வெந்தயத்தை ஊறவைத்துச் சாப்பிடுவதால், வயிற்றுப் புண்கள் குறையும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டுச் சரியாகும்.

கீரைச் சமையலில் வறுத்துப் பொடித்த எள் மற்றும் வேகவைத்த பூண்டு சேர்த்து சமைத்தால், கீரையின் முழுப் பலனையும் பெற முடியும். வேகவைத்த முட்டையில் மிளகுத்தூளும், எள்ளுப்பொடியும் சேர்த்துச் சுவைத்தால், உடலில் ஊட்டங்கள் கூடுதலாகும்.

குளிர்க்காய்ச்சல் இருக்கும் போது, மூன்று மிளகை வெங்காயத் துடன் சேர்த்துச் சாப் பிட்டால், சீக்கிரமாகக் காய்ச்சல் அடங்கும். சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு ஏற்படும்போது, வெங் காயத்தை ஒன்றிரண்டாக இடித்து குடிநீரிட்டுப் பருகலாம்.

250 கிராம் இஞ்சியை நறுக்கி, இரண்டு லிட்டர் நீர் சேர்த்து நன்றாக ஊறவைத்து, வெல்லம் சேர்த்து, சிறு தீயில் கொதிக்கவைத்து பாகுபதத்தில் இறக்கி வைக்கவும். இதைத் தினமும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டுவந்தால் சுவை யின்மை, பசியின்மை தீரும்.

கசகசாவை நீரில் ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து பருகினால், அற்புதமான உறக்கம் ஏற்படும். கசகசாவை லேசாக வதக்கி, தேனில் குழைத்துச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறால் ஏற்பட்ட வயிற்றுவலி குணமாகும்.

வாந்தி உணர்வை நிறுத்த, ஜாதிக்காயை நெல்லிக்காய்ச் சாற்றுடன் சேர்த்துப் பருகலாம். பொடித்த ஜாதிக்காயைச் சிட்டிகை அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் முழுமையான உறக்கம் வர வாய்ப்பு அதிகம்.

சிறிதளவு புளியுடன் கரிசலாங்கண்ணிக் கீரை சேர்த்து அரைத்து, சிறிய நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவந்தால், மூல நோயின் குறிகுணங்கள் குறையும்.

இஞ்சித் துண்டுகளைப் புளி கரைத்த நீரில் வதக்கி சுண்டச்செய்த `புளி இஞ்சி’, செரிமானத்தைத் துரிதமாக்கும். வாந்தி, குமட்டல், உணவு எதுக்களித்தல் போன்ற குறிகுணங்களுக்கு உடனடியாகப் பலன் தரும்.

பிரிஞ்சி இலைகளை குடிநீராகக் காய்ச்சி தினமும் காலை சிறிதளவு குடித்துவந்தால், அதிகப்படியான கொழுப்புகள் குறைய வாய்ப்பு அதிகம். சிறிது பிரிஞ்சி இலைப் பொடியுடன், இரண்டு சிட்டிகை ஜாதிக்காய்ப்பொடி சேர்த்து பாலில் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்தால் நிம்மதியான உறக்கம் வரும்.