Published:Updated:

ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் நான்கு இலைகள்! #MyVikatan

Leaves
News
Leaves

வெற்றிலை, இஞ்சி, தேன் ஆகிய மூன்றையும் வெறும் வாயில் மென்று சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்னைகள் குணமாகும்.

மா இலை

Mango leaves
Mango leaves

• மா இலையில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் ஆகியவை அதிகமாக நிறைந்துள்ளன.

• மா இலைகளில் நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து வர வாந்தி வருவது குறையும்.

• இளநரை, முடி கொட்டுதல் பிரச்னைகளுக்கு மா இலைச்சாறுடன் பொன்னாங்கண்ணிச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் கலந்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவது நல்லது.

• மா இலைகளை எரித்து, அதன் சாம்பலுடன் பசு வெண்ணெயைச் சேர்த்து தீப்புண்கள் மீது தடவினால், வலி உடனே குறையும்.

• பித்த வெடிப்பின் மீது மா இலையின் காம்பை ஒடித்து, அதிலிருந்து வரும் பாலை தடவி வர குணமாகும்.

• தொண்டைக் கட்டு, குரல் கம்மல் நோய்க்கு கொழுந்து மா இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து மென்று சாப்பிட குணமாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேப்பிலை

Neem Leaves
Neem Leaves

• வேப்பிலை மஞ்சள் காமாலை நோய்க்கு அருமருந்தாகும்.

• வேப்பிலை பல்வேறு வைரஸ், பாக்டீரியா கிருமிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

• காமாலை நோய் மற்றும் மாலைக்கண் நோய்க்கு வேப்பந்தளிருடன் ஓமம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.

• வேப்பங்கொழுந்து, மஞ்சள், தாளகம் இந்த மூன்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்து, இந்தக் கலவையை, பெண்களுக்கு தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது பற்றுப்போட்டு, நான்கு மணி நேரம் கழித்து கழுவ, முடிகள் அகன்று விடும்.

• வேப்பிலை பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது.

• வேப்பிலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் மூன்றையும் கலந்து இரவில் குடித்து வர நல்ல தூக்கம் வரும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெற்றிலை

Betel leaves
Betel leaves

• வெற்றிலையில் இரும்புச்சத்து, தாது உப்புகள் அதிகமாக உள்ளன.

• வெற்றிலை, இஞ்சி, தேன் ஆகிய மூன்றையும் வெறும் வாயில் மென்று சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்னைகள் குணமாகும்.

• வெற்றிலையை மிதமாக சூடு செய்து சாறு எடுத்து, இந்தச் சாறை மூக்கில் சில சொட்டுக்கள் விட்டால் தலைவலி, தலைபாரம், தும்மல் சரியாகும்.

• பூச்சி அல்லது தேள் கொட்டிய இடத்தின் மேல் வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்துத் தடவினால் வலி உடனடியாக நீங்கும்.

• வெற்றிலை, ஜாதிக்காய், கிராம்பு மூன்றையும் மென்று சாப்பிட்டால், இல்லற இன்பம் கூடும்.

துளசி

Basil leaves
Basil leaves

• துளசி நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது.

• குழந்தைகளுக்கு ஏற்பட்ட சளி விரைவில் குணமாக துளசி, மிளகு, வேப்பிலை மூன்றையும் கஷாயமாக்கிக் கொடுக்க சளியினால் ஏற்பட்ட உடல் வலி விரைவில் குணமாகும்.

• துளசி இலைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்க சளி, தலைவலி பிரச்னைகள் சரியாகும்.

• துளசியுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து தோல் புண், பூச்சிக்கடிக் காயங்கள் மீது தடவி வர விரைவில் குணமாகும்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன்