சைவ உணவுக்காரர்களுக்கு எடைக்குறைப்பு முயற்சிகளில் உள்ள சவால்கள், சிரமங்கள் பற்றிக் கடந்த இதழில் பேசியிருந்தேன்.

அவர்கள் எடைக் குறைப்புக்கான முயற்சிகளைத் தொடங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த இதழில் பார்ப்போம்.

முதலில் உங்கள் உடல், அதாவது குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளைப் பட்டியலிடுங்கள். உதாரணத்துக்கு வாயுத் தொந்தரவை ஏற்படுத்தும் உணவுகள், வயிற்று உப்புசம், ஏப்பம் போன்றவற்றை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்கலாம். குறிப்பிட்ட சில உணவுகளை உண்ணும்போது களைப்பு, மனநிலையில் மாற்றங்கள் போன்றவை ஏற்பட்டால் அந்த உணவுகளும் உங்களுக்குப் பொருத்தமற்றவை என்று புரிந்துகொள்ள வேண்டும். உடல் சொல்வதைக் கேட்டு, அதற்கேற்ப உணவுகளைத் தேர்வு செய்யுங்கள்.

க்ளூட்டன் நிறைந்த மற்றும் பால் உணவுகள் இரண்டும் இதற்கு உதாரணங்கள். அத்தகைய உணவுகளில் கவனம் இருக்கட்டும்.

உணவில் காய்கறி, பழங்களை எப்படி யெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம் என யோசியுங்கள். எப்படித் தயாரித்தால், எந்த வடிவத்தில் சாப்பிட்டால் உங்கள் உடல் அதை ஏற்றுக்கொள்ளும் என்று பாருங்கள். அதற்கேற்ப தினமும் 500 கிராம் அளவுக்கு சமைத்த காய்கறிகள் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.சூப், பொரியல், சாலட், வேகவைத்தவை, சில துளி எண்ணெயில் லேசாக வதக்கியவை, ஸ்டிர் ஃப்ரை செய்தவை, சாதத்துடன் சேர்த்து டாஸ் செய்தவை அல்லது 70 சதவிகிதம் காய்கறிகள் சேர்த்த வெஜிடபிள் ரைஸ்... இப்படி ஏதேனும் வழிகளில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான நுண்ணூட்டங்களும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டும் உடலில் சேரும்.

தினசரி உங்களுக்குத் தேவைப்படும் புரதத்தை மூன்று வேளை உணவுகளில் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். காய்கறிகளின் அளவை அதிகரிக்கும்போது கூடவே புரதமும் சரியான அளவுக்கு எடுத்துக் கொள்கிறீர்களா என்று பாருங்கள். உடலின் ஒவ்வொரு கிலோ எடைக்கும் ஒரு கிராம் அளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது கணக்கு. 50 கிலோ எடை கொண்ட ஒருவர் தினமும் 50 கிராம் அளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரதம் ஏன் அவ்வளவு முக்கியம்?

தசைகளின் வளர்ச்சிக்கு அதுதான் அடிப்படை. ஆன்டிபாடி, ஹார்மோன்கள் மற்றும் என்ஸைம்களின் சுரப்புக்கும் தேவை.

பழைய செல்களைப் பழுதுபார்த்து, புதிய செல்களை உருவாக்க புரதம் தேவை. சருமத்தைத் தொய்வின்றி காக்கும் கொலாஜனை சப்போர்ட் செய்து, இளமைத் தோற்றத்துக்கும் உதவும்.

நோய் எதிர்ப்புத் திறனுக்கு அவசியம். (குறிப்பாக கொரோனா காலத்தில்) சருமம், நகங்கள் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை.

எடையைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்ப துடன், தசைகளின் வளர்ச்சிக்கு உதவி, கொழுப்பைக் கரைப்பதில் உடலுக்கு உதவுகிறது.

சைவ உணவின் சிறப்பு களைப் பற்றிப் பேசும்போது, கூடவே பொதுவான சில பிரச்னைகளைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான ஊட்டங் களைக் கொண்டிருந்தாலும், இவற்றில் உள்ள பைலேட், ஆக்ஸலேட், லெக்டின் போன்ற சில ஊட்டங்கள் நுண்ணூட்டங்களை முழுமையாக கிரகிக்க விடாமலும் செய்கின்றன. எனவே, ஊட்டத்தேவைக்காக எந்த அளவு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதிலும் ஒரு தெளிவு அவசியம்.

உணவு ஒவ்வாமை மற்றும் சகிப்புத் தன்மையின்மை இரண்டும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். ஏற்கெனவே சொன்னதுபோல இந்தப் பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவற்றை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

FODMAP பற்றித் தெரியுமா?

Fermentable Oligo, Di Monosaccharides And Polyols என்பதன் சுருக்கமே FODMAP, தாவர உணவுகளில் FODMAP-ன் அளவு அதிகமாக இருக்கும். FODMAP என்பது ஒருவகையான கார்போஹைட்ரேட் சங்கிலித்தொடர். காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு என சைவ உணவுகள் அனைத்திலும் இருப்பது. வயிற்று உப்புசம், தசைப்பிடிப்பு, வயிற்றுவலி, அசாதாரண குடல் இயக்கம் (வயிற்றுப்போக்கு), இரிடபுள் பவல் சிண்ட்ரோம் போன்ற பல பிரச்னைகளுக்கு இது காரணமாகலாம்.

குறிப்பாக, சிலருக்கு குறிப்பிட்ட சில நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளும்போது சந்திக்கிற அசாதாரண உணர்வுக்குக் காரணமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

நாம் எடுத்துக்கொள்ளும் புரதத்தின் தன்மை மற்றும் அது ரத்தத்தில் கலக்கும் அளவு ஆகியவற்றிலும் தெளிவு வேண்டும். அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறும் திட்டத்திலிருக்கிறீர்கள் என்றால், அசைவத்துக்கு இணையாக சைவத்திலிருந்து அனைத்து ஊட்டங்களையும் பெற உங்கள் உணவின் அளவுகளை அதிகரிக்க வேண்டியிருக்கும்.

அசைவத்தில் சிறு அளவின் மூலமே அந்த ஊட்டங்கள் கிடைத்துவிடும். சைவமோ, அசைவமோ, வீகனோ... எந்த வகை உணவுப் பழக்கத்துக்கும் சாதக பாதகங்கள் இருக்கும். அவற்றை அறிந்து ஊட்டச்சத்து ஆலோசகரின் வழிகாட்டுதலோடு உங்களுக்கான டயட் பிளானைத் தேர்வு செய்வதுதான் சரி.

(நம்மால் முடியும்...)