கடுகை அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து, நீர்விட்டு களிபோல கிளறி, துணியில் தடவி மார்பின் மீது பற்றுபோட, இருமலின் தீவிரம் குறைந்து சுவாசம் எளிமையாகும். இடைவிடாமல் தொடர்ந்து விக்கல் வரும்போது, கடுகை அரைத்து துணியில் தடவி, மார்புக் குழியில் பற்றுப் போடலாம்.

பொடியாக நறுக்கிய நாட்டுத்தக்காளித் துண்டுகள், வதக்கிய சின்ன வெங்காயம், மிளகுத்தூள், பொடித்த அன்னாசிப்பூ போன்றவற்றை நெய்யில் வதக்கி இணை உணவாகச் சாப்பிட்டால், கப நோய்களை எதிர்த்து நிற்கும் வன்மையை உடலுக்கு அளிக்கும்.

தொண்டை கரகரக்கும்போது, சிற்றரத்தையை நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கி, அதைத் தேனில் குழைத்து, அதன் உரைப்பு நாவிலும் தொண்டையிலும் தவழும்படி சாப்பிட்டால், கரகரப்பு கரைந்து தொண்டை இதமாகும்.

ஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்துப் பொடியாக்கி, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம்பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை, சூடாக சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.

சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு உளுந்து ஊறிய நீரைப் பருகினால் நிவாரணம் கிடைக்கும். சுக்கு, பனைவெல்லம் துணையுடன் உளுந்து சேர்த்து களியாகக் கிளறி சாப்பிட்டால் உடலுக்கு பலமுண்டாகும்.

மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாள்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.

மழை மற்றும் குளிர்காலங்களில் கிரீன் டீ அல்லது கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் அன்னாசிப்பூவைப் போட்டு, வடிகட்டிப் பருகினால் சுவாசம் எளிதாகும். தூதுவளை இலைகளைத் துவையலாகச் செய்யும்போது, சிறிதளவு அன்னாசிப்பூப்பொடி சேர்த்தால், சோர்ந்திருக்கும் மூச்சுக் குழாய் உற்சாகமடையும்.