Published:Updated:

தயிர் முதல் சாலட் வரை... உணவுகளில் சேரும் ரகசிய சர்க்கரை! சுகர் அலர்ட்

பரிந்துரைக்கப்பட்ட அளவைக்காட்டிலும் கூடுதலான அளவு சர்க்கரையை, மெட்ரோ நகரங்களில் வாழும் பெண்கள் எடுத்துக்கொள்கின்றனர் - ஆய்வுமுடிவு.

சர்க்கரை
சர்க்கரை

ம்மில் இனிப்பை விரும்பாதவர்கள் மிகச் சிலரே. இனிப்பு என்பது நமது கலாசாரத்தோடும் கலந்தது. எந்த நல்ல காரியத்திலும் முன் நிற்பது இனிப்புகள்தான். தீபாவளி, பொங்கல் என எந்தப் பண்டிகையைக் கொண்டாடினாலும் இனிப்புப் பலகாரங்கள்தான் பண்டிகையின் இன்பத்தை மேலும் அதிகரிக்கும். இவ்வளவு ஏன்... இலை நிறைய உணவு இருந்தாலும், ஓரத்திலிருக்கும் இனிப்பின் பக்கம்தான் பலருக்கும் கை முதலில் செல்லும். நோய்க்கே சர்க்கரைநோய் என்று இனிப்பாகப் பெயர் வைத்திருக்கிறோம்.

இனிப்புகள்
இனிப்புகள்
சர்க்கரை நோய்... குடும்பங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! #WorldDiabetesDay

இந்நிலையில், மருத்துவரீதியாகப் பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரையின் அளவைக் காட்டிலும் கூடுதலான அளவு சர்க்கரையை, மெட்ரோ நகரங்களில் வாழும் பெண்கள் எடுத்துக்கொள்கின்றனர் என்ற ஓர் ஆய்வு முடிவு, சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆகியவை இணைந்து, இந்தியாவின் முக்கிய ஏழு மெட்ரோ நகரங்களில் ஆய்வு நடத்தியுள்ளன. அதில், மும்பைவாசிகள்தான் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிடக் கூடுதல் சர்க்கரையை (Added sugar) அதிகளவில் எடுத்துக்கொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

உடல் பருமன்
உடல் பருமன்
டைப் 2 சர்க்கரை நோயை இளம் வயதிலேயே கண்டுபிடிக்கலாம்... ஆய்வு சொல்வது என்ன?

அதென்ன கூடுதல் சர்க்கரை?

உணவுப்பொருள்கள் தயாரிப்பின்போது சேர்க்கப்படும் சர்க்கரையே கூடுதல் சர்க்கரையாகும். அதாவது, ஃப்ரூட் சாலட் சாப்பிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பழங்களில் காணப்படும் இயற்கையான இனிப்பைக்காட்டிலும் அதில் ஐஸ்க்ரீம், தேன், சாக்கோ சிப்ஸ், சிரப் எனக் கூடுதல் இனிப்புள்ள டாப்பிங்ஸ் சேர்த்துச் சாப்பிடுவதுதான் கூடுதல் சர்க்கரை. அதேபோன்று உணவுப்பொருள் தயாரிப்பின்போது சுவைக்காக கூடுதலாகச் சேர்க்கப்படும் இனிப்பும் இந்தப் பட்டியலில் வரும். கார்பனேட்டட் குளிர்பானங்கள், இனிப்பு வகைகள் முதல் தயிர்வரை பல உணவுப் பொருள்களில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.

டைப் 3 சர்க்கரை நோய் எதுவென்று தெரியுமா? முதியவர்களுக்கு ஓர் அலர்ட்! #InternationalAlzheimersDay

அந்த வகையில் மும்பைவாசிகள் ஒரு நாளைக்கு 26.3 கிராம் கூடுதல் சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். அகமதாபாத்வாசிகள் 25.9 கிராம், தில்லிவாசிகள் 23.2 கிராம், பெங்களூர்வாசிகள் 19.3 கிராம், கொல்கத்தாவாசிகள் 17.1 கிராம், சென்னைவாசிகள் 16.1 கிராம், ஹைதராபாத்வாசிகள் 15.5 கிராம் என, கூடுதல் சர்க்கரையை சேர்த்துக்கொள்கிறார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, குழந்தைகள்தான் அதிக அளவில் இனிப்பு வகைகளைச் சாப்பிடுவார்கள் என்று நினைப்போம். அது, இந்த ஆய்வில் தவறென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு புள்ளிவிபரம்
ஆய்வு புள்ளிவிபரம்

அதாவது, 36 முதல் 59 வயதுக்குட்பட்ட பெரியவர்கள்தாம் குழந்தைகளைக்காட்டிலும் அதிகமாகக் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிடுகின்றனர்.

அதேபோன்று, ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக இனிப்பை விரும்பி உண்கிறார்களாம். சராசரியாகப் பெண்கள் ஒருநாளைக்கு 20.2 கிராம், ஆண்கள் 18.7 கிராம் கூடுதல் சர்க்கரையைச் சாப்பிடுகிறார்கள்.

உணவில் கூடுதல் சர்க்கரை சேர்த்துக்கொண்டால் என்னென்ன பாதிப்புகள் விளையும் என்றும், கூடுதல் சர்க்கரை பயன்பாட்டைத் தவிர்ப்பது எப்படி என்றும் விளக்குகிறார் உணவியல் நிபுணர் நிஷா.

உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள்... நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு ஓர் அலெர்ட்!

கூடுதல் சர்க்கரை ஆபத்தா?

''கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப்பொருள்கள் ஆரோக்கியமானவை அல்ல. அவற்றில் சேர்க்கப்படும் இனிப்பு என்பது, பலமுறை செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளைச் சர்க்கரைதான். நாம் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க உடல் பருமன் ஏற்படும். உடல் பருமன்தான் இதயநோய், புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற பல தொற்றா நோய்களின் காரணியாக விளங்குகிறது. 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்கூட சர்க்கரைநோயால் பாதிக்கப்படுவது கூடுதல் சர்க்கரையின் விளைவால்தான். சர்க்கரையை அதிகமாகச் சேர்த்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ஒரு நபர் ஒருநாளைக்கு அதிகபட்சம் 100 கிராம் சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம். அதற்குமேல் சாப்பிடும் அனைத்தையுமே கூடுதல் சர்க்கரையாகவே கருத வேண்டும்.

நிஷா
நிஷா
தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது ஆனால்,..? - குழந்தைகளைத் தாக்கும் டைப்-1 சர்க்கரைநோய்

சர்க்கரை என்றால் நேரடியாக வெள்ளைச் சர்க்கரையைச் சேர்ப்பது என்றுதான் பலரும் தவறாக நினைக்கின்றனர். ஆனால், நமக்குத் தெரியாமலேயே பல உணவுப் பொருள்களின் மூலம் இனிப்பு உடலில் சேருகிறது. உதாரணத்துக்கு காலையில் குடிக்கும் எனர்ஜி பானத்துக்கான பொடியில் ஏற்கெனவே சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். அதில் சர்க்கரை சேர்க்காமல் வெறும் பால் சேர்த்துக் குடித்தாலே போதுமானது. ஆனால், நாம் அதில் மேலும் சர்க்கரை சேர்த்துக் குடிப்போம். இதுபோன்று காலை முதல் இரவு வரை பல்வேறு வகையில் இனிப்பு உடலில் சேருகிறது.

அளவுக்கு அதிகமான இனிப்பை உணவில் சேர்க்கும்போது உடல் பருமன், சர்க்கரை நோய், இதயநோய், கொழுப்பு, கல்லீரல் பிரச்னை, உடல் ஆற்றல் குறைவது என உடல் சார்ந்த பிரச்னைகள் தொடங்கி உளவியல் பிரச்னையான மனஅழுத்தம் வரை உருவாக்கும் அபாயம் உள்ளது.

கூடுதல் சர்க்கரையைத் தவிர்க்க உணவில் கவனம் செலுத்த வேண்டும். காரமான துரித உணவுகள், நொறுக்குத்தீனிகளில்கூட கார சுவையை மெருகேற்றிக் காட்டுவதற்காக இனிப்பு சேர்க்கப்படும். அதனால் அதுபோன்ற உணவைத் தவிர்த்துவிட வேண்டும். பழச்சாறுகளை இயற்கை இனிப்போடு அருந்தப் பழகிக்கொள்ள வேண்டும். உணவு தவிர, நாம் சாப்பிடும் கேக், பிஸ்கெட் போன்ற அனைத்துத் தின்பண்டங்களும் கூடுதல் சர்க்கரை வகைதான். எனவே, எச்சரிக்கையுணர்வுடன் இவற்றையெல்லாம் தவிர்த்துவிட வேண்டும்" என்றவர், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் இனிப்பு சாப்பிடும் காரணத்தையும் தெரிவித்தார்.

சாக்லெட்
சாக்லெட்
`செல்லப் பிராணிகளே பெட்டர்!' -பெண்களின் தூக்கத்துக்கு ஆய்வுகள் சொல்வது என்ன?

''பொதுவாகவே பெண்களுக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்ற இனிப்பு வகைகள் அதிகம் பிடிக்கும் என்பது உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சோகமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் பெண்கள் சாக்லேட் சாப்பிடுவதுண்டு. மதிய உணவுக்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவது, அலுவலகத்தில் வாயில் சாக்லேட்டை அதக்கிக்கொண்டே பணியாற்றுவது எனப் பெண்கள் எப்போதுமே ஸ்வீட்டுக்கு ஆதரவாளர்கள்தாம்" என்கிறார் நிஷா.