Published:Updated:

`குளிர்பானங்களைப் பருகினால் புற்றுநோய்?'- எச்சரிக்கும் ஆய்வு முடிவு

cancer
News
cancer

இதற்கு முன்பு பல்வேறு ஆய்வுகளில் உடல்பருமனுக்கு முக்கியக் காரணமாக குளிர்பானங்கள் கூறப்பட்டுவந்தாலும் இந்த ஆய்வில்தான் முதன்முறையாக அவை புற்றுநோய் தாக்குவதற்கு முக்கியக் காரணம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

குளிர்பானங்களின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. `தினமும் வெறும் 100 மில்லி குளிர்பானங்களைக் குடித்தால்கூட புற்றுநோய் பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்' என்பதுதான் அந்த ஆய்வு முடிவு.

cool drinks
cool drinks

பிரான்ஸ் நாட்டின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான `இன்செர்ம்' நடத்திய இந்த ஆய்வில் 22,000 ஆண்களும் 79,000 பெண்களும் பங்கெடுத்துக்கொண்டனர். அவர்களிடம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உணவு மற்றும் குளிர்பான வகைகளைக் காட்டி, அவற்றில் `எந்தெந்த உணவுகளை, சராசரியாக எவ்வளவு அளவு உட்கொள்கிறார்கள்?' எனக் கேட்டு தகவல்கள் பெறப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் குறிப்பிட்ட அந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உணவுகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட உணவைத் தினந்தோறும் எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த ஆய்வு 2009-ம் ஆண்டு தொடங்கி பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்டது. பத்தாண்டுகளின் நிறைவில் ஆய்வில் பங்கெடுத்தவர்களில் பலரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உணவுப்பழக்கத்தை மட்டும் ஆய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஒவ்வொரு நபரின் வயது, பாலினம், வேலை, குடும்பச் சூழல், வாழுமிடம், அவர்களிடம் காணப்படும் புகை மற்றும் மதுப்பழக்கம், மற்ற உடல் உபாதைகள் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் முடிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில், `குளிர்பானங்களைப் பருகும் நபர்களுக்குப் புற்றுநோய் பாதிக்கும் அபாயம் 18 சதவிகிதம் அதிகமாகக் காணப்படுகிறது.

Breast cancer
Breast cancer

குறிப்பாக, பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் 22 சதவிகிதம் அதிகமாகக் காணப்படுகிறது' என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு முன்பு பல்வேறு ஆய்வுகளில் உடல்பருமனுக்கு முக்கியக் காரணமாக குளிர்பானங்கள் கூறப்பட்டுவந்தாலும் இந்த ஆய்வில்தான் முதன்முறையாக அவை புற்றுநோய் தாக்குவதற்கு முக்கியக் காரணம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`குளிர்பானங்களில் அளவுக்கு அதிகமாகச் சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் இருப்பதுதான் இதற்குக் காரணம். இந்த ஆய்வு முடிவுகளை ஓர் எச்சரிக்கையாகக் கருதி மக்கள் குளிர்பானங்களையும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

cool drinks
cool drinks

அரசாங்கம் இதுபோன்ற பானங்களுக்கு வரிவிகிதத்தையும் விதிமுறைகளையும் கடுமையாக்க வேண்டும்' எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.