Published:Updated:

`வேறெதுவும் தேவையில்லை, டீ மட்டும் போதும்!' ஆளா நீங்க?! இது உங்களுக்காகத்தான்! #InternationalTeaDay

இன்றைய நாள், முழுக்க முழுக்க உங்களுக்கானதுதான்! யெஸ் மக்களே... இன்னைக்கு தேசிய தேநீர் தினம்!

தேநீர்
தேநீர்

டீ-யிலேயே வாழ்ந்து, டீ-யாலேயே உயிர் வாழும் அளவுக்கான மிகப்பெரிய்ய்ய்ய்ய டீ பிரியரா நீங்கள்? இன்றைய நாள், முழுக்க முழுக்க உங்களுக்கானதுதான்! யெஸ் மக்களே... இன்னைக்கு தேசிய தேநீர் தினம்! நம்ம ஊர்ல, எத்தனையோ பேச்சிலர்ஸுக்கு, காலை உணவே டீ தான். அட, சாப்பாடு மட்டுமில்லங்க, பல பேருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டரே `டீ'தான்!

டீ
டீ

ஒரே ஒரு நிமிஷம்! `தினமும் நாம டீ-யா குடிக்கிறோமே, இவ்ளோ டீ குடிக்கிறதால, உடம்புக்கு ஏதாச்சும் பிரச்னை வந்துடுமோ'-னு என்னைக்காவது பயந்திருக்கிறீர்களா? `பால் மற்றும் சர்க்கரை கலந்த டீ-யை தினமும் குடிப்பதென்பது, உடல்நலத்துக்கு நிச்சயம் ஆபத்துதான். அளவுக்கதிகமாக டீ குடிப்பவர்களுக்கு டீஹைட்ரேஷன், ரத்தச்சோகை மற்றும் இதய பாதிப்பு ஏற்படலாம்’ என்கின்றன சில ஆய்வுகள்.

கிரீன் டீ தெரியும்... கிரீன் காபி தெரியுமா? - சர்வதேச காபி தினம்! #InternationalCoffeeDay

அப்போ என்னதான் செய்றதுன்றீங்களா? உலகிலேயே அதிகமா விற்பனையாகும் - பிளாக் டீ , வொயிட் டீ, கிரீன் டீ, ஊலாங் டீ. - இதுல ஏதாச்சும் ட்ரை பண்ணுங்க! இது அனைத்துக்குமே ரெசிபி ரொம்ப ஈஸி! இவை அனைத்துக்குமே தனித்தனியா தேயிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. சூடான நீரில், அந்தத் தேயிலைகளைப் போட்டு, சில நீமிடங்கள் கழித்து வடிகட்டி, குடித்துவிடலாம். சர்க்கரைக்கு பதில், எலுமிச்சையின் சில துளி சாறோ, வெல்லமோ, பனங்கற்கண்டோ சேர்த்துக்கொள்ளலாம். அவற்றையுமேகூட, முடிந்தவரை தவிர்ப்பது நல்லதாம்!

Tea Infographics
Tea Infographics

இப்படி பால் - சர்க்கரை இல்லாம டீ குடிப்பதன் மூலம், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகும். செரிமானப் பிரச்னைகள் சரியாகும். மனஅழுத்தம் குறையும். தலைவலி பிரச்னை, தூக்கம் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றுக்குத் தீர்வு கிடைக்கும்! ஆக, நீங்கள் தினந்தோறும் குடிக்கும் பால் கலந்த டீ கொடுக்கும் எல்லா நன்மைகளும், எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாமல் கிடைக்கும்.

`அட, நாங்க டீ குடிக்கிறதே பணத்தைச் சேமிக்கத்தான். இதுல இந்தப் பொருள்களையெல்லாம் எங்கிருந்து வாங்க' என்பவர்கள் ஆவாரம் பூ டீ, கொத்தமல்லி விதை டீ, சுக்கு மல்லி டீ, லவங்கப்பட்டை - வெந்தயம் டீ, சீரகம் - சோம்பு டீ போன்ற எளிய ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க!

ஹெல்த்: டீ இன்றி அமையுமா வாழ்க்கை?
அளவுக்கதிகமான டீ ஆபத்து!
டீ
டீ

இதில் எந்த டீ உங்களுக்கு வேண்டுமோ, அதைத் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்கவையுங்கள் (குறிப்பு : பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல்). அதிகபட்சம் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள்வரை கொதிக்கவைக்கலாம். கொத்தமல்லி விதை, ஆவாரம் பூ போன்றவை கசப்புத்தன்மை நிறைந்தவை என்பதால் பனைவெல்லம் / பனங்கற்கண்டைச் சேர்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் மட்டும், இனிப்பைத் தவிர்க்கவும்!

நீங்கள் அடிக்கடி தேநீர் அருந்த விரும்பும் நபரா?. அதே எண்ண ஓட்டத்துடன் கூடிய பெஸ்டி உங்களுக்கு இருக்கிறாரா.. கமெண்டில் சொல்லுங்கள் மக்களே!