Published:Updated:

கொரோனா: `பாதுகாப்பு முக்கியம்.. ஆனால் கட்டாயமில்லை!’ -இந்தியாவில் உணவகங்கள் மூடுவது தொடர்பாக NRAI

உணவகங்கள் மூடப்பட்டன
உணவகங்கள் மூடப்பட்டன

இந்த அமைப்பின் கீழ் ஐந்து லட்சம் உணவகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கான உணவகங்கள், பார்கள், கஃபேக்கள் இதில் அடங்கும்.

`நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் காரணத்தால், பாதுகாப்பு கருதி இந்தியா முழுவதும் உள்ள உணவகங்கள் மார்ச் 17 முதல் மார்ச் 31 வரை செயல்படாது' என்று நேஷனல் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா(NRAI) அறிவித்துள்ளது.

NRAI
NRAI

இந்த அமைப்பின் கீழ் ஐந்து லட்சம் உணவகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கான உணவகங்கள், பார்கள், கஃபேக்கள் இதில் அடங்கும்.

'எங்கள் உணவகங்களில் வேலைபார்க்கும் பணியாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். யாருக்காவது இந்நோயால் உயிரிழப்பு ஏற்பட்டால் அந்தக் குற்றஉணர்வை எங்களால் தாங்க முடியாது' என்று உணவகக் கூட்டமைப்பின் தலைவர் அனுராக் கேட்ரியார் கூறியுள்ளார். 'இந்த முடிவைப் பின்பற்றுவது அவரவர் விருப்பம். இது கட்டாயமில்லை' என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Restaurants
Restaurants

ஃபர்ஸ்ட் ஃபிடில்(First Fiddle) நிறுவனம் செவ்வாய் அன்று தன் அனைத்துக் கிளைகளையும் மூடிவிட்டது. இதுகுறித்து அந்நிறுவன நிர்வாக இயக்குநர் பிரியாங்க் சுக்கியா கூறுகையில், 'உணவகங்களில் சமுகத் தொடர்பு இல்லாமல் தற்காத்துக்கொள்வது என்பது இயலாத காரியம். எங்கள் பணியாளர்களின் நலன் கருதி வியாபாரம் பற்றிக் கவலைப்படாமல் இந்த முடிவை எடுத்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.

உணவகக் கூட்டமைப்புத் தலைவர் அனுராக் கேட்ரியார், 'இந்தத் துறை முழுவதுமாகப் பாதிப்படையும் முன் அவசர முடிவு எடுத்தாக வேண்டும். எரிசக்தி, வாடகை, வரி இவற்றுக்கான இடைக்கால நிவாரணம் குறித்து விவாதித்து வருகிறோம்' என்றிருக்கிறார்.

கொரோனா
கொரோனா
`பயணங்களைத் தவிருங்கள் ப்ளீஸ்!’ -பொதுமக்களுக்கு விஜயபாஸ்கர் வேண்டுகோள்

2019-ல் வெளியான அறிக்கையின்படி இந்திய உணவு வழங்கும் துறை 73 லட்சம் மக்களுக்கு வேலை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு