Published:Updated:

அடங்காத வைரஸையும் முடக்கும் `பாட்டு வாத்தியார்' இந்த ஆடாதொடை! - மூலிகை ரகசியம் - 4

ஆடாதொடை

தெரியுமா, `ஆடாதொடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழிகூட உண்டு! தினமும் சிறிது ஆடாதொடை இலையை அரைத்து, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து சுவைத்து வர, தொண்டையில் உண்டாகும் கரகரப்பு, சளி போன்றவை நீங்கி இனிமையான குரல் வளம் உண்டாகும்.

அடங்காத வைரஸையும் முடக்கும் `பாட்டு வாத்தியார்' இந்த ஆடாதொடை! - மூலிகை ரகசியம் - 4

தெரியுமா, `ஆடாதொடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழிகூட உண்டு! தினமும் சிறிது ஆடாதொடை இலையை அரைத்து, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து சுவைத்து வர, தொண்டையில் உண்டாகும் கரகரப்பு, சளி போன்றவை நீங்கி இனிமையான குரல் வளம் உண்டாகும்.

Published:Updated:
ஆடாதொடை

மனிதர்களில் பாட்டு வாத்தியாரை நிச்சயம் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதைப் போல மூலிகைகளில் பாட்டு வாத்தியாரை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா! `மூலிகைப் பாட்டு வாத்தியாரா… மூலிகைகள் பாட்டுகூட சொல்லிக்கொடுக்குமா…’ என்று யோசனையில் ஆழ்ந்துவிட்டீர்களா! வாருங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாட்டு வாத்தியாரை சந்திக்கலாம்.

சிறந்த பாடகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா..! அழகான குரல் வளத்துக்கு ஆசைப்படும் உங்களுக்குத் தெரிந்த இளம் பாடகர்களுக்கு வழிவகை சொல்ல நினைக்கிறீர்களா! ஆம் என்றால் நீங்களும் பயன்படுத்தி உங்கள் தோழர்களுக்கும் பரிந்துரைக்க வேண்டிய அற்புத மூலிகை ஆடாதொடை! அதாவது நம்ம பாட்டு வாத்தியார் ஆடாதொடை!

தெரியுமா, `ஆடாதொடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழிகூட உண்டு! தினமும் சிறிது ஆடாதொடை இலையை அரைத்து, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து சுவைத்து வர, தொண்டையில் உண்டாகும் கரகரப்பு, சளி போன்றவை நீங்கி இனிமையான குரல் வளம் உண்டாகும். இந்த மருத்துவ காரணத்தை மையப்படுத்தியே மேற்சொன்ன பழமொழி உருவாகியிருக்கிறது. அதாவது, தொண்டைப் பகுதியில் ஏற்படும் கிருமித்தொற்றை சரிசெய்து, பாதிக்கப்பட்ட குரல்வளத்தை மீட்டெடுக்கும் சக்தி ஆடாதொடைக்கு இருக்கிறது.

ஆடாதொடை
ஆடாதொடை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடாதொடையின் பலன்களை அறிந்த பாடகர்கள், தங்கள் குரல் வளத்தை மெருகேற்ற அவ்வப்போது ஆடாதொடையைப் பயன்படுத்துவார்களாம். பாடகர்களின் தந்திரத்தை உங்களுக்கும் சொல்லியாச்சு! வருங்காலத்தில் சூப்பர் சிங்கர்களாக உருமாற அன்பு வாழ்த்துகள்! `ஆடாதொடை மணப்பாகு’ எனும் இனிப்பு மருந்தைப் பயன்படுத்த, உங்கள் குரல் நாணிலிருந்து வெளிவரும் அனைத்துப் பாடல்களும் கேட்போருக்கு இனிமையைக் கொடுக்கும்.

