Published:Updated:

மழைக்காலத்தில் புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் என்னாகும்? மருத்துவ விளக்கம்

Snake Gourd (Vegetable)

மழைக்காலத்தில் தட்ப வெப்ப நிலை குளிர்ச்சியாக இருக்கும். இந்தச் சூழலில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடலாமா கூடாதா என்ற குழப்பம், மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

மழைக்காலத்தில் புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் என்னாகும்? மருத்துவ விளக்கம்

மழைக்காலத்தில் தட்ப வெப்ப நிலை குளிர்ச்சியாக இருக்கும். இந்தச் சூழலில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடலாமா கூடாதா என்ற குழப்பம், மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

Published:Updated:
Snake Gourd (Vegetable)

மழைக்காலத்தில் கீரைகள், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சாப்பிட்டால் சளி பிடிக்கும், காய்ச்சல் வரும் என்று காலங்காலமாக சொல்லப்பட்டுவருகிறது. இதனால் நம்மில் பலர் அவற்றைச் சாப்பிடாமல் தள்ளிவைப்போம்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் இந்தக் குழப்பத்தைப் போக்க, யோகா மற்றும் இயற்கை மருத்துவர் இந்திராதேவியிடம் பேசினோம். விரிவாகப் பேசினார்.

Dr.Indira devi
Dr.Indira devi

``காற்று, மழை, பனி, வெயில் எனப் பருவகாலம் மாறும்போது அந்தந்த தட்பவெப்பநிலைக்கேற்ப உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படும். அத்துடன், சூழலுக்கேற்ப நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, மழைக்காலத்தில்தான் நோய்த்தொற்று அதிகமாக ஏற்படும். மேலும், நோய்கள் அதிகரிக்க இன்றைய சூழலும் ஒரு காரணமாக இருக்கிறது. முன்பெல்லாம் மழை பெய்தால் பாய்ந்தோடும் நீர், ஆறு, ஏரி, குளங்களைச் சென்றடையும்; கடைசியில் அந்த நீர், கடலில் சென்று கலக்கும். ஆனால் ஏரி, குளங்களைப் பட்டா போட்டு அவற்றில் மக்கள் குடியேறிவிட்டனர். இதனால், பெய்யும் மழைநீர் போகும் வழி தெரியாமல் ஆங்காங்கே தேங்கி நின்று கிருமிகள் உற்பத்தியாகி நோய்கள் பரவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை நோய்கள் மிக எளிதாகப் பாதிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தந்தப் பருவ காலத்துக்கு ஏற்ப, தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப காய்கறிகள், பழங்கள் விளையும். அவற்றை நாம் உண்பதன்மூலம் நம் உடல் போதுமான அளவு நோய் எதிர்ப்புத் திறனைப் பெறும். இது மழைக்காலம் என்பதால், இந்தப் பருவத்தில் விளையும் காய்கறிகள், கீரைகள் பற்றி அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

Spinach
Spinach
pixabay

கோடைக் காலத்தைப்போல மழைக்காலத்திலும் நீர்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளின் விளைச்சல் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் தட்ப வெப்ப நிலை குளிர்ச்சியாக இருக்கும். இந்தச் சூழலில், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடலாமா கூடாதா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

Vegetables
Vegetables
pixabay

இயற்கையாகவே, மழைக்காலத்தில் கீரைகள் அதிகமாக விளையும். எனவே, அவற்றை உண்பது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். பொன்னாங்கண்ணி, மூக்கிரட்டை, முருங்கை, தூதுவளை, பசலைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, புதினா, கறிவேப்பிலை போன்றவற்றில் பொட்டாசியம், இரும்பு, சோடியம், ஃபோலிக் ஆசிட் மற்றும் பல்வேறு தாது உப்புகள் நிறைந்திருக்கும். எனவே, அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அனைத்துக் கீரைகளிலும் 'குளோரோபில்' நிறைந்திருப்பதால், ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும். இதனால் மழைக்காலங்களில் வரக்கூடிய சாதாரண வைரஸ் காய்ச்சலிலிருந்து டெங்கு, எலிக்காய்ச்சல் என அனைத்து விதமான காய்ச்சல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளிலும் வைட்டமின் ஏ, சி மற்றும் பல்வேறு விதமான தாது உப்புகள் நிறைந்துள்ளதால், அவை நோய் எதிர்ப்பு ஊக்கியாகச் செயல்படும். புடலங்காயில் உள்ள வேதிப்பொருள், மலேரியா காய்ச்சலைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. பீர்க்கங்காயில் சளி, ஆஸ்துமாவைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.

Zucchini
Zucchini
pixabay

மேலும், பீர்க்கங்காயில் பெப்டைட் (Peptide), ஆல்கலாய்டுகள் (Alkaloids) அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் சிறுநீர் இழப்பைச் சமன் செய்யும். அத்துடன், ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். லூபின் (Lupine) என்ற வேதிப்பொருள் இருப்பதால், கபசுரம், காலரா மற்றும் பல்வேறுவிதமான வைரஸ் காய்ச்சல்களுக்கு இது மிகச்சிறந்த நிவாரணியாக உள்ளது. பாகற்காயில் கசப்புத்தன்மை உள்ளதால், அது எல்லாவிதமான காய்ச்சலுக்கும் நோய் எதிர்ப்புத்திறனை அளிக்கும்.

Cucumber
Cucumber
pixabay

மழைக்கால காய்கறிகளில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் புழுக்கள் அதிகமாக உள்ளதால், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்க காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பாக தோல் நீக்கியதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்வது நல்லது. மேலும் சளி பிடிக்காமலிருக்க, சமையலின்போது நீர்க்காய்கறிகளை மஞ்சள் சேர்த்து வேகவைக்க வேண்டும். அத்துடன் சீரகம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றைக் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். கீரைகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளிலும் இரவு நேரங்களிலும் மாமிச உணவுகளை எடுத்துக்கொள்ளும்போதும் கீரைகளைச் சேர்த்துக்கொள்ளாமலிருப்பது நல்லது. கீரைகள் மற்றும் நீர்க்காய்கறிகளுடன் இஞ்சி, பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து சூப்பாக தயாரித்துப் பருகினால், மிக எளிதாகச் செரிமானமாகும்'' என்கிறார் மருத்துவர் இந்திராதேவி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism