Published:Updated:

`தூதுவளை… நோய்களைப் போக்கும் தூதுவன்!' - மூலிகை ரகசியம் - 7

தூதுவளை

சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளம், தூதுவேளை ஆகிய வேறுபெயர்களும் தூதுவளைக்குச் சொந்தம். `வேளை’ வகைகளில் இதுவும் ஒன்று என்பதால் தூது`வேளை’ என்ற பெயர் இதற்கு.

`தூதுவளை… நோய்களைப் போக்கும் தூதுவன்!' - மூலிகை ரகசியம் - 7

சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளம், தூதுவேளை ஆகிய வேறுபெயர்களும் தூதுவளைக்குச் சொந்தம். `வேளை’ வகைகளில் இதுவும் ஒன்று என்பதால் தூது`வேளை’ என்ற பெயர் இதற்கு.

Published:Updated:
தூதுவளை

தாவரங்களுள் மருந்தாகப் பயன்படும் செடி வகைகளையும் மர வகைகளையும் அதிகம் அறிந்து வைத்திருப்போம். கொடி வகைகளும் மருந்தாகப் பயன்படும் எனும் உண்மையை நீங்கள் அறிந்துகொள்வதற்கான மூலிகை நேரமிது! பற்றி ஏறுவதற்கு வசதியான இடம் இருப்பின், அழகாக வளைந்து நெளிந்து பற்றி ஏறும் கொடி வகையான தூதுவளையைப் பற்றித் தெரிந்து கொள்வோமா!

தனது மெல்லிய தண்டு மற்றும் இலைகளில் சிறுசிறு முள்களைப் பெற்றிருக்கும் தூதுவளை. முள்கள் இருப்பினும் தனது மருத்துவ குணங்களின் மூலம் பாசத்தை வெளிப்படுத்தும் அன்பான மூலிகை இது. அருகிலிருக்கும் வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு சரசரவென ஏறும் தன்மை கொண்டது. இந்தக் கொடி வகையான தூதுவளை, சுரம், இருமல், சளி போன்ற கப நோய்களைக் குணப்படுத்த, `சங்க கால தூதுவனைப்’ போல மகிழ்ச்சியுடன் தூது செல்லும் என்பது சிறப்புச் செய்தி.

சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளம், தூதுவேளை ஆகிய வேறுபெயர்களும் தூதுவளைக்குச் சொந்தம். `வேளை’ வகைகளில் இதுவும் ஒன்று என்பதால் தூது`வேளை’ என்ற பெயர் இதற்கு.

தூதுவளை
தூதுவளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமையலுக்குத் துணை:

ஒரே மூலிகைதான்! ஆனால், தூதுவளையை வைத்து விதவிதமாக உங்களுக்குப் பிடித்தமான ரெசிப்பிக்களைச் செய்து கொண்டாடலாம். `ஸ்வீட் எடு கொண்டாடு…’ போல `தூதுவளையை எடு கொண்டாடு…’ எனும் வாசகத்தை நினைவு வைத்துக்கொண்டால், வாழ்நாள் முழுக்க நோயில்லா கொண்டாட்டம்தான்! தூதுவளையின் இலைகளைக் கொண்டு சட்னி, துவையல், ரசம், அடை எனப் பலவித உணவு வகைகளைச் செய்து சாப்பிடலாம்.

உணவாகப் பயன்படும் மூலிகைகளில் தூதுவளைக்கு என்றுமே முக்கிய இடமுண்டு. நெய்யைக் காய்ச்சும்போது, முருங்கை இலைகளைச் சேர்த்துக் காய்ச்சுவதைப்போல, தூதுவளை இலைகளையும் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தினால், நெய்யின் மருத்துவக் குணங்கள் பல மடங்கு அதிகரிக்கும். சளி, இருமல் போன்ற குறிகுணங்களைக் கட்டுப்படுத்த `தூதுவளை நெய்’ எனும் ஸ்பெஷல் சித்த மருந்தும் நமது பாரம்பர்யத்தில் உண்டு.

ஆராய்ச்சியில் தூதுவளை:

புற்றுநோய் மற்றும் கல்லீரல் சார்ந்த நோய்களில் தூதுவளையின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகள் பெருமளவில் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. காச நோயாளர்கள் உட்கொள்ளும் மருந்துகளோடு தூதுவளையையும் சேர்த்து பயன்படுத்தும்போது விரைவாக நோயின் தீவிரம் குறைகிறதாம்.

காது நோய்களுக்காக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகளுள் தூதுவளையும் முக்கியமான ஒன்று. குளிர்காலத்தில் குடிக்கும் தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சிப் பயன்படுத்தலாம். அடுத்துவரும் மழை மற்றும் குளிர்காலத்தில் தூதுவளை தண்ணீரை முயன்று பாருங்கள்! இதன் இலைச் சாற்றோடு, சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடிக்க சளி, இருமல் மட்டுமன்றி செரிமான உபாதைகளும் குணமாகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆஸ்துமா எனும் இரைப்பு:

`ஆஸ்துமா’ எனப்படும் இரைப்பு நோயைப் பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இரைப்பு நோய் பாரபட்சமின்றி பாதிக்கிறது. மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டு `கர்கர்’ என்ற ஓசையுடன் குளிர்காலத்தில் அவதி கொடுக்கும் இரைப்பு நோயின் தீவிரத்தைக் குறைக்க தூதுவளையை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

மேலும், குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அம்மாவிடம் சொல்லி தூதுவளை ரசம், தூதுவளை சட்னி எனச் சாப்பிடுங்கள். குளிர்கால நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது. தூதுவளை சட்னியை ஒருமுறை சாப்பிட்டுவிட்டீர்கள் என்றால், அதன் பிறகு உங்கள் ஃபேவரைட்டான வொயிட் சட்னி, கிரீன் சட்னியை எல்லாம் சில வாரங்களுக்கு மறந்தே விடுவீர்கள்! தூதுவளையோடு தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு சேர்த்துச் செய்யப்படும் தூதுவளைத் துவையல், மழைக்காலத்துக்கான ஸ்பெஷல் உணவு.

தூதுவளை
தூதுவளை

தூதுவளை சமையல்:

தூதுவளையை வைத்து ஒரு மருத்துவ சமையல் டிப்ஸ் சொல்லட்டுமா? அது ஆஸ்துமா நோயாளர்களுக்கும் நல் உணவு! பத்து முதல் பதினைந்து தூதுவளை இலைகளை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இதை, சின்ன வெங்காயத்தோடு சேர்த்து நல்லெண்ணெயில் லேசாக வதக்கி, ஐந்து நாள்களுக்கு சிறிய நெல்லிக்காய் அளவு காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வரலாம்! இந்த மூலிகை ரெசிப்பியைப் பயன்படுத்த ஆஸ்துமா நோயாளர்களுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் பெருமளவில் குறையும். தூதுவளை இலையில் சாறு பிழிந்து தேன் சேர்த்தும் குடிக்கச் சொல்லலாம். நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாயில் உள்ள சளியை வெளியேற்றும் சிறப்புத் தன்மையும் நம்ம தூதுவளைக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சளித் தொந்தரவு இருப்பதைப்போல தோன்றினால், உடனடியாகத் தூதுவளையை உணவு முறைக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர், தூதுவளை உங்களின் நெருங்கிய நண்பனாகிவிடும்! சளி, இருமல், சுரம் போன்ற நோய்களின் தாக்கம் அதிகம் இல்லாத நேரங்களில் தூதுவளையை சாப்பிட நினைத்தால் சிறிது பனைவெல்லம் சேர்த்து சாப்பிடுங்கள்.

விதைகளைப் பரிசளியுங்கள்:

தூதுவளை பழங்களைப் பார்த்தால் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். வாய்ப்பிருக்கும்போது நண்பர்களுக்கு அந்த விதைகளைப் பரிசளித்து விதைக்கச் சொல்லி மகிழுங்கள். நீங்கள் கொடுக்கும் இந்த வித்தியாசமான பரிசு, உங்கள் நண்பர்களுக்கு உண்டாகும் பல நோய்களுக்கு மருந்தாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தூதுவளையின் காய்களை வெயிலில் காயவைத்து, பின் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். உடல் வலி, தலை பாரம் போன்றவை உண்டாகும்போது, சிறிதளவு பொடியை அரை டம்ளர் வெந்நீரில் கலந்து அருந்துங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூதுவளைக்குள் இருக்கும் வேதிப்பொருள்கள், `மாஸ்ட் செல்’ சிதைவுறுதலைத் தடுத்து நிறுத்தி, பல்வேறு காரணிகளால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக்கொள்கின்றன. தூதுவளையின் இலைகள் மற்றும் மலர்கள், நீரிழிவு நோயால் உண்டாகும் பாதிப்புகளைத் தடுப்பதற்கும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் பயன்படுவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. புற்றுசெல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதோடு, ஈரல் தேற்றியாகவும் தூதுவளையின் சாரங்கள் செயல்படுகின்றன. காசநோய்க்கான மருந்துகளோடு தூதுவளையையும் சேர்த்துப் பயன்படுத்த நோயின் தீவிரம் விரைவாகக் குறைகிறதாம்.

தூதுவளைக் குடிநீர்:

தூதுவளை இலைகளை குடிநீரிட்டு பருகினால் பசி உணர்வு அதிகரிக்கும். இருமல் தலைதூக்காது. செவ்விய நிறத்தில் அழகாக இருக்கும் இதன் பழங்களை சாப்பிட கப நோய்கள் மட்டுமன்றி உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும். பாம்பு கடித்துவிட்டால் நஞ்சை முறிக்கும் வேறு சில மூலிகைகளோடு சேர்த்து, தூதுவளை பழங்களையும் உடனடியாகச் சாப்பிடுவார்களாம் மலைவாசிகள்.

விக்ரம் குமார்
விக்ரம் குமார்

அசைவ உணவு சாப்பிட்ட பிறகு வெற்றிலை (தாம்பூலம்) தரிக்கும்போது, தூதுவளை இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். செரிமானத்தை அதிகரிப்பதோடு, கபத்தையும் அறுக்கும்! தூதுவேளை கொண்டு செய்யப்படும் லேகியம், நெய், சூரணம் என அனைத்து சித்த மருந்துகளும், நுரையீரல் பாதையில் சுவாசம் சீராக நடைபெற உதவுபவை.

கப நோய்களுக்கென நம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய மூலிகைப் பட்டியலுக்குள் தூதுவளைக்கு நிச்சயம் இடமுண்டு. இன்றே தூதுவளை விதைகளைத் தூவுங்கள். கொடியாக வளர்ந்து உங்கள் உயரத்தை மிஞ்சுவதைக் கண்டு பெருமை அடைவீர்கள். முள்கள் கொண்ட கொடியேறும் தாவரம் என்பதால், தோட்டத்தின் மூலையில் அல்லது வேலியில் வளரக்கலாம். சூரிய ஒளியை அதிகம் எதிர்பார்க்கும் தாவரம் தூதுவளை.

தாவரவியல் பெயர்:

Solanum trilobatum

குடும்பம்:

Solanaceae

கண்டறிதல்:

கொடி வகையைச் சார்ந்தது. இலைகளில் ஆங்காங்கே சிறுசிறு முட்களைக் கொண்டிருக்கும். உருண்டை வடிவில் சிவந்த நிற பழங்களையும் உள்ளே நிறைய விதைகளும் இருக்கும். கொடியேறும் மெல்லிய தண்டிலும் நிறைய முள்கள் காணப்படும். ஊதா நிறத்தில் பூக்கும்.

தாவரவேதிப் பொருள்கள்:

Beta – sitosterol, Saponins, Flavonoids.

தூதுவளை… நோய்களைப் போக்கும் தூதுவன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism