Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் அதிகம் சாப்பிடுவீர்கள்!

எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
எடைக்குறைப்பு

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் அதிகம் சாப்பிடுவீர்கள்!

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

Published:Updated:
எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
எடைக்குறைப்பு

வினா நூறும் கனா நூறுமாக திருமண வாழ்க்கைக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர் களுக்குத்தான் இந்த அத்தியாயம். திருமண நாள் குறித்த பிறகு அவசர கதியில் எடையைக் குறைக்க ஜிம்மையும் ஸ்லிம்மிங் சென்டர்களையும் தேடி ஓடும் ஆண், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எடைக்குறைப்பு என்பது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கிற மாதிரியான விஷயமல்ல. அதற்கென திட்டமிடலும் மெனக்கெடலும் அவசியம். அதிலும் திருமணத்துக்குத் தயாராகும் பெண்களும் ஆண்களும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். எடைக்குறைப்பை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், கூடவே சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தையும் கவனத்தில்கொண்டே திட்டங்களிலும் முயற்சிகளிலும் இறங்க வேண்டும். மணநாளன்று மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் நீங்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆலோசனைகள் சில...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரோக்கியமான எடைக்குறைப்புக்குத் தயாராகுங்கள்!

எக்ஸ்ட்ராவாக உள்ள சில கிலோ எடையை உதறித்தள்ளிவிட்டு சிக்கெனத் தோற்றமளிக்க விரும்புகிறீர்களா? திருமணம் போன்ற முக்கிய நாளில் சரியான எடையுடன் காட்சியளிக்க நினைப்பவர்கள் கடைசி நிமிடத்தில் அதற்கான தீர்வைத் தேடி ஓடுவது சரியானதல்ல. எத்தனை கிலோ எடையைக் குறைக்க நினைக்கிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். அதைக் குறைக்க குறுக்கு வழிகளைத் தேடாமல், சரியான வழியை நாடுங்கள். எடையைக் குறைக்க நினைப்போர், குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பிருந்தாவது அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும், அதுவும் நிபுணர்களின் சரியான வழிகாட்டுதலோடு. விரைவில் எடையைக் குறைக்க உதவுவதாகச் சொல்லப்படுகிற கிராஷ் டயட் முறைகளையோ, திடீர் எடைக் குறைப்பு திட்டங்களையோ பின்பற்றுவதால்,உடலில் நீர்ச்சத்து மற்றும் தசையிழப்பு ஏற்பட்டு, பொலிவற்ற, ஆரோக்கியமற்ற தோற்றத்தை அவை ஏற்படுத்தும்.

பளபளக்கும் சருமத்துக்கு என்ன சாப்பிடலாம்?

சருமத்தின் பளபளப்பும் இளமையும் வெளிப்பூச்சுகளில் இல்லை. நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு வாய் உணவும்தான் சரும அழகைத் தீர்மானிக் கிறது. நீங்கள் சாப்பிடும் உணவைச் சரிசெய்வதன் மூலம் சருமம் மற்றும் கூந்தல் அழகைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் அதிகம் சாப்பிடுவீர்கள்!

ஜங்க் உணவுகளைத் தவிர்க்கவும். எண்ணெ யில் பொரித்த, வறுத்த உணவுகளுக்கும், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சேர்த்த உணவுகளுக்கும் நோ சொல்லுங்கள்.

கூடியவரையில் எல்லா நிறக் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடுங்கள். அப்போதுதான் அனைத்து வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும். தக்காளி, சிவப்பு குடமிளகாய், கேரட், கீரை போன்று கேரட்டினாய்டு அதிக முள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை சரும அழகை மேம்படுத்தும்.

சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட மாவு உணவுகளைத் தவிர்க்கவும். சிறுதானியங்கள், பழுப்பு அரிசி, கீன்வா போன்ற முழுத்தானியங்களைச் சேர்த்துக் கொள்ளவும். டோஃபு, பருப்பு வகைகள், முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றை ஓரளவு சேர்த்துக் கொள்ளவும். நல்ல கொழுப்புள்ள அவகேடோ, தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை சிறிய அளவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். புரதமும் கொழுப்பும் உள்ள உணவுகள் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, அதிகம் சாப்பிடுவதையும், உணவுத் தேடலையும் தவிர்க்கும். ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பதில் அது மிக முக்கியம்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் அதிகம் சாப்பிடுவீர்கள்!

