Published:Updated:

ஹோல் வீட் பிரெட் உண்மையில் உடலுக்கு நல்லதா? - டயட்டீஷியன் விளக்கம்

பிரெட் உலகம் முழுக்கப் பரவலாக உட்கொள்ளப்பட்டாலும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருளாகத்தான் கருதப்படுகிறது. இதுபற்றி டயட்டீஷியன் மீனாக்ஷி பஜாஜ் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`ஹோல் வீட்', `பீட்டா', `மல்ட்டி கிரைன்', `மஃபின்' உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரெட் வகைகள் உலகமெங்கும் உள்ளன. ஃபிரெஞ்சு டோஸ்ட் முதல் பட்டர் நாண் வரை அன்றாடம் ஏதாவதொரு வகையில் இந்த பிரெட்களை நாம் உட்கொள்கிறோம். காய்ச்சல், தலைவலி என்றாலும்கூட பாலோடு பிரெட் நனைத்துச் சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆனால், அவை உண்மையில் ஆரோக்கியமானதா என்ற கேள்வி எழாமல் இருப்பதில்லை.

Bread
Bread
Pixabay

பிரெட் செய்வதற்கு மைதா அல்லது கோதுமை மாவுதான் மையப்பொருள். அதோடு சர்க்கரை, தேன், சோடா, தானிய வகைகள் என விதவிதமான பொருள்கள் சேர்க்கப்பட்டு, உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சிறப்புகளுடன் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. பிரெட் உலகம் முழுக்கப் பரவலாக உட்கொள்ளப்பட்டாலும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருளாகத்தான் கருதப்படுகிறது. இதுபற்றி டயட்டீஷியன் மீனாக்ஷி பஜாஜ் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``பிரெட் எப்போது ஆரோக்கியமற்ற உணவுப் பொருளாக மாறுகிறது?"

``பிரெட்டில் அதை வெள்ளை நிறத்தில் மாற்றக்கூடிய அடிடிவ்ஸ் (additives) மற்றும் பதப்படுத்தப்பட்ட மாவு உள்ளிட்ட பொருள்கள் ஒன்றாகச் சேரும்போது, பிரெட் ஆரோக்கியமற்ற உணவாக மாறுகிறது.

வெள்ளை ரொட்டியை அதிகமாக உட்கொண்டால் உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. நிச்சயம் காலை நேரங்களில் பிரெட்டை உட்கொள்ளவே கூடாது. மாலை நேரங்களில் சாப்பிடலாம்.

சில உற்பத்தியாளர்களால் சேர்க்கப்படும் ஹைட்ரோஜினேடெட் (hydrogenated) கொழுப்புகள், உடலிலுள்ள நல்ல கொழுப்புகளை அழித்து, தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சிலர், பிரவுன் நிற பிரெட் ஆரோக்கியம் என நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், பெரும்பாலான பிரவுன் பிரெட்களில் கேரமல் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும். எனவே, பிரெட் வாங்குவதற்கு முன் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள்களின் அளவுகளைச் சரிபார்ப்பது நல்லது."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `ஹோல்வீட்' என்று பேக் செய்யப்படும் பிரெட் வகைகள் உண்மையில் உடலுக்கு நல்லதா?"

`` `ஹோல்வீட்' பொருள்கள் உடலுக்கு முழுமையான ஆரோக்கியம் தரும் என்று சொல்லிவிட முடியாது. ஹோல்வீட் பிரெட் வகைகளிலும் 20% பதப்படுத்தப்பட்ட பொருள்கள், சிந்தடிக் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. அதனால், எந்த வகையான பிரெட்டாக இருந்தாலும், கன்டென்ட் அளவுகளைச் சரிபார்ப்பது அவசியம்."

Wholegrain Bread
Wholegrain Bread
Pixabay

வெள்ளை பிரெட் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களால் தயாரிக்கப்படுகிறது. தானியங்களைச் சுத்திகரிக்கும்போது, அதிலிருக்கும் நார் மற்றும் இதரச் சத்துகள் வெளியேற்றப்படுகின்றன. வெள்ளை பிரெட்டின் சுவை வேண்டும், அதே நேரத்தில் இயற்கை சத்துகள் வேண்டும் என்று நினைப்பவர்கள், வெள்ளை ஹோல்வீட் பிரெட்களை தேர்வு செய்யலாம்."

ஆனால், அதற்கு முன் தரத்தைச் சரிபார்த்துக்கொள்வது முக்கியம். 100% ஹோல் கிரைன் அல்லது ஹோல் வீட் என்பது முதன்மைப் பொருளாக இருந்தால், அதைத் தேர்வு செய்யலாம். `ஹோல்' என்ற வார்த்தை இல்லாமல், வெறும் 'வெள்ளை வீட்' என்று மட்டும் பிரின்ட் செய்யப்பட்டிருந்தால், அதில் நிச்சயம் இயற்கை தானியங்கள் எதுவும் சேர்க்கப்பட்டிருக்காது."

``எந்த பிரெட் வகையை முற்றிலும் தவிர்க்கவேண்டும்?"

Bread Making process
Bread Making process
Pixabay

``நான் எப்போதும் என் பேஷன்ட்களுக்கு வெள்ளை பிரெட்டை பரிந்துரைக்கவே மாட்டேன். நீண்ட நாள்கள் கெடாமல் இருப்பதற்காக அந்த பிரெட்களில் செயற்கை ப்ரிசர்வேட்டிவ்கள் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இவை பிரெட்டை கெட்டுப்போவதிலிருந்து தடுத்தாலும், உடலுக்கு ஏராளமான தீங்குகளை விளைவிக்கும்.

பெரும்பாலும் அனைத்து வகையான பிரெட்களிலும் அதிகமான சர்க்கரை அல்லது சர்க்கரை மாதிரிகள் பயன்படுத்தப்படுகின்றன. கார்ன் சிரப் அல்லது சுக்ரோஸ் (Sucrose), குளுக்கோஸ் (Glucose) போன்று `ose' என்று முடியும் பொருள்கள் கன்டென்ட் பகுதியில் அச்சடிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அவற்றைத் தவிர்க்கவேண்டும். இவை எல்லாமே எக்ஸ்ட்ரா சர்க்கரைகள்தான். அதிலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கவனத்துடன் இருப்பது அவசியம்."

``உடல் எடை குறைப்பதற்கு பிரெட் உதவுகிறதா?"

``வெள்ளை பிரெட், வெள்ளைக் கிழங்கு, வெள்ளை சாதம் மற்றும் வெள்ளை பாஸ்தா உள்ளிட்டவற்றை டயட்டிலிருந்து நீக்கினால், உடல் எடை குறைய அதிக வாய்ப்பிருக்கிறது."

Toasted Bread
Toasted Bread
Pixabay
சாக்லேட் பரிசளித்தால் காதலிக்கு மிகவும் பிடிக்கும்... ஏன் தெரியுமா? #ChocolateDay

ஏனென்றால், இயல்பாகவே இந்த நான்கு உணவுப் பொருள்களுக்கும், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை உட்கொள்ளும் அளவை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளது. இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் எடைகூடவைக்கும் கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவைக் குறைக்க முடியும். அதனால் உடல் எடை குறையும் வாய்ப்பு இருக்கிறது. எந்த வகையில் பிரெட்டை உட்கொண்டாலும், அளவோடு சாப்பிடுவதே சிறந்தது."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு