்கிறது. உளுந்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மிளகு, சீரகம் போன்ற நறுமணமூட்டிகளைச் சேர்த்து, தேவையான வடிவங்களில் தயாரிக்கப்படும் இட்லியைப் பற்றி 11-ம் நூற்றாண்டில் புலவர் செளந்தராயா பதிவுசெய்கிறார். உளுந்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்புச் சுவையுடைய லட்டு பற்றிய குறிப்பு, 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குஜராத்திய நூலில் இடம்பெற்றுள்ளது. துளைகளுடன் தயாரிக்கப்படும் உளுந்த வடையும் மேற்கு இந்தியாவில் பிரபலமாக இருந்திருக்கிறது. உளுந்தில் செய்யப்பட்ட சிற்றுண்டி வகைகளை மன்னர்களுக்குக் கொடுத்து உபசரிக்கும் வழக்கமும் முற்காலங்களில் அதிகம்.

‘என்புருக்கி தீரும் இடுப்புக் கதுபலமாம் முன்பு விருத்தியுண்டாய் முன்’ என்ற அகத்தியரின் பாடல், இடுப்புக்கு மிகுந்த பலமளிக்கும் உணவுப் பொருள் உளுந்து என்பதைச் சுட்டுகிறது. எலும்பு சார்ந்த நோய்களுக்கும் உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கவும் உளுந்தை அடிக்கடி உணவில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கிறது. உளுந்து மாவை நெய்யில் வறுத்து மிளகுத் தூள், சீரகம், பெருங்காயம் சேர்த்து இட்லி போல செய்யப்படும் சுவைமிக்க உணவை `இட்டாரிக்கா’ என அழைக்கிறது மருத்துவ நூல். இட்லியின் முன்னோடி இந்த இட்டாரிக்கா. ரிக் வேதத்திலேயே உளுந்து பற்றிய குறிப்பு இருக்கிறது. உளுந்தில் செய்த வடை ரகங்களை மோர் அல்லது அரிசிக் கஞ்சியில் தொட்டு சாப்பிடும் வழக்கம் முற்காலங்களில் இருந்தது, இப்போதைய தயிர்வடை போல!

தோல் நீக்கிய வெள்ளை உளுந்தின் மல்லிகைப்பூ இட்லியில் மனதைப் பறி கொடுக்கிறோம். அதைவிடவும் தோல் நீக்காத கறுப்பு உளுந்துதான் அதிக சத்துகளைக் கொண்டது. வேகவைத்த சாதத்தில் வறுத்த உளுந்து மாவு, பூசணி சீவல்கள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் வழக்கம் நம்மிடையே இருந்திருக்கிறது. அரிசி, கோதுமை, உளுந்து, பல காய் ரகங்கள், பனைவெல்லம், நறுமணமூட்டிகள் மற்றும் நெய் சேர்த்துச் செய்யப்படும் பல்வேறு உணவுப் பொருள்கள், பூரி ஜகந்நாதர் கோயிலில் மிகவும் பிரபலம்.

அஞ்சறைப் பெட்டி: ஆரோக்கியத்துக்கான திடமான விழுது உளுந்து

உழைப்பாளர்களின் உடலை விரைவாக வளர்க்கும் ஆரோக்கிய உணவு உளுந்தங் கஞ்சி. நன்றாக வேகவைத்த உளுந்து மற்றும் அரிசியை மசித்து, பால் சேர்த்து சுவைக்காகக் கொஞ்சம் பனைவெல்லம் மற்றும் உப்பு சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த கஞ்சியின் ஊட்டச்சத்துக்கு ஈடுகொடுக்க மற்ற உணவுப் பொருள்கள் சிரமப்படும். உடல் நலிவுற்று இருக்கும்போது புது தெம்பைக் கொடுக்க, உளுந்தங்கஞ்சியைத் தயார் செய்து கொடுக்கலாம். இது நோயிலிருந்து மீண்டவர்களுக்கான முக்கிய உணவும்கூட!

சுவைமிக்க ஊட்டச்சத்து மாவு சாப்பிட ஆசையா? உளுந்து மாவை தேனுடன் சேர்த்துக் குழைத்து அவ்வப்போது சாப்பிடுங்கள். சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு உளுந்து ஊறிய நீரைப் பருகினால் நிவாரணம் கிடைக்கும். புது மணமகனுக்கு முருங்கைக் காய் சாம்பார், முருங்கைப்பூப் பொரியல், முருங்கையிலை அடை என தடபுடலாக நடக்கும் விருந்து வைபவத்தில் உளுந்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அது புதிய உத்வேகத்தைத் தூண்டி களைப்பைப் போக்கும். சுக்கு, பனைவெல்லம் துணையுடன் உளுந்து சேர்த்து களியாகக் கிளறி சாப்பிட்டால் உடலுக்கு பலமுண்டாகும்.

உளுந்தின் உதவியுடன் செய்யப்படும் சித்த மருந்தான ‘உளுந்துத் தைலம்’ வெளிப் பிரயோகமாக வாத நோய்களுக்கு அற்புத பலன்களை அளிக்கும். தசைகளின் வலிமையை அதிகரித்து, நோயிலிருந்து விரைவாக மீள உதவும். சித்த மருத்துவத்தின் பொக்கிஷமான தொக்கண முறைகளுக்கும் உளுந்துத் தைலம் அதிகமாகப் பயன்படுகிறது. அவ்வப்போது ஏற்படும் தசைவலிக்கு உளுந்துத் தைலத்தை மெல்லிய சூட்டில் தேய்க்கலாம். குறிப்பாக முதியோருக்கான ஊன்றுகோலாக இந்தத் தைலம் அமையும். நரம்புகளின் வலிமையை அதிகரிக்க, உளுந்துத் தைலத்தை ஊறவைத்துப் பிடித்து நீவிவிடலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இடுப்பு, கைகால் வலிகளுக்கு உளுந்துத் தைலம் சிறந்தது.

உளுந்து… ஆரோக்கியத்துக்கான திடமான விழுது!

உளுந்து ஸ்பெஷல் உணவுகள்

உளுந்து பானம்: அரிசி மற்றும் உளுந்துடன் அழிஞ்சில் பழங்கள், பனை வெல்லம், தேன், திராட்சை ரசம், இலுப்பை மலர்கள், திப்பிலி, மிளகு, சாதிக்காய், கிராம்பு, ஏலம் சேர்ப்பார்கள். அத்துடன் துவர்ப்புச் சுவையுடைய விளா மரப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து நொதிக்கவைத்துத் தயாரிக்கப்படும் பானம், முற்கால மக்களிடையே அதிக அளவில் புழக்கத்திலிருந்தது. சோர்ந்திருக்கும் உடல்நிலையை விரைவில் தேற்ற இந்தப் பானத்தைப் பயன்படுத்தலாம்.

பஞ்சமுட்டிக் கஞ்சி: உளுந்து, துவரம்பருப்பு, பச்சைப் பயறு, கடலைப்பருப்பு, பச்சரிசி போன்றவற்றை தனித்தனியாக லேசாக வறுக்க வேண்டும். அதன்பிறகு அவற்றை ஒன்று சேர்த்து, சுத்தமான துணியில் கொட்டி முடிச்சு போட வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, அந்த முடிச்சை அதில் போட்டு வேகவைக்க வேண்டும். சிறிது நேரத்தில் அந்தப் பொருள்களின் சாரங்கள் ஒன்றாகி கலங்கலாகத் தோன்றும்போது, முடிச்சை நீக்கிவிட வேண்டும். மீதம் இருக்கும் கஞ்சித் தெளிவே, பஞ்சமுட்டிக் கஞ்சி. எலும்பும் தோலுமாக உள்ள குழந்தைகளுக்கு போஷாக்குத் தரும்.

மெலொகரா (Melogara): உளுந்து, பச்சைப் பயறு, அவரை, துவரம் பருப்புடன் எள் சேர்த்து வேகவைக்க வேண்டும். பிறகு கீரை வகைகள், திராட்சைப் பழங்கள், புளி, முருங்கைக்காய், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துச் சமைக்க வேண்டும். கடைசியில் நெய், பெருங்காயம், பால் சேர்த்து குழம்பு பக்குவத்தில் சமைக்க வேண்டும். சுவை நிறைந்த தொடு உணவான இது உடலுக்கு ஊட்டங்களை அள்ளிக் கொடுக்கும்.

பாரி (Bari): உளுந்தை அரைத்துப் பசையாக்கி உருண்டைகளாக உருட்டி, சில நாள்கள் இயற்கையாக நொதிக்கவைக்க வேண்டும். அதன்பிறகு, அதை வறுத்து உருவாக்கப்படும் நொறுவை ரகத்துக்கு `பாரி’ என்று பெயர். `மனசல்லோசா’ நூல் இதைப் பற்றி கூறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism