Published:Updated:

வெளியிடங்களுக்குப் பயணம்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைத் தேநீர் செய்வது எப்படி?

மூலிகைத் தேநீர்
மூலிகைத் தேநீர்

இந்தத் தேநீரை வீட்டிலிருப்பவர்கள் தினமும் ஒருவேளை சாப்பிடலாம், மார்க்கெட், கடைகள் போன்ற கூட்ட நெரிசலான பகுதிகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியதும் இதைப் பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சென்னையில் அலோபதி மருந்துகளுடன் சித்த மருத்துவ மருந்துகளையும் கொடுத்ததன் பேரில் 69 பேர் குணமடைந்து அண்மையில் வீடு திரும்பினர். இதைத் தொடர்ந்து அடுத்த முயற்சியாக கோயம்பேடு பகுதியில் அதிக பாதிப்புள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு, தடுப்பு நடவடிக்கையாக மூலிகைத் தேநீர் வழங்கப்பட்டது.

Herbal Tea
Herbal Tea

சித்த மருத்துவர் வீரபாபு இந்தப் பணிகளைக் கவனித்தார். இந்த நிலையில், அந்தப் பகுதியில் புதிய நோயாளிகள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, "சென்னையில் கோயம்பேடு பகுதியில் நோய்ப் பரவல் அதிகமாகக் காணப்பட்ட இடங்களில் காலையில் சுமார் 9,000 பேருக்கும் மாலையில் 7,000 பேருக்கும் சிறப்பு மூலிகைத் தேநீரை வழங்கி கண்காணித்தோம்.

ஒரு வாரத்துக்குப் பிறகு அந்தப் பகுதியில் புதிய நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை. கோயம்பேடு பகுதியைத் தொடர்ந்து வடசென்னையில் பாதிப்பு அதிகமுள்ள ராயபுரத்திலும் இதை வழங்கவிருக்கிறோம்.

மூலிகைத் தேநீருடன் வெல்லம், கருப்பட்டி சேர்த்துப் பருகலாம். சர்க்கரை நோயாளிகள் இனிப்பைத் தவிர்த்துவிட்டு அப்படியே பருகலாம்.
சித்த மருத்துவர் வீரபாபு
அஸ்வகந்தாவும் கொரோனாவும்... ஆய்வும் மருத்துவ விளக்கமும்..!

ராயபுரத்தில் மூலிகைத் தேநீருடன் ஆவிபிடிக்கும் சிகிச்சையையும் செய்யவிருக்கிறோம். ஏற்கெனவே மூலிகைத் தேநீரையும் ஆவிபிடிக்கும் சிகிச்சையையும் 50 பேருக்கு கொடுத்துப் பரிசோதித்துப் பார்த்ததில், சாதகமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன.

மூலிகைத் தேநீர் தயாரிப்பதற்கான மூலக்கூறுகள் அடங்கிய தூளை சென்னையிலுள்ள தனியார் ஆய்வகத்தில் கொடுத்துப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி தேநீர் தயாரித்துப் பருகும்போது, அது செல்களில் பாதுகாப்பான ஒரு திரையை உருவாக்குகிறது என்பதை உறுதி செய்துள்ளனர்.

corona
corona

இதில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு மூலக்கூறும் என்னென்ன பலன்களைக் கொடுக்கும் என்ற விரிவான அறிக்கையை விரைவில் அந்த ஆய்வகம் அளிக்கும்.

கொரோனா வைரஸ் தொண்டைப் பகுதியில் இருக்கும்போதே அதன் வீரியத்தைக் குறைக்க மூலிகைத் தேநீரில் சேர்க்கப்பட்டுள்ள மூலக்கூறுகள் உதவும்.

பிற மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டால் அவை உடலில் கிரகிக்கப்பட்டு ரத்தத்தில் கலந்த பிறகே வேலை செய்யும். ஆனால், இந்த மூலிகைகள் நேரடியாகச் செயல்படத் தொடங்குகின்றன. கொரோனா வைரஸால் தனித்து இயங்க முடியாது. செல்களுக்குள் நுழைந்து அது பெருகத் தொடங்கும். இந்தத் தேநீரை பாதுகாப்புக்காக எடுக்கும்போது உடலிலுள்ள செல்களுக்குள் கொரோனா வைரஸ் நுழைய முடியாத வகையில் ஒரு திரையை உருவாக்கும் என்பதால் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

சித்த மருத்துவர் வீரபாபு
சித்த மருத்துவர் வீரபாபு

இந்தத் தேநீரை அனைத்து வயதினரும் குடிக்கலாம். 5 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 15 மில்லி, 11 முதல் 15 வயது குழந்தைகளுக்கு 40 மில்லி என்ற அளவில் கொடுக்கலாம். 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100 மில்லி பருகலாம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கொடுக்கலாம். தினமும் ஒருவேளை சாப்பிடலாம், மார்க்கெட், கடைகள் போன்ற கூட்ட நெரிசலான பகுதிகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியதும் இதைப் பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்" என்றார்.

மூலிகைத் தேநீர் ரெசிபி

தேவையானவை:

சுக்கு - 100 கிராம்

மிளகு - 5 கிராம்

திப்பிலி - 5 கிராம்

சித்தரத்தை - 30 கிராம்

அதிமதுரம் - 100 கிராம்

மஞ்சள் - 10 கிராம்

ஓமம் - 5 கிராம்

கிராம்பு - 5 கிராம்

கடுக்காய்த்தோல் - 50 கிராம்

Herbal tea
Herbal tea

செய்முறை

கொரோனா இல்லாத கொங்கு... பச்சை மர்மம்!

அனைத்துப் பொருள்களையும் மெஷினில் கொடுத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு நபருக்கு 10 கிராம் தேநீர் தூள் என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 400 மில்லி தண்ணீரில் தூளைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைக்க வேண்டும்.

தேநீர் கொதித்துக்கொண்டிருக்கும்போது புதினா, கற்பூரவல்லி, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றையும் சிறிது சேர்த்துக்கொள்ளலாம். வற்ற வைத்த தேநீருடன் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துப் பருகலாம். சர்க்கரை நோயாளிகள் இனிப்பைத் தவிர்த்துவிட்டு அப்படியே பருகலாம்."

அடுத்த கட்டுரைக்கு