சருமம் மற்றும் கூந்தல் அழகுக்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிக முக்கியம். வயிற்று உப்புசத்தையும் தடுக்கும். சாலமன் வகை மீன், வால்நட்ஸ், சியா சீட்ஸ் மற்றும் ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால் இவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

குடலிடம் நட்புகொள்ளுங்கள்

திருமண நாளன்று உங்கள் அகமும் புறமும் அழகாக இருக்க குடல் ஆரோக்கியம் மிக முக்கியம். உங்களுக்கு பால் அல்லது குளூட்டன் அலர்ஜி இருந்தால் அவற்றைத் தவிர்க்கவும். ஒவ்வாத அந்த உணவுகள் உங்கள் வயிற்றைத் தொந்தரவு செய்து, வாய்வுத் தொல்லை, உப்புசம், ஏப்பம், அடிக்கடி மலம் கழித்தல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இவை எல்லாம் திருமண நாளன்று உங்களைப் பொலிவிழக்கச் செய்யும். கோதுமை, ஓட்ஸ், பார்லி, மல்ட்டிகிரெயின் ஆட்டா, குக்கீஸ், கிரானோலா பார், பிஸ்கட்டுகள், ரஸ்க் போன்றவற்றில் குளூட்டன் இருக்கும். சிறுதானியங்கள், கீன்வா, கடலைமாவு போன்றவற்றில் தயாராகும் உணவுகளில் குளூட்டன் இருக்காது. புரோபயாடிக் உள்ள தயிர், புளிக்கவைக்கப்பட்ட சில உணவுகள், ப்ரீபயாடிக் உள்ள வெங்காயம், வாழைப்பழம், முழுத்தானியங்கள் போன்றவை வயிற்று உப்புசத்தைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உப்பு ரொம்ப தப்பு!

திருமண நாளன்று போட்டோவிலும் வீடியோவிலும் சூப்பராகத் தெரிய வேண்டுமா? உப்பு சேர்த்த ஊறுகாய், சிப்ஸ், முறுக்கு, மிக்ஸர், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு விடை கொடுங்கள். இந்த உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு, உடலில் நீர் சேர்வதை அதிகரிக்கும். அதனால் முகம் உப்பும். வயிற்று உப்புசம், உடல் வீக்கம் போன்றவையும் ஏற்படும். உப்பு சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பதோடு, வெளியிடங்களில் உணவு உண்பதையும் தவிருங்கள். வெளி உணவுகளில் சோடியம் அளவு அதிகமாக இருக்கும்.

ஸ்மார்ட்டாக அருந்துங்கள்

உங்கள் சருமம் அழகாக, பளபளப்பாக இருக்கவும், உடல் உப்புசம் இல்லாமலிருக்கவும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். நிறைய திரவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலிலுள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளபளக்கும். தண்ணீர், இளநீர், நன்னாரி சர்பத், எலுமிச்சைச் சாறு, ஃபிரெஷ் பழச்சாறுகள், கற்றாழை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், துளசி கஷாயம் போன்றவற்றை அருந்தலாம். கார்பனேட்டடு பானங்களையும் ஆல்கஹால் கலந்த பானங்களையும் தவிர்க்கவும். அவை உடல் உப்புசத்தை ஏற்படுத்தும்.

ஸ்லிம்மாக இருக்க ஜம்மென தூங்குங்கள்!

திருமண நாள் நெருங்க நெருங்க தூக்கம் தடைப்படுவது இயல்பே. சரியான எடையைத் தக்கவைப்பதில் நல்ல தூக்கத்துக்கு முக்கிய பங்குண்டு. தூக்கம் பாதிக்கப்பட்டால் அட்ரீனல் சுரப்பியிலுள்ள கார்டிசால் ஹார்மோன் அதிகரித்து, பசி உணர்வை பாதிக்கும். சர்க்கரை, கார்போஹைட்ரேட் உணவுகளின் மீதான தேடலை அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகும் புத்துணர்வு இருக்காது. தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எடைக்குறைப்பு
எடைக்குறைப்பு

10 மணிக்கு உறங்கச் சென்று காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் உடல் மற்றும் மனம் இரண்டும் தம்மைப் பழுதுபார்த்துக் கொள்வதற்கான சரியான நேரம். கார்டிசால் ஹார்மோன் அளவும் குறைவாக இருக்கும், அதனால் உணவுத் தேடலும் குறையும்.

காபி, டீ - அளவோடு இருக்கட்டும்...

காபி, டீ இல்லாமல் ஒருநாள்கூட உயிர்வாழ முடியாது பலராலும். ஆனால் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ளும் காபியின் அளவு அதிகரித்தால், அது தூக்க சுழற்சியை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக உணவுத் தேடல் அதிகரிக்கும். அளவுக்கதிக டீ இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவதைத் தடுத்து, ரத்தச்சோகைக்கு காரணமாகும். அது திருமண நாளன்று சீரியஸான பல பிரச்னைகளை உருவாக்கும். மணப்பெண்கள் அன்றைய தினம் அதிக களைப்பாக, எனர்ஜியே இல்லாமல், படபடப்புடனும், முகம் வெளிறியும் காணப்படுவார்கள்.

ஸ்ட்ரெஸ்ஸும் அதிக உணவும்

திருமணத்துக்குத் தயாராவதென்பது அதிகபட்ச ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துகிற விஷயம். ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் அதிகம் சாப்பிடத் தோன்றும். அதுவும் தவறான உணவுகளைச் சாப்பிடத் தூண்டும். அதன் தொடர்ச்சியாக எடை அதிகரிக்கும். திருமணத்துக்காக ஆசை ஆசையாகத் தைத்த உடைகள் உடலில் ஏறாமல் போகலாம். அதிக கலோரிகள் கொண்ட உணவுகளைத் தவிர்த்து சாலட், சூப், பழங்கள், நட்ஸ், சீட்ஸ், முட்டை போன்றவற்றைச் சாப்பிடவும்.

அளவுகளில் கவனம் இருக்கட்டும்

இந்திய கலாசாரத்தில் திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் சகஜம். இனிப்புகள், வறுத்த, பொரித்த உணவுகள், சாக்லேட், கேக் என பிரமாண்ட விருந்துகளுக்குக் குறையிருக்காது.

எடைக்குறைப்பு
எடைக்குறைப்பு

இவற்றையெல்லாம் தவிர்த்தால் யார், என்ன நினைப்பார்களோ என்ற தர்மசங்கடம் மணப்பெண்களுக்கு இருக்கும். தவிர்க்க முடியாவிட்டாலும் குறைத்துக் கொள்ளலாம். அளவு தாண்டும்போது அது திருமண நாளன்று தலைவலி, முக வீக்கம், வயிற்று உப்புசம் எனப் பல வழிகளில் பிரதிபலிக்கும்.

மணப்பெண்களுக்கான எடைக்குறைப்பு பிளான்

  • நாட்டுக்காய்கறிகளை, கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். உங்கள் தட்டில் பாதியளவு காய்கறிகளால் நிரம்பியிருக்க வேண்டும். புரதத் தேவைக்காக கால் பங்கு பருப்பு அல்லது அசைவ உணவுகளும், மீதி கால் பங்கு அரிசி அல்லது சிறுதானிய உணவுகள், சப்பாத்தி அல்லது கோதுமை உப்புமா என இருக்கட்டும்.

  • முழுத் தானியங்கள், நட்ஸ், முட்டை, மீன் மற்றும் கோழி இறைச்சி

  • 1கேமமைல் அல்லது லேவண்டர் டீ (படுக்கைக்குச் செல்லும் முன்)

  • சர்க்கரை மற்றும் மாவுச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

  • தூங்குவதற்கு 6 மணி நேரம் முன்பு கஃபைன் கலந்த பானங்களைத் தவிர்க்கவும்.

- நம்மால் முடியும்!