Published:Updated:

ரவா லட்டு, கம்பு லட்டு, மாவுருண்டை... கிராமத்து ஸ்நாக்ஸில் அசத்தும் இந்துராணி!

ஸ்நாக்ஸ்
News
ஸ்நாக்ஸ்

மதுரை வாடிப்பட்டியை அடுத்த பூச்சம்பட்டு கிராமத்தில் 'செந்தூர் ஸ்நாக்ஸ்' என்ற பெயரில் அரசு அனுமதியுடன் ரவா லட்டு, கடலை மிட்டாய், மைசூர் பாகு எனப் பதார்த்தங்களை குடிசைத் தொழிலாகச் செய்து அசத்தி வருகிறார் இந்துராணி.

கடைப்பக்கம் கூட்டிச்சென்றாலே கலர் கலராகத் தொங்கவிடப்பட்டுள்ள பாக்கெட் ஸ்நாக்ஸ்களைக் கேட்டுத் தொந்தரவு செய்துவிடுவார்கள் குழந்தைகள். பாக்கெட் ஸ்நாக்ஸ்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இச்சூழலில் சத்தான தின்பண்டங்களை மீண்டும் கையில் எடுத்து பத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளார் இந்து என்ற இந்துராணி.

ஸ்நாக்ஸ் தயாரிப்பு
ஸ்நாக்ஸ் தயாரிப்பு

மதுரை வாடிப்பட்டியை அடுத்த பூச்சம்பட்டு கிராமத்தில் 'செந்தூர் ஸ்நாக்ஸ் ' என்ற பெயரில் அரசு அனுமதியுடன் ரவா லட்டு, கடலை மிட்டாய், மைசூர் பாகு என பதார்த்தங்களை குடிசைத் தொழிலாகச் செய்து அசத்தி வருகிறார்.

"மதுரைதான் சொந்த ஊர். ஆனா, என் வீட்டுக்காரர் நெல்லையில் வேலை செய்ததால் அங்கேயே தங்கிவிட்டோம். மாமியார் இறந்த பிறகு திரும்பவும் பூச்சம்பட்டிக்கே திரும்பி வந்துட்டோம். திடீர்னு வந்ததும் அவருக்கு எந்த வேலையும் நிரந்தரமா கிடைக்கல. கிடைக்கிற வேலைய செஞ்சு குடும்பத்த ஓட்டுனோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எனக்கு தையல் தெரியுங்கிறதால என்னால முடிஞ்ச அளவுக்கு அவருக்கு சப்போர்ட்டா இருந்தேன். என்னுடைய அக்கா மஞ்சுளாவுக்கும் எதாவது சொந்தமா தொழில் செய்யணும்னு ஆர்வம் இருந்துச்சு. அதனால கிராமங்களில் கிடைக்கும் பால் பண், இனிப்பு கேக், கடலை மிட்டாய், மாவுருண்டை செஞ்சு விக்கிற ஆள்கள்கிட்ட மொத்தமா வாங்கி பேக் பண்ணி வியாபாரம் செஞ்சோம். ஒரு கட்டத்துல தேவை அதிகமாயிகிடுச்சு. நாமளே அதையெல்லாம் செஞ்சு வித்தா என்னன்னு தோணுச்சு. என் கணவர், அண்ணன் எல்லாரும் எங்களை உற்சாகப்படுத்தினாங்க. அக்கம் பக்கத்துல இருக்கிற பெண்களையும் சேத்துக்கிட்டு ஆரம்பிச்சோம்.

ரவா லட்டு
ரவா லட்டு

சேல்ஸ் அதிகமாக அதிகமாக வேலைக்கு ஆட்களையும் அதிகப்படுத்திட்டோம். ரவா லட்டு, கம்பு லட்டு, கேப்பை லட்டு, பாசிப்பயறு லட்டு, மாவுருண்டை, கடலை உருண்டை, பொரி உருண்டை, பாதுஷா, மைசூர் பாகு, அல்வான்னு நிறைய ஸ்நாக்ஸ் ஐட்டங்களைச் செய்ய ஆரம்பிச்சோம்.

தொழில் பெருசாகி, தேவையும் அதிகமாகிட்டதால இதை முறைப்படி செய்யணும்னு நினைச்சோம். அரசாங்கத்துல பதிவு செஞ்சோம். எங்கள் கிராமத்துப் பெண்கள் போக, பேக்கரி பொருள்கள் செய்யத்தெரிஞ்ச மாஸ்டர் ஒருத்தரையும் வேலைக்கு எடுத்துக்கிட்டோம். எங்க அண்ணனும் என் கணவரும் கடைகளுக்கு சப்ளை பண்ற வேலையைப் பாத்துக்கிறாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண்கள் தயார் செய்வதால் வீட்டு பக்குவத்தில் சுவை இருக்கும். செய்யும் ஒவ்வொரு பொருளிலும் சுவையும் ஆரோக்கியமும் இருக்கணும்னு மெனக்கெடுறோம். குழந்தைங்க சாப்பிடுறதால, எந்தப் பொருளும் அவங்க ஆரோக்கியத்தைப் பாதிச்சிடக் கூடாது. சுவை நல்லா இருக்கதால விற்பனையும் அதிகமா இருக்கு. சுவை மட்டுமல்ல... ஆரோக்கியமும் முக்கியம். கொரோனா காலகட்டத்தில் ஸ்கூல், காலேஜ் மூடி இருக்கதால இப்போதைக்கு வியாபாரம் டல்லா இருக்கு. இருந்தாலும் வேலையாட்களுக்கு வேலை கொடுக்கணும்னு குறைந்த அளவுல ஸ்நாக்ஸ் தயார் செய்றோம். நஷ்டம் இல்லாம தொழில் போகுது. கொரோனா ஒழிஞ்சுட்டா மீண்டும் ஸ்நாக்ஸ் வியாபாரத்தில் ஏற்றம் இருக்கும்.

மூலப் பொருள்களைத் தரமா பார்த்துப் பார்த்து வாங்குறதால சுவையும் ஒரே மாதிரி தரமா இருக்கு. குழந்தைகளுக்கு நல்ல பொருள்களைக் கொடுக்கிறோம்னு திருப்தியும் இருக்கு. கொரோனோக்கு முன்னாடி கல்யாணம் ஆர்டர்கள்கூட கிடைச்சது. இப்போதைக்கு எல்லாரோட நிலையும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. அதனால பொறுமையாகத் தொழில கையாள்றோம். என் கணவர், நான் சொந்தமா தொழில் செய்றது சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கிறதா சொல்வாரு. அவரும் எனக்கு பக்கபலமா இருக்காரு. இதை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டுப் போறதைப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கோம்" என்கிறார் இந்துராணி.