ஆடாதொடைக்கான பெயர்க்காரணத்தை அறிந்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சர்யம் அடைவீர்கள்! ஆடாதொடையின் பெயருக்கும், ஆடுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு தெரியுமா! அதாவது ஆடாதொடை இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்ற காரணத்தால் `ஆடுதொடா’ என்ற காரணப்பெயர் உருவாகி, ஆடாதொடை எனும் பெயராக மருவியிருக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரத்தத் தட்டணுக்களை அதிகரிக்கும்:

கொசுக்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, டெங்கு சுரத்தைப் பற்றித் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ரத்தத் தட்டுகளின் (Platelets) எண்ணிக்கை குறைவதுதான் டெங்கு சுரத்தில் ஏற்படும் முக்கியமான பாதிப்பு என்பது உங்களில் நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் போது, பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல், உடல் முழுவதும் சிவந்த நிறமுள்ள புள்ளிகள் தோன்றல் போன்ற குறிகுணங்கள் ஏற்படும். டெங்கு சுரத்தில் குறையும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை ஆடாதொடையின் இலைகளுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுரத்தைக் குறைப்பது, ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சளி, இருமல், சுர நோய்களை விரட்டி அடிப்பது என முழுமையான மூலிகை நாயகனாகத் திகழ்பவர் நம்ம ஆடாதொடை! ஒன்று அல்லது இரண்டு ஆடாதொடை இலைகளை மையாக அரைத்து, சுத்தமான தேன் கலந்து உட்கொள்ள மேற்குறிப்பிட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும். ஆடாதொடை இலைச் சாற்றில் சில சொட்டுகள் தேன் கலந்து ருசியான மருந்தாகவும் பருகலாம்.

ஆடாதொடை
ஆடாதொடை

கசப்பின் இனிமை:

கசப்புத் தன்மை மிகுந்திருப்பதால், ஆடாதொடை இலைகளை சுவைமிக்க டானிக், குடிநீர் போன்ற வடிவங்களில் எடுத்துக் கொள்ளலாம். ஆடாதொடையை அடிக்கடி பயன்படுத்துபவர் களிடம், குடற்புழுக்களின் ஆட்டம் வேலைக்கு ஆகாது. இலைகளின் கசப்புத் தன்மையால் நுண்கிருமிகளுக்கு வாழ்க்கையே கசந்துவிடும். இலைகளில் கசப்புச் சுவை நிறைதொடை என்பதை நீங்கள் போகப் போக உணர்வீர்கள்!

குருதிப்பெருக்கை நிறுத்த:

மூல நோயில் வடியும் ரத்தம் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தின்போது உண்டாகும் அதிக ரத்தப்போக்கைத் தடுப்பதற்கு ஆடாதொடை இலைகளை அரைத்து நல்லெண்ணெயில் கலந்து சாப்பிடலாம். அதிக குருதிப்பெருக்கைத் தடுக்கும் திறன் ஆடாதொடைக்கு உண்டு. தவறான வாழ்க்கை முறை காரணமாக சமீப காலங்களில் அதிகரித்திருக்கும் ரத்தக் கொதிப்பு எனும் அதிகுருதியழுத்த நோயின் தாக்கத்தையும் ஆடாதொடை குறைக்கும். சித்த மருத்துவத்தில் ஆடாதொடை குடிநீர், ஆடாதொடை மணப்பாகு போன்ற மருந்துகள் பிரசித்திபெற்றவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாத்தா பாட்டிகளுக்கு:

இலையைக் காயவைத்து சுருட்டி நெருப்பிட்டு, அதிலிருந்து வரும் புகையை இழுக்க கெட்டிப்பட்ட சளி இளகி வெளியேறும். உடலில் உண்டாகும் தசைப்பிடிப்பை நீக்கும் தன்மை கொண்டது ஆடாதொடை. இதன் இலைகளை விளக்கெண்ணெயில் லேசாக வதக்கி தசைப்பிடிப்பிருக்கும் இடங்களில் ஒற்றடம் கொடுக்கலாம். வீக்கத்தைக் கரைக்கும் திறன் இருப்பதால் மூட்டுகளில் உண்டாகும் வீக்கங்களைக் கரைக்க அவ்விடத்தில் இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி பற்று போடலாம். மேற்சொன்ன குறிப்புகளை வீட்டிலிருக்கும் தாத்தா பாட்டிகளுக்கு பரிந்துரை செய்யுங்கள். ஆடாதொடையின் மூலம் அவர்களும் பயன் அடையட்டுமே!

நுரையீரல் பாதையைத் தூய்மையாக்கும்:

காரணமன்றி சளி, இருமல், சுரம் உங்களை அடிக்கடி தொந்தரவு செய்கிறதென்றால், ஆடாதொடையின் துணையை நாடுங்கள். பின் சளி, இருமல், சுரம் போன்ற எதிரிகளைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியமிருக்காது. நெடுங்காலமாக நுரையீரல் பாதை தொற்றுகளைப் போக்குவதில் ஆடாதொடை முக்கியப் பங்கு வகிக்கிறது. தொண்டையில் உண்டாகும் கரகரப்பையும் ஆடாதொடை சேர்ந்த மருந்துகள் இதமாக்கும்.

ஆடாதொடை
ஆடாதொடை

நவீன மருத்துவத்தில் சளி, இருமலைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் சிரப்களில் உள்ள மூலப்பொருளின் பெயர் ‘Bromhexine.’ இந்த கோழையகற்றி செய்கையுடைய Bromhexine, எதிலிருந்து பிரிதெடுக்கப்படுகிறது தெரியுமா? ஆடாதொடை இலைகளில் மறைந்திருக்கும் `Vasicine’ எனும் வேதிப்பொருளிலிருந்துதான். `Vasicine’ எனும் வேதிப்பொருளுக்கு நுரையீரல் பாதையை விரிவடையச் செய்யும் செய்கை இருக்கிறது என்பது கூடுதல் தகவல். காசநோய் சார்ந்த மருத்துவ ஆய்வில், ஆடாதொடையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வேதிப்பொருள்கள் சிறப்பாக வேலை செய்வதாகத் தெரியவந்துள்ளது.

மலேரியா போக்கும்:

தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் ஆடாதொடை இலைகளை `மலேரியா’ சுரத்துக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்களாம். குருதியில் இருக்கும் அசுத்தங்களை தூய்மை செய்து, சரும நோய்களைப் போக்கும் தன்மையும் ஆடாதொடைக்கு உண்டு. கொசுக்களை விரட்டுவதற்காகத் தயாரிக்கப்படும் மூலிகைக் கலவைகளில் ஆடாதொடை இலைகளையும் சேர்த்து புகைக்க கொசுக்கள் மயங்கி விழுவதை நீங்களே பார்க்கலாம்.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

உலர்ந்த இலைகள்:

முடிந்தால் ஆடாதொடை இலைகளை செடியிலிருந்து நேரடியாக பறித்துப் பயன்படுத்துங்கள். இல்லையெனில், இலைகளை உலரவைத்து பொடித்து வைத்துக்கொண்டு அவசியம் ஏற்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆடாதொடையின் சிறு தண்டுகளை மண்ணில் சரிவாகப் புதைத்து நீர் ஊற்றினாலே, விரைவில் மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் பெருஞ்செடியாக உங்கள் தோளுக்கு மேல் வளர்ந்துவிடும்.

கிராமங்களுக்குச் செல்லும்போது, ஆங்காங்கே ஆடாதொடை செடிகள் வளர்ந்திருப்பதை இனி தவறாமல் கவனியுங்கள். முற்காலங்களில் வேலிப்பயிராகவும் ஆடாதொடை பயன்பட்டிருக்கிறது. அதாவது விவசாய நிலத்திற்கான வேலியாக ஆடாதொடை செடிகள் நின்றிருக்கின்றன!

தாவரவியல் பெயர்:

Adhatoda vasica

குடும்பம்:

Acanthaceae

கண்டறிதல்:

பசுமை மாறா புதர்ச் செடிவகை. தெளிவான கணு மற்றும் கணுவிடைப் பகுதி கொண்ட தாவரம். மாவிலை, நுணாவிலை போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். ஸ்பைக் வகை மஞ்சரி. வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும்.

தாவரவேதிப் பொருள்கள்:

Vasicine, Vasicinol, Tannins, Saponins.

ஆடாதொடை… குரல் வளத்தை அதிகரிக்கும் அன்புத் தோழன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism