Published:Updated:

ஜல்ஜீரா முதல் பஜ்ஜிவரை... கொளுத்தும் வெயிலுக்கு கூலான நுங்கு ரெசிப்பீஸ்!

நுங்கு
நுங்கு

"உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு வேளை 4 அல்லது 5 நுங்கு மட்டும் சாப்பிட்டு டயட் இருக்கலாம்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோடைக்காலத்தின் குளுகுளு சுகங்களில் நுங்கு என்கிற ஐஸ் ஆப்பிளுக்கு முக்கிய இடமுண்டு. தினந்தோறும் சாப்பிட்டாலும் சலிக்காது. அதேபோல் பனங்காய்களைச் சீவி, நுங்கு அடிபடாமல் பதமாக எடுக்கிற லாகவமும் பார்க்கச் சலிக்காது. பனங்காயின் மேலே, கீழே, இரண்டு பக்கவாட்டிலும் என நான்கு சீவு... கத்தியால் நெம்பி நுங்குகளைப் பனையோலையின் மீது தள்ளுவதைப் பார்க்கையிலேயே கண்களும் நாக்கும் குளுமையை உணரும்.

நுங்கு
நுங்கு

இளம் நுங்கு, கல் நுங்கு, நுங்குத் தண்ணீர், நுங்கின் தோல் ஆகியவற்றின் மருத்துவப் பலன்கள்... கொரோனா தொற்று இருப்பவர்கள் நுங்கு சாப்பிடலாமா ஆகியவற்றைப் பற்றி இயற்கை மருத்துவர் யோ. தீபா சொல்கிறார். கூடவே, சிம்பிளான, ருசியான நுங்கு ரெசிப்பிகளை சொல்லித் தருகிறார் சமையல்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார். முதலில் மருத்துவர் யோ. தீபா.

"பனை நுங்கில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளெக்ஸ், சி ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், பொட்டாசியம் ஆகிய தாது உப்புகள் இருக்கின்றன. வைட்டமின்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வியர்வை காரணமாக நாம் இழக்கிற மினரல்களை சோடியமும் பொட்டாசியமும் ஈடுகட்டும். அதனால் சன் ஸ்ட்ரோக்கிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

இயற்கை மருத்துவர் யோ. தீபா
இயற்கை மருத்துவர் யோ. தீபா

வெயில் காலத்தில் நீர்ச்சத்து இழப்பு காரணமாக நிறைய பேருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நுங்கில் இருக்கிற அதிகப்படியான நீர்த்தன்மை நம் உடலின் நீரிழப்பை ஈடுகட்டுகிறது. அதே நேரம் இதில் இருக்கிற பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெயில் காலத்தில் செரிமானப் பிரச்னைகள் அதிகமாக இருக்கும். கூடவே மலச்சிக்கலும்... இந்த சீசனில் பலருக்கும் ஆசன வாயில் எரிச்சல், வலி இருக்கும். இதற்குக் காரணம் உடல் சூடு அதிகமாவதுதான். இதற்கும் நுங்கு நல்ல தீர்வு.

நுங்கு
நுங்கு

கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்கும். இந்த சீசனில் அது இன்னமும் அதிகரிக்கும். இவர்கள் தினமும் 2 இளம் நுங்கு சாப்பிட்டால் மலச்சிக்கல் அவதியிலிருந்து விடுபடலாம்" என்றவர், கொரோனா தொற்று இருப்பவர்கள் நுங்கு சாப்பிடலாமா என்பது பற்றியும் சொன்னார்.

"கொரோனா தொற்று ஏற்பட்டு க்வாரன்ட்டீனில் இருந்து வந்தவர்களும், சளி, மூச்சிரைப்பு போன்ற பிரச்னை இருப்பவர்களும் நுங்கு சாப்பிடாமல் இருப்பதே பாதுகாப்பு.

நுங்கின் தோல் வெயிலால் வருகிற சருமப் பிரச்னைகளைச் சரி செய்யும்.

சிலர் நன்கு முற்றிய நுங்கை விரும்பிச் சாப்பிடுவார்கள். தப்பில்லை. தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால்...''
இயற்கை மருத்துவர் யோ. தீபா

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு வேளை 4 அல்லது 5 நுங்கு மட்டும் சாப்பிட்டு டயட் இருக்கலாம்.

இரும்புச்சத்துப் பற்றாக்குறை இருப்பவர்கள் நுங்கைத் தோலுடன் சாப்பிட வேண்டும். ஆனால், தற்போது கொரோனா தொற்றுக்குக் கைகளால் தொடுதல் முக்கியமான காரணமாக இருப்பதால், நுங்கை கல் உப்பு கலந்த தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவிச் சாப்பிடுங்கள்.

சிலர் நன்கு முற்றிய நுங்கை விரும்பிச் சாப்பிடுவார்கள். தப்பில்லை. தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், அதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், நான்கு அல்லது ஐந்துக்கு மேல் சாப்பிட்டால் வயிற்றைச் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கும். விளைவு வயிற்றுவலி, மலம் கழித்துக்கொண்டே இருப்பது போன்ற கஷ்டங்கள் வரலாம்.

நுங்கு
நுங்கு
நுங்கு நாள்கள்! - வாசகர் பகிர்வு #MyVikatan

வெள்ளை நிறத்தில் இருக்கிற உணவு, காய்கறி மற்றும் பழங்களில் எல்லாமே Anthocyanin எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் இருக்கும். நுங்கில் இது அதிகம். மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு இது பெஸ்ட் மருந்து என்றே சொல்லலாம்."

ஜல்ஜீரா நுங்கு

ஜல்ஜீரா நுங்கு
ஜல்ஜீரா நுங்கு

நான்கு நுங்குகளைப் பொடியாக கட் பண்ணவும். ஒரு நுங்கை தேவையான அளவு பனைவெல்லத்துடன் சேர்த்து அரைக்கவும். இரண்டையும் ஒன்று சேர்த்து, மேலே வறுத்துப் பொடி செய்த சீரகத்தூள் அரை டீஸ்பூன், ஒரு சிட்டிகை உப்பு, சில துளிகள் எலுமிச்சைச்சாறு சேர்த்து அருந்தவும்.

நுங்கு சாலட்

சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்
சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்

நுங்கில் தோலை எடுத்துவிட்டு, லேசாக உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் தூவி, விருப்பப்பட்டால் தேன் விட்டு அப்படியே சாப்பிடலாம்.

நுங்கு பொடி சாதம் 

ஒரு கப் அரிசியை வேக வைத்து வடிக்கவும். ஒரு வெங்காயத்தை நறுக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, தனியா ஒரு டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், தேவையான அளவு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை வெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கவும். இதனுடன் முற்றிய நுங்குத் துண்டுகள், பொடித்த தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு புரட்டி, சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

கல் நுங்கு பஜ்ஜி

கல் நுங்கு பஜ்ஜி
கல் நுங்கு பஜ்ஜி

முற்றிய நுங்கை இரண்டாக அல்லது நான்காக கட் பண்ணிக் கொள்ளவும். இதை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வெயிலையும் நுங்கையும் கொண்டாடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு