Published:Updated:

``உடல் எடை குறைக்கும், மன அழுத்தம் போக்கும்!’’ - டேனியல் டயட் சிறப்பம்சங்கள்

டயட்
டயட்

டேனியல் டயட்டை 10 நாள்கள் முதல் 40 நாள்கள் வரை கடைப்பிடிக்கலாம். உரிய பலனைப் பெற குறைந்தபட்சம் 21 நாள்கள் பின்பற்ற வேண்டும்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இன்று இளையோர் முதல் முதியோர் வரை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. அந்த முயற்சிக்குக் கைகொடுக்கும்விதத்தில், சமீப காலமாகப் பல்வேறு டயட்டுகள் பிரபலமாகிவருகின்றன. அவற்றைப் பலர் பின்தொடரவும், அதுகுறித்து சோஷியல் மீடியாக்களில் விவாதிக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு... டேனியல் டயட்!

Food
Food

டேனியல் டயட்டின் வரலாறு, அதை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும், அதன் பலன்கள்குறித்து விளக்குகிறார், ஊட்டச்சத்து நிபுணர் மேனகா.

“டேனியல் டயட் என்பது ஒரு பழங்கால உணவுப் பழக்கம். பல வருடங்களுக்கு முன், டேனியல் என்கிற இறைத்தூதர் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த நாட்டில், அரசவை மன்ற அமைச்சர் ஒருவர், 'ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் ஒயின் குடிக்க வேண்டும். இறைச்சி சாப்பிட வேண்டும்' என நாட்டு மக்களுக்குப் பரிந்துரைத்தார்.

``உடல் எடை குறைக்கும், மன அழுத்தம் போக்கும்!’’ - டேனியல் டயட் சிறப்பம்சங்கள்

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாதிரியார், 'இறைச்சி உண்ணாமல், ஒயின் அருந்தாமல், அதற்கு மாற்றாக (சமைக்காத) காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், சுகாதாரமான தண்ணீர் மட்டுமே உண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்' என்றார். மேலும் 'உங்களுக்கு சந்தேகம் இருந்தால், என் சீடர்களையும் அரசவையில் உள்ளவர்களையும் வைத்து ஆய்வு செய்யுங்கள்' என்று கூறினார்.

Food
Food

அதன் அடிப்படையில், இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 11 நாள்கள் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் காய்கறிகள், பழங்களை மட்டும் உண்ட சீடர்கள் ஆரோக்கியமாக இருப்பது உறுதியானது. இதுதான் டேனியல் டயட் உருவான வரலாறு.

டேனியல் டயட்டை 10 நாள்கள் முதல் 40 நாள்கள் வரை கடைப்பிடிக்கலாம். உரிய பலனைப் பெற குறைந்தபட்சம் 21 நாள்கள் பின்பற்ற வேண்டும்.

டேனியல் டயட் மேற்கொள்பவர்கள், காலை உணவாக சோயா, பாசிப்பருப்பு போன்றவற்றை தோசையாக்கி உண்ண வேண்டும். இவற்றுடன் அரிசி மாவு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Food
Food

இடைவேளையில் (11 மணி) ஆப்பிள், மாதுளை, கொய்யா, பப்பாளி, முலாம்பழம் உள்ளிட்ட பழங்களில் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.

மதிய உணவாக வரகு, தினை அரிசியில் சமைத்த உணவுடன் இரண்டு கப் நறுக்கிய, சமைக்காத காய்கறிகள், ஒரு கப் கீரை எடுத்துக்கொள்ளலாம்.

இடைவேளையில் (4 மணி) கம்பு உள்ளிட்ட முளைகட்டிய பயறு வகையில் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.

இரவு உணவாக சமைக்காத காய்கறிகள், பழங்களை உண்பதே நல்லது. அல்லது பருப்புக் கூட்டு வைத்து அதனுடன் ராகி இட்லி, அடை தோசை சாப்பிடலாம்.

பேலியோ, கீடோ, வீகன், பேலன்ஸ்டு டயட்...எது பெஸ்ட்? 5 பளிச் கேள்வி – பதில்கள் #NationalNutritionMonth

இவை மட்டுமன்றி உடல் எடை, உயரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் அருந்த வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மூன்று மணி நேரத்துக்கு ஓர் உணவு (காலை, மதியம், இரவு), மற்றும் இடைவேளை உணவுகளை உரிய நேரத்துக்குச் சாப்பிடுவதும் அவசியம்.

பலன்கள்!

Food
Food

டேனியல் டயட்டை மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும். காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால், வயிற்றை இதமாக வைத்துக்கொள்ளும். உடல் எடையைக் குறைத்து, மன அழுத்தத்தைப் போக்கும். கெட்ட கொழுப்பையும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதைச் சீராக்கும்.

Vikatan

சுத்தமான காய்கறிகள், பழங்களைச் சாப்பிடும்போதுதான் இந்தப் பலன்கள் கிடைக்கப்பெறும் என்பதை கவனிக்க வேண்டும். கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான காய்கறிகள், பழங்கள்மீது செயற்கையான ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன. அவற்றை உண்டால் பலன் கிடைக்காது என்பதுடன், அவற்றை சமைக்காமல் உண்ணும்போது, அந்த ரசாயன பாதிப்புக்கும் நாம் ஆளாக நேரலாம்.

தோட்டத்தில், வீட்டு மொட்டை மாடிகளில் இயற்கையான முறையில் பயிரிடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் காய்கறிகள், பழங்களையே உண்ண வேண்டும். அது, இயலாதவர்களுக்கு டயட்டின் பலன் கிடைக்காது என்கிற அம்சத்தில், இது பின்பற்ற மிகவும் கடினமான ஒரு டயட் ஆகிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

Food
Food

டேனியல் டயட், இதயத்துக்கும் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் நல்லது. இறைச்சி சாப்பிடும்போது, உடலிலுள்ள செல்களில் அழுத்தம் ஏற்படும். இந்த டயட்டில் முற்றிலுமாக இறைச்சியைத் தவிர்ப்பதால் செல்களுக்குத் தரப்படும் அழுத்தம் குறைந்து, ஆரோக்கியம் மேம்படும். இதனால், மனிதனின் சராசரி ஆயுட்காலம் 60 என்றால், கூடுதலாக ஐந்து வருடங்கள் உயிர் வாழலாம்.

தவிர்க்க வேண்டியவை!

அசைவ உணவுகள் உட்கொள்ளக்கூடாது. 'காபி, டீ அருந்தினால்தான் வேலைபார்க்க முடியும், மனஅழுத்தம் நீங்கும். இல்லையென்றால் தலைவலி ஏற்படும்' போன்ற நம்பிக்கைகள் பலரிடம் உண்டு. ஆனால் டீ, காபி அருந்தினால் அதன் பலன் ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே கிடைக்கும். மேலும், காபியில் உள்ள `கஃபைன்' எனும் வேதிப்பொருளால், உடல் மேலும் சோர்வடையவே செய்யும். ஆகவே காபி, டீ அருந்தக் கூடாது. மது அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மேனகா.

அடுத்த கட்டுரைக்கு