‘உணவு என்பது உயிர்வாழத் தேவையான பொருளாக மட்டுமல்லாமல், ஆரோக்கியம் தரும் அருமருந்தாகவும் இருக்க வேண்டும்’ என்பதே நம் முன்னோரின் கொள்கை. அதுவும் நம் மண்ணுக்கேற்ற மரபு உணவாக இருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் பின்பற்றிய உணவுமுறை, சமைக்கும்முறை, பரிமாறும்முறை ஆகிய அனைத்தும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தியே வகுக்கப்பட்டன. ஆனால் இன்று சுவை, நிறம், மணம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உணவுப்பழக்கம் தலைகீழாக மாறிவருகிறது.

உப்பு, காரம் அதிகம் சேர்ப்பதில் தொடங்கி, நிறமிகள் மற்றும் உடல்நலனைக் கெடுக்கும் ரசாயனப் பொருள்களின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. அதனால், `உணவே மருந்து’ என்ற நிலை மாறி, தனியாகப் பல்வேறு மருந்துகளைச் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் நாம் உண்ணும் உணவே நோய்களுக்குக் காரணமாகவும் மாறிவருகிறது. அப்படி, நம் மரபிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்படும் ஓர் உணவுப்பொருள் கருணைக்கிழங்கு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்துசேர்ந்த உருளைக்கிழங்கு, நம் மரபு உணவான கருணைக்கிழங்கைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பல வகைக் கிழங்குகள் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்வரை எல்லோரின் ஏகோபித்த வரவேற்பும் உருளைக்கிழங்குக்குத்தான். இது இல்லாமல் சமையல் இல்லை என்ற அளவில் அதன் ஆதிக்கம் இருக்கிறது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் எனக் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பட்டியலிலும் உருளைக்கிழங்கு முன்னிலையில் இருக்கிறது. ஆனால், வேறு எந்தக் கிழங்கிலும் இல்லாத அளவு அதிக சத்துகளையும் மருத்துவ குணங்களையும்கொண்ட கிழங்கு எது என்றால், அது கருணைக்கிழங்குதான்.

கருணைக்கிழங்கு

‘மண்பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசியோம்’ என்கிறார் தேரையர். அதாவது, ‘மண்ணுக்கு அடியில் பரவி வளரும் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கைத் தவிர்க்கக் கூடாது’ என்றும் ‘பிற கிழங்குகளை உண்ண மாட்டோம்’ என்றும் ‘நோய் அணுகா’ விதியில் குறிப்பிடுகிறார். நம் மரபில் கிழங்குகளையும் மாவையும் உணவாக உண்டு வந்திருக்கிறார்கள். பழங்காலத்தில் காடுகளைத் திருத்தி, கடும் உடலுழைப்பால் விவசாயம்செய்து வாழ்ந்த நம் முன்னோர் கிழங்குகளையே பெரும் உணவாக உண்டு வாழ்ந்திருக்கின்றனர். அதில் கருணைக்கிழங்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

கருணைக்கிழங்கு சுவையிலும் மருத்துவ குணத்திலும் சிறந்து விளங்கக்கூடியது. சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ஆகியவையும் கருணைக்கிழங்கு வகையைச் சேர்ந்தவைதான்.

என்ன சிறப்பு?

கிழங்குகளில் எளிதாகச் செரிமானமாகக் கூடியது கருணைக்கிழங்கு. மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் ஆகிய அன்றாடம் உண்ணும் உணவுகளில் சேர்த்துக்கொள்ளப்படும் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கில் மட்டுமே அதிக நார்ச்சத்து உள்ளது. மற்ற கிழங்குகளில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே நார்ச்சத்து காணப்படுகிறது.

கருணைக்கிழங்கைத் தவிர மற்ற கிழங்கு வகைகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் வாய்வுக்கோளாறு, மந்தம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். அதனால் செரிமானக் குறைபாடு ஏற்படும்; வாய்வுக்கோளாறு அதிகரித்து உடல் முழுவதும் பரவி, தொல்லை கொடுக்கும். குறிப்பாக, மூட்டுகளில் வலியை உண்டாக்கும். ‘பத்து வகையான வாயுக்கள் தன்னிலை பிறழும்போது இதயநோய்கள் உண்டாகும்’ என்கிறது சித்த மருத்துவம். ஆனால், கருணைக்கிழங்கிலுள்ள நார்ச்சத்து, வாய்வு ஏற்படாமல் தடுக்கும்.

உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது, அது ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். நீண்டநாள் தொடரும் ரத்த அழுத்தம் இதயநோய்களை உண்டாக்கும். ஆனால், பொட்டாசியம் சத்தானது சோடியத்தின் அளவைச் சமன்செய்வதால், ரத்த அழுத்தம் அதிகரிக்காது. கருணைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து நிறைவாகக் காணப்படுகிறது என்பதால் இதயத்தசைகள் வலுப்பெற உதவும். அதனால் இதயநோய்கள் நெருங்காது.

பசியைத் தூண்டி இரைப்பைக்கு வலுசேர்க்கும்; குடலில் கிருமி சேராமல் தடுக்கும்; கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேர்வதைக் குறைக்கும்; ரத்தநாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பதுடன், ரத்தம் உறைதலைத் துரிதப்படுத்துவதிலும் முக்கியப் பங்குவகிக்கிறது. நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்னைகளுக்கு நல்மருந்து. பெண்களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படாமல் தடுக்கும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் மெனோபாஸ் ஏற்படும்போது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும்.

மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கருணைக்கிழங்கு சாப்பிட்டுவர நிவாரணம் கிடைக்கும். மூலம், ஆசனவாயில் ஏற்படும் பிளவு, ரத்தக்கசிவு, கட்டி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். ஆசனவாயின் உள்சவ்வில் ஏற்படும் கிழிசல், ரணத்தைச் சரிசெய்யும் ஆற்றல் கருணைக்கிழங்கிலுள்ள பைட்டோகெமிக்கலுக்கு இருக்கிறது. அந்த வேதிப்பொருள், `ஆசனவாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்கும்’ என்று நவீன மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, பாரம்பர்ய மருத்துவமுறைகளில் கருணைக்கிழங்கைத் தவிர மற்ற கிழங்குகளைக் கட்டாயம் தவிர்க்கச் சொல்கின்றனர். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக்கிழங்கை முதன்மையாகக் கொண்டு பல நோய்களுக்கு லேகியம் தயாரித்து மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

உடல் எடை அதிகரித்து மூட்டுவலி, முடக்குவாதம் உள்ளிட்ட கோளாறுகளால் அவதிப்படுவோர் கருணைக்கிழங்கை தினசரி சாப்பிட வேண்டியது அவசியம். சர்க்கரைநோய் உள்ளவர்கள் கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும். ஆனால், கருணைக்கிழங்கு மட்டும் அதற்கு விதிவிலக்கு. அதை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். உடலைக் குளிர்விக்கும் உணவு என்பதால் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கிழங்கைத் தவிர்ப்பது நல்லது.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

கருணைக்கிழங்கு வாங்கும்போது புதிய கிழங்கைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். வாங்கிய ஒரு வாரத்துக்குள் சமைத்துவிடுவது நல்லது. காய்ந்துவிட்டால் அதிலிருக்கும் நீர்ச்சத்தும் சுவையும் குறைந்துவிடும். நறுக்கும்போது கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவிக்கொண்டால் கைகளில் எரிச்சல் ஏற்படாது. சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும் என்பதால் கிழங்கை நன்றாக வேகவைத்து, தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும். அரிசி கழுவிய நீரில் கருணைக்கிழங்கை வேகவைத்தாலும் காரல், நமைச்சல் கட்டுப்படும்.

உருளைக்கிழங்கு உள்ளிட்ட மற்ற கிழங்கு வகைகளில் சத்துகள் இருந்தாலும், அவற்றை உணவில் அதிகம் சேர்க்கும்போது வாய்வுக்கோளாறு உள்ளிட்ட சில நலக்கேடுகள் உண்டாகும். ‘குண்டுடல் கொடுக்கும் உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கு’ என்ற சொல்லாடல் வழக்கத்தில் உள்ளது. எனவே, இன்றைக்குப் பல நோய்களுக்கு அடிப்படையாக இருக்கும் உடல்பருமன் ஏற்படுவதைத் தவிர்க்க, வாரத்தில் இரு முறையேனும் கருணைக்கிழங்கு சாப்பிடுவது நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

தெளிவோம்...