Published:Updated:

கொரோனா உள்ளிட்ட தொற்றுகளிடமிருந்தும் காக்கும் உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி

சிகரெட் மற்றும் குடிப்பழக்கங்கள், தூக்கமின்மை, மனஅழுத்தம், சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாதது போன்றவற்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்

திடீர் திடீரென விதம் விதமான நோய்கள் பீதியைக் கிளப்புகின்றன... பல பாதிப்புகளுக்கும் மருந்துகளே கண்டுபிடிக்கப்படாத நிலை அதையும்விட அதிகமாக அச்சுறுத்துகிறது.

மருந்துகளோ, தீர்வுகளோ இல்லாத பல பாதிப்புகளுக்கும் மருத்துவர்கள் சொல்லும் ஒரே தீர்வு, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக உள்ளவர்களுக்கு சாதாரண சளி, காய்ச்சல் தொடங்கி, உயிருக்கே மிரட்டல் விடுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுவரை பல பிரச்னைகள் பாதிக்கும் அபாயம் குறைவு.

`நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் அதிக இறப்புகள்...' -கொரோனா பரவலால் பதறும் உலக சுகாதார நிறுவனம்

நம் உடலில் ஏதேனும் பாதிப்புகள் வந்துவிட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்கிறோம். மருத்துவர் எழுதித் தரக்கூடிய மருந்துகள் பெரும்பாலும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துபவையாகவே இருக்கும்.

மருந்துகள்
மருந்துகள்

நோய் வந்ததும்தான் அதை எதிர்க்கும் சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றில்லை, வருமுன் காக்கும் வழியாக இயல்பிலேயே உடலின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியம்.

இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்னென்ன? நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் உணவுகள் எவை?

ஊட்டச்சத்து ஆலோசகர் தாரணி கிருஷ்ணனிடம் பேசினோம்.

நம் உடலில் கிருமிகள் உட்புகும்போது அவற்றை எதிர்த்துப் போராடும் ஆற்றலையே நோய் எதிர்ப்பு சக்தி என்கிறோம். இது நம் உடலில் இயல்பாகவே இருக்கும்.

ஆரோக்கிய உணவுகள்
ஆரோக்கிய உணவுகள்

சிகரெட் மற்றும் குடிப்பழக்கங்கள், தூக்கமின்மை, மனஅழுத்தம், சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாதது போன்றவற்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இந்தச் சூழலில் பல்வேறு நோய்கள் நமது உடலைத் தாக்கும்.

சிகரெட், மதுபானங்களின் விலையை ஏற்றுவதால் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையாது! ஏன்?

உடலில் புரதச்சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். வயதானவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அனைத்து வயதினரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஏன்? எதற்கு? எதில்? - வைட்டமின் ஏ
ஏன்? எதற்கு? எதில்? - வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ, சி, ஈ, பீட்டா கரோட்டின் புரதம் ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை என்பதால் இந்தச் சத்துகள் அதிகமுள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் உணவுகள் சில...

மஞ்சள் பட்டாணி, கொண்டைக்கடலை, நிலக்கடலை, பாதாம் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகள்

மீன், சிக்கன், முட்டை, பால்

சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்கள்.

பீன்ஸ், வெண்டைக்காய், பாகற்காய் போன்ற பச்சை நிறக் காய்கறிகள் அனைத்தும்.

கேரட்
கேரட்

நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் புரோபயாட்டிக் பாக்டீரியா அதிகமுள்ள தயிர் மற்றும் பசும்பால்.

பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம் மற்றும் ஆப்பிள் (இவற்றிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்)

பப்பாளி, கேரட் (இவற்றிலுள்ள பீட்டா கரோட்டின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்)

கிரீன் டீ

மஞ்சள் தூள் (இது மிகச்சிறந்த ஆன்டிபயாடிக் என்பதால் நோய்த் தொற்றுகளைத் தடுக்கும்)

Vikatan

இவை தவிர....

தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு தவிர்க்காமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 2 வருடங்கள்வரை கொடுக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதில் தடுப்பூசிகளுக்கு முக்கியப் பங்குண்டு. எனவே, அந்தந்தப் பருவத்தில் மருத்துவர் ஆலோசனையின் பேரில் தடுப்பூசிகளைத் தவிர்க்காமல் போட வேண்டும்.

தடுப்பூசி
தடுப்பூசி

சிலர் ஒருமுறை நம் உடலில் ஒரு நோய் வந்துவிட்டால் அதன் பிறகு உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துவிடும் என்றும் அந்த நோய் திரும்பவும் வராது என்றும் நம்புகிறார்கள். அப்படியல்ல...

"தட்டம்மை தடுப்பூசி... வதந்திகளை நம்பாமல் குழந்தைகளுக்குத் தவறாமல் போடுங்கள்!"- மருத்துவர் அறிவுறுத்தல்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பாதிப்பு மீண்டும் வரலாம். எனவே, இயற்கையான முறையில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிற உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதுதான் காலத்துக்கும் கைகொடுக்கும். கொரோனாவிலிருந்தும் காக்கும்.

அடுத்த கட்டுரைக்கு